வெட்கச் சிணுங்கல்கள்

சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு
உன் வெட்கம். vetka sinungal kavithai

நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது
சிதறியது நீர்த்துகள்கள்
மட்டுமல்ல …
என் இதயமும் தானடி.

vetka sinungal kavithai

உன் துறுதுறு பாவனைகளால்
குழம்பிப்போனேன்.

உன் அழகையா இல்லை
பாவனைகளை ரசிப்பதா என்ற
நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்.

உனைப்பிரிந்த நேரங்களிலும் என்னில்
ஸ்பரிசமாய் நிலைத்திருக்கும்
உன் வெட்கச் சிணுங்கல்கள்.

 – நீரோடைமகேஷ்

You may also like...