மின்னிதழ் நவம்பர் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh november 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்சௌந்தர்யா

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

கதை சொல்லி போட்டி - நீரோடை தங்கம்

கதை சொல்லி பரிசு வெல்லலாம். போட்டி விபரத்தை வாசித்து போட்டியில் கலந்துகொண்டு நீரோடைக்கு ஆதரவு தாருங்கள்.

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

கொங்கு சமையல்

சுந்தர பவனம் - நூல் விமர்சனம்

நாவல் ஆசிரியர் - தி.வள்ளி

“சுந்தர பவனம்” எனும் கதை மூலம் “திருமதி. வள்ளி” என்ற ஆளுமைக்குள் ஒளிந்திருந்த கதாசிரியரை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைத்ததில் ஆனந்தம். “பிரதிலிபி தளத்தில்” ஆறு மாதங்களாக தொடராக வெளிவந்த கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் திருநெல்வேலி அல்வாவை விட இனித்தது. நான் நிறைய படிப்பவள் என்றாலும், 2017 நவம்பரில் திரு. வண்ணபாலனின் துளிப்பாக்கள் எனும் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியுள்ளேன். அதன் பிறகு தற்போது அணிந்துரை எழுதுவதற்கு முயன்று இருக்கிறேன்.

கதையின் ஓட்டம் இரு தண்டவாளம் போல் ஐந்து தலைமுறைகளையும் ஒரே சீராக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையை அறிமுகப்படுத்துவதே தெரியாமல், அழகாக அறிமுகப்படுத்தியிருப்பது கதாசிரியரின் எழுத்திற்கு கிடைத்த வெற்றி. 100 அத்தியாயங்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

திலகவதியில் ஆரம்பித்து திலகவதியில் முடித்த போது 85 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. கதையை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அடுத்து என்ன என்ற எதிபார்ப்பை வாசிப்பவரிடம் உருவாக்குவது என்பதே சிறந்த கதைக்கான இலக்கணம்.

தந்தைக்கும், மகனுக்குமான உரையாடலில், வீடு என்பது உயிரிலும், உணர்விலும் கலந்தது. வீடு என்பது கல்லும், காரையுமாக இருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்கு அப்படி அன்று. வீட்டின் “உயிரோட்டத்தை உணர்கிறேன்”. எங்கள் தாத்தாவின், அப்பாவின் “உயிர்மூச்சை உணர்கிறேன்”. இந்திய
மண்ணினுடைய கலாச்சாரத்தின் பெருமையே அதுதான். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பிள்ளைகளுக்காக வாழ்வதை சுமையாக நினைக்கவில்லை, என்பது போன்ற சொற்களால் எழுத்தாளர் நம்மை கதையோடு கட்டிப் போடுகிறார்.

கதை என்பது மனித உணர்வுகளின் பதிவு, அதனை நினைவுச் சுழற்சியாக கடைசி அத்தியாயத்தில் குருவிகள் கொறிக்கும் அரிசியும், கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை அலகால் கொத்தும் குருவி, கண்ணாடியைப் பாதுகாக்க குடும்ப குலவிளக்கு திருமதி.ரத்தனா போடும் திரை, கதை நிறைவடைவதை குறிப்பால் உணர்த்திய எழுத்தாளரின் எழுத்திற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் 40 முதல் இன்றைய கால கட்டம் வரை வாழ்ந்த மக்களின் வாழக்கையை படம் பிடித்து, இதயம் கனக்க நிறைவு செய்திருக்கிறார். எல்லா காலங்களிலும், அந்த காலம் போல இந்த காலம் இல்லை எனும் வார்த்தை மட்டும் மாறாதது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

படைப்பாளர் விருதுகள் பல பெறுவதற்கான மனமார்ந்த வாழ்த்துக்கள்…

நெல்லை உலகம்மாள்…

You may also like...