தற்கொலை – அதிகாரம்

என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide.

தற்கொலை:

வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு .

படைப்பதற்கு ஒருவன்
முடிப்பதற்கு ஒருவன் என
கடவுளையே நியமனம் செய்து
வாழ்கிறோம்.

mahes tamil kavithai why suicide

உன் நுரையீரல் சேர்ந்த காற்றைக் கூட
சொந்தம் கொண்டாட முடியாத நிலையில்,
ஒருநாள் பிரிந்தேதீரும்
இந்த உயிரை மட்டும் உரிமை கொண்டு
மாய்க்க எப்படி முடியும்.

வாழ்வதில் தோற்றால் போட்டியாக
மூவர் தயார் நிலையில் வாழ்ந்து காட்ட.
வாளை தடுக்க கேடையமே பதில் தவிர இன்னொரு வாள் இல்லை,

வாழ் முடிவு வரை……..

விலையுர்ந்த காலனிக்கு ஆசைப்பட்டவன் கால் இல்லாதவனைக் கண்டதும் திருந்துவதைப்போல , உனக்கும் ஒரு வழி உண்டு.
பிறப்பு – இறப்பு விகிதம் 3:1 இல் இருக்கும் நிலையில், இறப்புகளால் இதை சரிக்கட்ட முடியாது .

 – நீரோடைமகேஷ்

mahes tamil kavithai why suicide

You may also like...

3 Responses

 1. M.R says:

  உண்மை நண்பரே வாடகை வீட்டில் குடியிருக்கும் பொழுது அந்த வீட்டை விற்க உரிமையில்லை.

  அதே போல் இந்த உயிர் அது மாய்க்கும் உரிமை நமக்கு இல்லை

 2. வந்தேன் வந்தேன் நண்பரே,
  தற்கொலை சாடும்
  தரமான கவிதை தந்தீர்…..
  சோகத்தின் நிமிடத்தைக்
  கடத்தத் தெரியா
  கனவுலக வாதிகள்……

  அருமையான கவிதைக்கு
  பாராட்டுகள் நண்பரே.

 3. Anonymous says:

  super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *