புதை கனவு

மூணாறு நிலச்சரிவு சீற்றம் (மண் சரிவு) சம்பவத்திற்கு வலிகளுடன் நமது இரு கவிஞர்களின் வரிகளை சமர்ப்பிக்கிறோம் – puthai kanavu kavithai

இயற்கையே..
அவர்கள் என்றோ அழைக்கப்பட வேண்டியவர்கள்..
ஆனால் இம்மண்ணில் இன்றே புதைந்து போனார்களே..
இரக்கம் கொள்ளாது கொன்றாயே ஏனய்யா..?
பசித்த வயிற்றுக்கு பஞ்சம் பிழைக்க வந்தது தவறானால்,
பாமரர்கள் உதித்திடாதபடியே தலையெழுத்தை
பதிவு செய்திருக்கலாம் தானய்யா..?

தேயிலையின் நிறம் மாறும் முன்..
அதை பறித்தவர்களின் உடல்,
இம்மண்ணில் மணம் மாறிப் போனது
பாவத்தின் உச்சகட்ட படைப்பைய்யா…!
நடுநிசியில் கலையாத கனவுகளோடு கண்ணுறங்கும்
விழிகளை தான்,
மண்ணோடு மண்ணாக்கி கலங்கி நிற்கும்
கண்களுக்கு நீ தரும் பரிசாய்யா..?
நீ எம்மீது கோபம் கொள்ள கோடி காரணங்கள் உண்டு தான்,
ஆனால் அதற்கு அன்னாடங்காட்சியை
அழைத்துச் சென்று ஈடுசெய்வது உமக்கு
எந்தவிதத்தில் முறையய்யா..?
ஊர் மறந்து உறவை பிரிந்து..

காட்டாற்றின் ஓரம் குடிசைபுரிந்து..
தேயிலை காட்டில் பொழுது கழிந்து..
நித்தம் நித்தம் எங்கள் சக்தி குறைந்து..
உழைத்து களைத்து உறங்கும் போது..
நித்திரையில் கூட நிம்மதி இல்லை..
இயற்கையின் பரம்பொருளே,
உன்மீது எங்களுக்கு எந்த வஞ்சகமும் இல்லை..
ஆனாலும் ஏனய்யா…?

– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்

puthai kanavu kavithai

கனவை மூடி

பெட்டிமுடி இருந்த இடம்
மண்மூடி இருப்பதென்ன
தலையில் வீழ்ந்த மண்
கனவை மூடி போனதென்ன

கண் மூடி தூங்கும் நேரம்
மண் மூடி போனதென்ன
மண் மூடும் வேளையிலும்
சாமி கண் மூடி போனதென்ன – puthai kanavu kavithai

பேர் தான் ராஜமலை
பேருக்கு கூட அரணுமில்லை
ஓடிவந்து பார்த்திடத்தான்
ஓரடிக்கு நல்ல பாதையில்லை

தேடி சேர்த்து வாழ்ந்திடத்தான்
ஊர் விட்டு ஊரு வாழ வந்தோம்
பெட்டி போல வீடுகளில்
குட்டி போல வாழ்ந்து வந்தோம்

வாழ்க்கை என்ன வாழ்க்கையடா
வாழத்தானே வாடிவந்தோம்
வாடி நிற்கும் சொந்தமெல்லாம்
தேடி நிற்கும் வேலையென்ன,
கண்ணீருடன் இவண்

– அந்தியூரான், ஸ்ரீராம் பழனிசாமி

You may also like...

10 Responses

  1. Kavi devika says:

    சோகத்தின் பிம்பம் காட்டும் கவிதை

  2. தி.வள்ளி says:

    இரு கவிதைகளும் அருமை…வலிதரும் வரிகள்…மனதை கனக்க வைக்கிறது…கவிஞர்களுக்கு நன்றி..தூங்கிப்போன உறக்கம் கலையா உயிர்களுக்கான தாலாட்டாய் இருக்கட்டும்

  3. ம. சக்தி வேலாயுதம் says:

    வேதனையின் உச்சத்தில்…

    இருவேறு கவிதைகள்…

    களம் உண்டுதான்… வலியும் ஒன்றுதான்

  4. Rajakumari says:

    மனதை உருக்கும் கவிதை

  5. Sriram says:

    மணிகண்டன் அவர்களின் வரிகள் அன்றைய சூழலில் அம்மக்களின் மனதை எடுத்துக்காட்டுவதா மிக அருமையாக எழுதியுள்ளார்..

  6. ArjunMuthamPerumal says:

    மிகுந்த வலி நிறைந்த வார்த்தைகள்…

  7. பிரகாசு.கி says:

    இரண்டு கவிதைகளும் அருமையாக இருந்தது.வலிகள் கண் முன்னே வந்து செல்கின்றது…

  8. பூபாலன் says:

    இரண்டும் வலியின் பிரதிபலிப்பு 😔

  9. அருமை அருமை. வரிகள் உணர்ச்சிபூர்வமாக உள்ளன. பாராட்டுகள.

  10. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!