மின்னிதழ் மே 2023
by Neerodai Mahes · Published · Updated
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh april 2023
சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்
வெற்றியாளர்: தமிழ்செல்வி
வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.
கவிஞர் அறிமுகம் - திசைசங்கர், திருநெல்வேலி
வாழ்க்கை வெறுத்துப்போய்த்
தற்கொலை செய்து கொள்ளலாமெனச் சாலையோரம் நின்றான்.
மூன்றாவதாக வரும் பெரிய லாரியில் விழலாமெனப் பயத்தோடு
ஓரடி முன்னே எடுத்து வைக்கையில் கால்களை நக்கியபடி
வாலாட்டிக் கொண்டிருந்தது
ஒரு நாய்க்குட்டி
அவன் என்றோ ஒருநாள் போட்ட
பிஸ்கட்டுக்காக..
தொடர் மழையை
நடத்துநர்
ஓட்டுநர்
பதினொன்றாய் மூக்குச்சளி
வடித்துக்கொண்டிருந்த நான்
கடைசி சீட்டில் இருந்த விவசாயி
என எல்லாரும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கையில்
சந்தோசமாய் ஆடிக்கொண்டிருந்தது
வைபர்
நேர்வழிப்பேருந்தில் ஊருக்குச்
சென்று கொண்டிருந்தேன்.
பல முறை மீதி சில்லறை கேட்டும்,
பிறகு தருவதாய்ச் சொன்னார், நடத்துநர்.
நிறுத்தம் வந்ததும் இறங்கிவிட்டேன்
சில்லறை வாங்காமலேயே…
பேருந்து மட்டும்தான் நேர்வழி
அன்று நீ வைத்த சிக்கன் குழம்பில்
கருவேப்பிலை, கொத்தமல்லிக்கிடையே
உன் கூந்தல் முடியும் இருந்தது…
எனக்குத் தெரியும்
‘வாசனைக்காகத்தானே’
குருவியின் தாகம் தணிக்க
ஈர்ப்பு விசையை எதிர்த்துக்
குழாய் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
ஒற்றை நீர்த்துளி..
வெண் தரிசு நிலம் - நூல் அறிமுகம்
மூன்று மொழிகளில் வெளியான நாவல் இரண்டு படைப்பாளர்களால் எழுதப்பட்டது.
நாவலாசிரியர்:
போ.மணிவண்ணன்
அஞ்சு ஸஜித்
ஆங்கில மொழிபெயர்ப்பு:
ஜே.எம்.எம்.வியாஸ்
கன்னட மொழிபெயர்ப்பு:
சம்பா ஜெய் பிரகாஸ்
பாடத்திட்டத்தில்:
கொங்குநாடு கல்லூரி,கோவை