மின்னிதழ் செப்டம்பர் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh september 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்: லட்சுமி நாராயணன்

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

கொங்கு வட்டார வழக்கில் எழுதிய கொங்கு சமையல்

சைந்தவியின் நினைவுகள் - சிறுகதை

எல்லோருடைய வாழ்க்கையிலும் திரும்பி வராத என்று ஏங்கக்கூடிய நாட்கள் என்று ஒன்று உண்டெனில் அது கல்லூரி நாட்களாகத்தான் இருக்கமுடியும். அப்படித்தான் சைந்தவிக்கும், எதோ சில காரணங்களால் தனது தோழிகளை பிரியா நேரிட்டது,வெகு நாட்கள் கழிந்துவிட்டது,இன்று தனது தோழிகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று சைந்தவி,தனது முக்கிய சந்திப்புகளை எல்லாம் ஒத்திக்குவிட்டு கல்லூரி விழாவில் கலந்துகொள்ள முடிவுசெய்தாள்.

வெள்ளை நிற கார் ஒன்று நுழைவாயிலில் நுழைந்தது…எப்போதும் போல சிரிப்புடன் கார் வந்தவுடன் ஓடி வந்து கதவு நீக்கினார் சுப்பு அண்ணா …’ யாரை பாக்கணும்’னு கண்ணாடியை இறக்கும் முன்னரே குனிந்து கேட்டார்.அவுட்பாஸ்.. என்றதும் “அடடே …நம்ம புள்ள,நல்ல இருக்கியாம்மா என்று நலம் விசாரித்து,”உன்ன வாராவாரம் டிவில பாத்துட்டு தா நாங்கெல்லாம் தூங்கவே போவோம்,நீ பெரியலாகிட்ட இந்த அண்ணனே மறந்துட மாட்டியே என்றவனிடம், அண்ணா.. நீங்க இன்னும் மாறவே இல்ல,உங்கள மறப்பேனா அண்ணா”,என்றாள் சைந்தவி .
“சரி.. சரிம்மா.. நீ நல்லா இருந்தா அது போதும்..போ மா விழா தொடங்க நேரமாச்சு..என்று வழி அனுப்பினான் சுப்பு.. சற்று உள்ளே நுழைந்ததும் அங்கேயே இறங்கி நடக்க தொடங்கியதும்,மரத்தடியில் தோழியின் அம்மா செய்து வரும் அதிரசத்தின் வாசனை, ‘பிடிச்சுக்கோ’ என்ற சத்தம் கேட்டு திரும்பியபோது அங்கிருந்த சாக்கடையில் தனக்கு பிடித்த புத்தகம் விழுந்து கிடந்தது,மேலிருந்து தூக்கிப்போட்ட தோழியை அண்ணாந்து பார்க்க முயன்ற
போது,இன்னொரு தோழி சன்னலில் விழுந்து கொண்டிருந்த மழைநீரை முகத்தில் அடித்தாள்.ஏய் லூசு என்று முகத்தை துடைத்த போது முகத்தில் ஈரமில்லை. சிரித்துக்கொண்டே சற்று முன்னோக்கினால், நீண்ட கூந்தல்,கண்ணாடி என்று அடையாளம் வைத்துக்கொண்டவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாதவாறு மாறிப்போய் இருந்தார்கள்.சிலர் குழந்தையுடன் வந்திருந்தார்கள்,சிலருக்கு திரும்பி பார்க்க நேரமில்லாமல் போட்டோ எடுப்பதில் மும்மரமாய் இருந்தார்கள். சிறிது நேரத்தில் கலையரங்கத்தின் வாசல் அடைந்தபோது, அவளின் முன்னாள் சில காட்சிகள் தோன்றியது.


சில முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.கலையரங்கம் முழுக்க மாணவர்கள் கூடியிருந்தார்கள்.ஆண்டு தோறும் கல்லூரி விழா பற்றிய புத்தகம் வெளியிடுவது வழக்கம். அதில் காலியான பக்கங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் கவிதைகளையும் ஓவியங்களையும்
கொடுத்திருந்தார்கள்.முதலில் வரவேற்புரை தொடங்கியது.அமைதியான அறையில் கணீர் சத்தத்துடன் ஒரு மாணவனின் வாசிப்பு தொடங்கியது.அதே சமயத்தில் கல்லூரி தாளாளர் மேஜையில் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டி கொண்டிருந்தார்.அடுத்த நபராக தாளாளர்
சிறப்புரை வழங்குவதற்க்காக ஒலிபெருக்கியின் அருகே சென்றதும் ,யாரும்மா சைந்தவி என்றார். மாணவர்களுக்குள் என்னாச்சு என்னாச்சு என்ற முனுமுனுப்பு வேறு. குட்டையான உருவத்தில் ஒரு பெண் எழுந்தாள். தோழிகள் கவலையான முகத்துடன் வழிவிட்டு ஒதுங்கினர். ஐயோ எத்தனையோ பேர் இருக்க நம்மை ஏன் அழைக்கிறார்,தன்னுடைய பெயர் எப்படி இவருக்கு தெரியும். ஒரு வேலை தான் தாமதமாக வந்ததை கண்டுபிடித்துவிட்டாரா என்ற கேள்விகள் எல்லாம் யோசித்தவாரே தயக்கத்துடன் மேடையின் அருகில் வரும்போதே …கவிதை சிலவற்றை வாசித்து ‘இவைகள் நீ கொடுத்தவைகளா’ என்றார்.அவர் எதற்காக கேட்டார் என்பது புரியாதவள் ‘ஆம்’ என்றாள்.’மேடைக்கு வா’ என்றார்.மேடையில் பயத்துடன் நின்றவளை தட்டிக்கொடுத்து மிக அழகான வரிகள் என்றார்.

இந்த வருடம் சில பத்ரிக்கைகைகள் கவிதை போட்டி நடத்துவார்கள் அதில் நீ கலந்து கொள்ள வேணும் என்று கூறிவிட்டு ஐநூறு ரூபா ஊக்கிவிப்பு தொகையாக கொடுத்தார். விழா முடிந்து மாலையில் விடுதியில் தோழிகளின் கேளிக்கைகள் அவளை முள்ளாய் குத்தியது.’ஆட்டைய போட்ட கவிதைக்கு பரிசு வாங்கி கெத்தா சுத்திகிட்டு இருக்க’. ஏய்..அவரு இதுக்காகாகத்தான் கூப்பிட்டாருனு எனக்கு தெரியல்ல’, அப்புறம் இது பிரபல எழுத்தாளரின் கவிதை என்று கூற எனக்கு அங்கு பயமாக இருந்தது,

அதனால் பேசாமல் வந்துவிட்டேன் என்றாள் சைந்தவி. ‘சரி.. பரவால்ல விடுடி..,இத சாக்கா வச்சு கேன்டீன் போவோம் வாங்க’ என்று ஆளாளுக்கு நூறு பிரித்தார்கள்.ஏய் போங்கடி இது பரிசு வாங்கின பணம் நா வீண் செலவு செய்ய மாட்டேன் என்று பிடிங்கி நோட்டின் நடு பக்கத்தில் வைத்து கொண்டாள். தோழிகள் ஏய் ரொம்ப தாண்டி பண்ற என்று அங்கலாய்த்து கொண்டார்கள். ஆனாலும் தானும் கவிதை எழுதி, என்னால் முடியும் என இவர்களுக்கு நிரூபித்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மீண்டும் ஒருமுறை சிறப்பு விருந்தினர் வருகைக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, சைந்தவின் தோழி கோமதி மிக அழகாக கோலமிட்டிருந்தாள். கோலம் வரைந்த பின் சைந்தவி உதவிக்காக வண்ணம் போட்டுக்கொண்டிருந்தாள்.கோமதி ஓய்வெடுக்க சற்று ஓரமாக
அமர்ந்திருந்தாள். அந்த நேரத்தில் விழா ஏற்பாடுகளை காண வந்த தாளாளர் சைந்தவி தானே உன் பெயர்,மிக அருமையான கோலம் என்று கூறிவிட்டு படியில் ஏறி சென்றார். அங்கு படிக்கட்டில் அமர்ந்திருந்த கோமதிக்கு கடுப்பானது.வெடுப்பாக எழுந்து ஏண்டி இந்த கோலம் நீ
போட்டதுன்னு நெனச்சு பாராட்டிட்டு போறாரு,நா போடலைனு சொல்ல வேண்டியது தான என்று எரிந்து விழுந்தாள்.ஏய் இல்லடி அவரு யாரு போட்டதுன்னு கேக்கல, நா திரும்பி பார்க்கும் போதே அவரு வேகமா போய்ட்டார் அதா நா சொல்லல என்றவளை கோமதி நம்பியதாய் தோன்றவில்லை. அடுத்த நாளில் நடனம், அன்றும் அதே போலவே பரிசு தேர்ந்தெடுத்த நடுவரிடத்தில் பேராசிரியர் ஒருவர் இவளை அறிமுகம் செய்து, இந்த பொண்ணுக்கு பல் திறமைகள் சார், எல்லா விழாவிலும் இவள் பெயர் இல்லாமல் இல்லை.எங்கள் தாளாளர் கூட இவளுக்கு தனிக்கவனம் எடுக்க சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் என்று உரையாடல் போய்க்கொண்டிருந்தது.

இடையில் இரண்டு நாள் விடுமுறை. அந்த நாளில் விடுதியில் இருந்து வெளியேறி அவுட்டிங் பாஸ் வாங்கி கொண்டு தீபாவும் சைந்தவியும் கல்லூரியில் ப்ராஜெக்ட் செய்யத் தேவையான பொருட்கள் வாங்க கடைவீதி சென்றார்கள்.அங்கு சில பொருட்கள் எடுத்துக்கொண்டு
விலைக்கேட்டபோது, அவர்களின் பட்ஜெட்டில் வரவில்லை.அதனால் சில பொருட்களை வேண்டாம் என்று எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.உச்சி பிளக்கும் வெயிலில் நீண்ட நேரமாக அலைந்து தேடியதில் இருவருக்கும் அசதியாக இருந்தது. இருவரும் திராட்ஜை சாறு வாங்கி, சிறுது சிறிதாக ருசிக்க தொடங்கிய அந்த நொடி மண்டையில் அடி விழுந்தது போல கையில் நீண்ட நேரமாக எதையோ கையில் வைத்திருந்ததை சைந்தவி கவனித்தாள்.

அய்யய்யய்யோ…இதெல்லாம் வேண்டாம்னு எடுத்து வச்சோம்ல…நீ எதுக்கு எடுத்துட்டு வந்த..இதுக்கு பணம் குடுத்தோமா…பில்லு கொடு பாப்போம்னு தீபா அவசரமாக சரி பார்த்தாள். அச்சச்சோ இப்ப என்ன பண்றது, எடுத்துட்டு போலாமா? இல்ல திருப்பி கொடுத்துவிடலாமா? என்று இருவரும் குழப்பத்தில் இருந்தார்கள்.சரி வேண்டாம், நாம அடிக்கடி வறோம்ல எதுவும் சொல்ல மாட்டாரு …வா போற வழியில திருப்பி கொடுத்துடுவோம்னு கடையை நாடினார்கள்.ஏற்கனவே இவர்களை பற்றி பக்கத்துக்கு கடையில் பேசிக்கொண்டிருந்தனர், அண்ணா இது தெரியாம எடுத்துட்டு போய்ட்டோம்…சாரி என்று கூறினாள் தீபா. என்ன சாரி …எப்படி தெரியாம போகும்…இனி கடை பக்கம் வந்துடாதீங்க…என்று எச்சரித்தார் கடைக்காரர்.சைந்தவி தலை குனிந்தவள் நிமிரவே இல்லை. தான் செய்த
தவறுக்கு தோழி அவமான பட வேண்டாம் என ஒரு வார்த்தை கூட பேச வில்லை. ‘நா திருடி இருந்தா, அப்படியே போயிருப்ப ,திருப்பி கொண்டு வந்து தருவேனா’ என்று கோவமாக பேசிய தீபாவை வேகமாக இழுத்துக்கொண்டு வெளியில் வரும்போது கடைக்காரர்,’ படிக்கிற
பொண்ணுகளாட்டம் இருக்குதுங்க, திருட்டு புத்திய பாரு’ என்று பேசிக்கொள்ளுவது காதில் விழுந்தாலும் கேட்காதவாறு வேகமாக வெளியேறினாள் சைந்தவி. ஏண்டி அந்த ஆளு திருடிட்டு போய்ட்டேனு சொல்லுறாரு..பேசவிடாம இழுத்துட்டு வர.. உன்னோட வந்ததுக்கு திருட்டு பட்டம் எனக்கும் சேத்து என்று கோவமாக தீபா பஸ்சில் ஏறினாள்.இவளுடன் வராமல் தனித்து ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டாள்.அன்று முதல் சைந்தவி இல்லாத சமயத்தில் தோழிகளின் உரையாடல் ஒருவிதமாகவும் இருக்கும் போது ஒருவிதமாகவும் இருப்பதாய் கவனித்தாள்.ஒரு வாரம் நடந்த அந்த விழாவில்,இறுதி நாள் அன்று பாட்டு போட்டி. விழா ஏற்பாடுகள் பரபரப்பாய் இருக்க, சிறப்பு விருந்தினர் வர தாமதமாகும் என்பதால்,சைந்தவியை அழைத்து பாட சொன்னார்கள்.காக்கை சிறகினிலே என்ற பாரதியின் வரிகள் தான்.சைந்தவியின் கீச்சு குரலில் சில மணி துளிகள் மாணவர்களை பிரம்மிப்புடன் ரசிக்க வைத்தாள். ஆனால் இவள் பாட தொடங்கியதும் தோழிகள் விழா அரங்கை விட்டு வெளியேறினார்கள். இவளுக்கு வேதனை தாங்கவில்லை,பாடல் வரிகளை மறந்தும் அழுகையுடனும் பாட்டு எதிரொலித்தது . 

அரங்குமுழுவதும் சிரிப்பு சத்தமாய் இருக்க சைந்தவிக்கு அவமானத்தில் கண்ணீர் மழையாய் கொட்டியது.ஆசிரியர் ஒருவர் கீழே அழைத்துவந்து தனது அருகில் அமர வைத்து சமாதானம் செய்தார்.அதன் பிறகு தோழிகள் ஜாடையாய் இவளை கேலி செய்ய தொடங்கி விட்டார்கள். நடந்தவை எதற்கும் தான் பொறுப்பில்லை என்றாலும் தனது தோழிகளை தான் எப்படி மீட்க போகிறோம் என்பது அவளுக்கு புரியவில்லை. இரண்டு வாரத்தில் தேர்வு நடப்பதால்,விடுதியில் இருந்து தோழிகள் சிலர் தேர்வுக்கு முன்னதாகவே வெளியேறினார்கள். கல்லூரி கடைசி சில நாட்கள் என்பதால் எல்லோரும் ஸ்லாம் புக் வாங்கி பரிமாறிக்கொண்டார்கள்.ப்ராஜெக்ட் வேலை, சில கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தல், தேர்வுநாட்கள் என்று பரபரப்பாக போனது கடைசிவாரம். சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனப்பாங்கில் அவர்கள் இல்லை என்று இவளாகவே கற்பனை செய்துகொண்டு தான் பேச நினைத்தை ஸ்லாம் போக்கில் எழுதினாள்.எழுதி கொடுத்த பின்னும் அவர்களிடத்தில் பழைய கலகலப்பு இல்லை. ஒரு மாதத்தில் கல்லூரி முடிந்து விட்டது, தோழிகள் எல்லாம் வெவ்வேறு திசையில் சிதறி விட்டார்கள். 

சில வருடம் கழித்து பழைய கல்லூரி மாணவர்கள் சந்திப்பின் போது சில தோழிகள் மட்டும் வந்திருந்தார்கள். இன்று அதே கலையரங்கில் நிற்கிறாள், இருந்தும் தயக்கத்துடனே பின்னால் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். தோழிகள் ஒருவரை ஒருவர் அழைத்து பேசியதை கவனித்தாள்,தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசை,எதோ சில கேள்விகள் அவர்களிடத்தில் நெருங்கி செல்ல அனுமதிக்கவில்லை. தான் ஒரு பிரபலமான பாட்டு போட்டியில் கலந்து கொண்டதை இவர்களிடத்தில் கூறலாமா? தன் மீது கொண்ட அபிப்ராயம் மாறி இருக்குமா ? என்று யோசித்து கொண்டு கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தாள், இவளை பார்த்ததும் ‘ஏய் சின்ன குயில்.. என்ன எங்களை பாத்துட்டு அப்படியே திரும்பி உட்காதிருக்க’என்று ஒருவர், ‘ஆமா.. ஆமா .. மேடேம் ஒருநாள்கூட நம்மள காண்டாக்ட் பண்ணல,அந்தளவுக்கு பெரியாளு ஆகிட்டாங்க போல,நம்மள நினைவு இருக்கோ இல்லையோ என்று ஒருவர், இவங்க சிங்கர் ஆகிட்டாங்க இனி நம்மள எல்லாம் கண்ணனுக்கு தெரியுமா’ என்று இன்னொருவரும் கலாய்த்து தள்ளினார்கள். நல்ல வேலையாக நாம் யோசித்தபடி ஒன்றும் இல்லை, எனது தோழிகள் என்னுடைய தோழிகளாகவே இன்னும் இருக்கிறார்கள் என்று மனதை தேர்த்திக்கொண்டாள்..ஏய் லூசு எதுக்கு இப்ப அழகுற என்றவர்களிடம்,பழைய நினைவுகளை கூறினாள்.அடி பாவி அப்ப நாங்க உனக்கு வோட் பண்ணதெல்லாம் பாக்கலியா, ‘அச்சச்சோ…’ என்று கோரஸாக சத்தமிட்டார்கள்.குரும்புன்னகையில் மீண்டும் ஒருமுறை கல்லூரி நாட்களுக்கு சென்று விட்டாள். ஆமா நீங்க எல்லாரும் தாளாளரை சந்தீர்களா?

என்றாள்,ஹ்ம்ம் அவர் இருந்தாத்தானே சந்திக்க என்றாள் கோமதி. ஏன் என்னாச்சு என்றவளிடம் ஆறு மாதம் ஆகிடுச்சு காலேஜ் குரூப்ல நீ இல்லையா, நா குரூப்ல தா பாத்தேன் என்றாள். அச்சச்சோ …இதுகூட பாக்கல நா ஏதாவது பெரிசா செய்யணும் அப்புறமா தா அவர் முகத்தை
பாக்கனும்னு நெனச்சேன் அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சு.நீ ஒன்னும் கவலை படாத, நீ பாடின முதல் பாட்டு அவர் பாத்துட்டு கவிதா மேடம்கிட்ட சொல்லிருக்காரு.அவங்க தான் குரூப்ல இந்த வீடியோ போட்டாங்க…அன்னிக்கு இருந்து நா ரெகுலரா பாத்துட்டு இருக்கேண்டி..வோட் பண்ண

