நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்
by
Neerodai Mahes
·
Published
· Updated
உன் காதல் நிராகரிப்புகள்
என்னை தினமும் கொன்று குவிக்க,
நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்.
சொற்கள் என்னும் முற்களால்
நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம்
இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து
வார்த்தைகளானது.
புரியாத புதிரென்பவள் பெண்
ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால்
சுட்டேரிப்பதேன் ?
உடைந்தாலும், உறைந்தாலும், உதிர்ந்தாலும்
காலமெல்லாம் என் கவிதையின்
கலங்கரைவிளக்கும், விளக்கமும் நீ தானடி.
நீ என்ற ஒற்றை சொல்லுக்காக
ஏங்கித் தவிக்கிறது என் கவிதை வரிகள்.
கண்களை மூடி காட்சிகளை தொலைக்கலாம்
உடன்பாடுகளை நினைக்காத உன்
கனவுகளை எங்கே போய் தொலைப்பது.
– நீரோடைமகேஷ்
Tags: அனாதைஉணர்வுகள்உதவிக்கரம்ஓவியமாய்காதல் கவிதைகுழப்பத்தில்
You may also like...
ரசிக்க வைக்கும் கவி வரிகள் – ஏக்கத்துடன்…
காதல் கரைபுரண்டோடுகிறது உங்கள் கவி வரிகளில்.ஏக்கம் நிறைந்த காதல் உணர்வு.அருமை சகோதரா.
அருமையான வரிகளால் கோர்க்கப்பட்ட
அழகிய கவிதை நண்பரே….