மின்னிதழ் ஜூலை 2023
by Neerodai Mahes · Published · Updated
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh july 2023
சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்
வெற்றியாளர்: அஷ்ரஃப் அலி
வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.
உருளைக்கிழங்கு உணவுவகைகள்
திருடாதே - சிறுகதை
ஒரு அழகிய மாலைப்பொழுதில், நானும் என் தோழியும் கடற்கரைக்குச் சென்றோம். உரையாடிக்கொண்டே மணற்பரப்பில் நடந்து செல்ல மிகவும் நன்றாக இருந்தது. ஒருவழியாக கடலின் அருகே சென்றுவிட்டோம். குளிர்ந்த காற்றுடன் அலையின் ஓசை எங்களை கரையின் அருகே அழைத்துச் சென்றது. நேரம் செல்ல செல்ல அலையின் வேகம் அதிகமானது. ஏனென்றால் அது ஒரு பௌர்ணமி இரவு. பின்னர் மணற்பரப்பிற்கு வந்து அமர்ந்தோம். முழுநிலவின் வெளிச்சம் கடல் நீரின் மேல் பட்டு மின்னியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.இருவருக்கும் பசிக்கத் தொடங்கியது. வடைகடைக்குச் சென்றோம். கொஞ்சம் கூட்டம்அதிகமாகத்தான் இருந்தது. அதனால் தாமதமாகத்தான் வடை கிடைத்தது.
இரண்டு தட்டு வாங்கினோம்.மிகவும் சுவையாக இருந்தது. நான் பணம் எடுக்க முனைந்தேன். என் தோழி நான் பணம் கொடுக்கிறேன் என்று விரைந்தாள். நீ நடந்துகொண்டிரு நான் வருகிறேன் என்றாள். நானும் மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். பின் தோழியோ சிரித்துக்கொண்டே வந்தாள்.ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டேன்.
அதற்கு அவள் நான் வடைக்கு பணமே கொடுக்கவில்லை கூட்டம் காரணமாக அவர்களும் கவனிக்கவில்லை. உடனே எனக்கு மிகுந்த கோபம் வந்தது.தோழியாயிற்றே சற்று அமைதியாக ஏன் இப்படிச் செய்தாய்,தவறில்லையா என்றேன்.அதெல்லாம் ஒன்றும் கிடையாது சிறுதொகைதானே என்றாள்.உனக்கு சொன்னால் புரியாது என்னுடன் வா என்று கடையை நோக்கி அழைத்துச் சென்றேன்.கடைக்கு சற்று தொலைவிலேயே நின்று,அந்த பெண் எப்படி உழைக்கிறாள் என்பதைப் பார்த்துக்கொண்டிரு என்றேன். அடுப்பின் அனலில் அமர்ந்துகொண்டு காய்களை நறுக்கிக்கொண்டிருக்கிறாள். உதவியாக இன்னொருவர் வடையை தட்டில் வைத்து தருகிறார். கடை எடுத்து வைக்கவும் வரை மிகவும் உழைக்கிறார்கள். நீ செய்தது ஒரு வகையில் திருட்டுத்தான்.
சிறுதொகையானாலும் அவர்களின் கடின உழைப்பும், பொன்னான நேரமும் விலைமதிப்பற்றது. உடனே தோழி தன் தவறை உணர்ந்து, என்னை மன்னித்துவிடு என்றாள். இனிமேல் இவ்வாறு செய்யாதே என்று கூறிவிட்டு, கடைக்கு சென்று பணம் கொடுத்தேன். பின்னர் இருவரும் அவரர் வீட்டிற்கு விரைந்தோம்.
– கவிநயா