சொல்லி நா தா எல்லாருக்கும் இன்போர்ம் பண்ண என்றாள் கோமதி . அட சீ… இவளவு நாள் ஏதோதோ யோசித்து தன் தோழிகளிடமிருந்து விலகிவிட்டேனே என்று அங்கலாய்த்து கொண்டாள்.இப்போது தோழிகளுடன் சேர்ந்து கேன்டீனை நோக்கி நடந்தார்கள்…இன்னைக்கு சைந்தவி சிங்கர் ஆனதுக்கு செம்ம ட்ரீட் வைக்கப்போற..ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி சேந்து சாப்பிட போறோம்ல என்றாள் …சரி வாங்க.. ரொம்ப பீல் ஆகாத என்று கலாய்த்து குதூகலமாய் போனது அந்த நாள் சைந்தவிக்கு.ஆனாலும் அன்று கல்லூரி விழாவில் தான் பாட ஆரம்பித்ததும் எதற்க்காக வெளியே போனார்கள் என்பது உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் சித்ரா குறுக்கிட்டு பேக்கில் இருந்து எல்லோரும் சேந்து எடுத்த போட்டோக்களை ஆல்பமாக தொடுத்து பரிசளித்தாள்.இது காலேஜ் கடைசி பாட்டு போட்டில நீ ஜெயிச்சதும் குடுக்கலானு, பாடி முடிகிறதுக்குள்ள வந்திடும்னு கடை கடை சுத்தி ரெடி பண்ணோம்.ஆனா நீ சொதப்புனா பாரு…மறக்கவே முடியல்ல உன்னோட அந்த பாட்டு.எப்ப அந்த பாட்டு கேட்டாலும் எனக்கு உன் நெனப்பு தா வரும் என்று சிரித்தார்கள்.சரி விடு இப்ப ஜெயிச்சிட்டல்ல இப்ப இந்த கிப்ட் வாங்கிக்க…வாங்கி கொள்ள சைந்தவி கையை நீட்டும் போது கோமதி பிடிங்கி கொண்டு ,ஆமா இப்ப நல்லா பாடுரில்ல…அன்னிக்கு ஏன்டி சொதப்பின? என கேட்டாள். ஏய் அன்னிக்கு நா சொதப்புனத்துக்கு காரணமே நீங்க தாண்டி…அன்னிக்கு நீங்க வெளிய போகாம இருந்திருந்தா நா நல்லா பாடிருப்ப தெரியுமா. என்னடி சொல்லுற நாங்க போனதுக்கு நீ சொதப்பினத்துக்கும் என்ன சம்மந்தம் என்றாள் சித்ரா .அன்னிக்கு என்மேல கோவமா இருக்கீங்கன்னு நெனச்சு தா அழுத..அடி பாவி அதுக்கு தா ஸ்லாம் புக்ல…சாரி நா எதுவும் வேணும்னு செய்யல…சாரி சாரினு எழுதிருந்திய லூசு எனக்கு ஒண்ணுமே புரியல்ல.நா இத பத்தி அப்பவே விசாரிகளான்னு நெனெச்சே..அதுக்குள்ள ஸ்டடி லீவு எக்சாம்ன்னு போய்டுச்சு…இத பத்தி நா நினைக்கவே இல்ல.
இப்ப நீ சொன்னதும் தா நியாபகம் வருது. அப்பா… என்மீது உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா? என்றால் சைந்தவி. ஏய் லூசாட்டம் பேசாத…தேவையான எடத்துல பேசாம இருக்கிறது தப்பு ..அதே சமயத்துல தேவை இல்லாத எடுத்துள்ள பேசுறதும் தப்பு…இத நீ மாத்திக்கணும்னு தா சொன்னோம்…நீ இவ்வளுவு வறுத்த பட்டிருப்பேனு நாங்க யாரும் நெனச்சுக்கூட பாக்குல…இந்த மூணு வருசத்துல எங்களை புரிச்சுக்கிட்டது இவளவு தான லூசு…என்றாள் சித்ரா…ஏய் நீ சும்மா இரு…இவ லூசுன்னு சொன்னாகூட அழுகப்போறா என்றாள் கோமதி. ஏய் போதும் நிறுத்துங்க ஓவரா பேசாதீங்க நா ஒன்னும் அப்படியில்ல என்று மீண்டும் கண்ணீர் சிந்தினாள் சைந்தவி. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாடி …என்று அறிவுரைகள்
ஆரம்பிக்கும் போது விழா ஆரம்பித்தது..சரி வாங்க மறுபடியும் பேசலாம் என்று விழாவில் கலந்துகொண்டார்கள். சிலமணி நேரத்தில் விழா முடிந்தது,அவளின் மனதில் இருந்த கணமும் குறைந்தது. `
மனதில் வைத்துக்கொண்டு அப்படி இருக்குமோ,இப்படி இருக்குமோ என்று கற்பனை செய்வதை விட,பேசிவிடுவதால் பல பிரச்னைகளை தவிர்க்கலாம், சைந்தவி சமயத்தில் பேசாதது அவளின் சந்தோஷமான சில நாட்களை இழந்திட செய்தது. நம்மை பட்டைத்தீட்ட உடன் வைத்திருக்கும் ஆயுதமே நண்பர்கள்.நிஜவாழ்க்கையிலும்கூட பள்ளி கல்லூரி நாட்களை நம்மை மெருகேற்றும் தருணமாகவே உணர்கிறேன், சைந்தவியின் தோழிகளை போல,நல்ல தோழிகள் உடன் இருந்தால். `..

 – நித்யாநரேஷ்குமார், அந்தியூர்

You may also like...

3 Responses

  1. ஜெய பிரகாஷ். த says:

    கண்ணிமைக்கும் கவிதை பூ

    மனதில் நின்ற மனம் குறையாத வாசம் அந்த மழலை தரும் புன்னகையின்
    இறுக்கமான விழியசைவு

    ஒருதலை காதல் உலகிற்கு வருவது இவளுடன் உரையாட துடிக்கும் நிகழ்வின் தொடக்கத்தில் தான்

    யாரென்று தெரியாத சமயம் கூட ஒரு சலனமில்லாத சங்கீதம் அவள் வியந்த பார்வையின் விருப்பத்தில்……

    அவளுக்கோ பார்ப்பதெல்லாம் வியப்பு… நமக்கோ அவர்கள் நம்மை பார்ப்பதே சிறப்பு….

    இறைவனின் இயக்கத்தில் ஒரு முக்கியமான அற்புதம்…. மழலை

  2. ஜெய பிரகாஷ். T says:

    *திரளான நினைவின் தீர்ந்த காதல்*

    ” பிரிவின் மையமாக நீ கடந்த
    பின்பும்,,,,,,,
    உன்னை மையமாக கொண்ட
    நான் ஓரத்திலே உலர்ந்து கிடக்கிறேன் ”

    ஒரு பக்கத்தின் கடைசி எழுத்தை
    மெதுவாக மடக்கி வைக்கும்
    காகிதத்தின் முனைப் பகுதி மறைத்து
    விடுவது போல்””””””””””

    நான் யாரென்று அறிவதற்கு முன்னே
    என் இதயத்தின் நினைவுகளை இந்த
    ஜென்மம் முழுவதும்
    உபயோகமில்லாமல் செய்தது தான்!!!
    நீ எனக்கு செய்த
    உபசாரமா??????

    இல்லை என் காதலும் முதிர்ச்சியுற்ற நினைவுகளில் முக்தி பெறாத விபச்சாரமா????

    ********தீராத காதல் எல்லாம் பார்த்தாகிவிட்டது மற்றவர் மூலம் பொது இடங்களில் கண்காட்சியாய் 😒….ஆனால் எனக்கு நீ இல்லை , இனி எனக்கு வேறு காதலும் இல்லையென்பதன் சான்றே என்னுடைய இந்த தீர்ந்த காதல்…..****

  3. V.layanika says:

    *திரளான நினைவின் தீர்ந்த காதல்*

    ” பிரிவின் மையமாக நீ கடந்த
    பின்பும்,,,,,,,
    உன்னை மையமாக கொண்ட
    நான் ஓரத்திலே உலர்ந்து கிடக்கிறேன் ”

    ஒரு பக்கத்தின் கடைசி எழுத்தை
    மெதுவாக மடக்கி வைக்கும்
    காகிதத்தின் முனைப் பகுதி மறைத்து
    விடுவது போல்””””””””””

    நான் யாரென்று அறிவதற்கு முன்னே
    என் இதயத்தின் நினைவுகளை இந்த
    ஜென்மம் முழுவதும்
    உபயோகமில்லாமல் செய்தது தான்!!!
    நீ எனக்கு செய்த
    உபசாரமா??????

    இல்லை என் காதலும் முதிர்ச்சியுற்ற நினைவுகளில் முக்தி பெறாத விபச்சாரமா????

    ********தீராத காதல் எல்லாம் பார்த்தாகிவிட்டது மற்றவர் மூலம் பொது இடங்களில் கண்காட்சியாய் 😒….ஆனால் எனக்கு நீ இல்லை , இனி எனக்கு வேறு காதலும் இல்லையென்பதன் சான்றே என்னுடைய இந்த தீர்ந்த காதல்…..****