நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்
by Neerodai Mahes · Published · Updated
முப்பெரும் இலக்கியத் திருவிழா - 2025
22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய விழா ஆகியன சிறப்பாக நடைபெற்றன.
விழாவை சென்னை சில்க்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு T.K .சந்திரன் தலைமையேற்றார்.
ரோட்டரி சங்கத் தலைவர் திரு. தண்டபாணி வரவேற்புரை வழங்கினார். நீரோடை இலக்கிய அமைப்பின் நிறுவனர் நீரோடை மகேஸ் விழா அறிமுகவுரையாற்றினார்.
எழுத்தாளர் சந்திரா மனோகரன், எழுத்தாளர் நிழலி ஆகியோர் இலக்கிய விருதுகள் பெற்றனர்.
நீரோடை இலக்கிய அமைப்பின் சார்பாக தலா 5000ரூபாய் ரொக்கமும் விருதும் வழங்கப்பட்டது.
விருதினை விஜயா பதிப்பக நிறுவனர் திரு .மு. வேலாயுதம் ஐயா வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
தமிழ்ச்செம்மல். முனைவர். போ. மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினார். திரு . Rtn. பழனிசாமி அவர்கள் நூல் வெளியிட அரங்கத்தில் இருந்த சிறுவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
கதைசொல்லி ரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் நூல் மதிப்புரை வழங்கினார். விருதாளர்களும் எழுத்தாளர் நீரோடை மகேஸ் அவர்களும் ஏற்புரை வழங்கினர்.
கவியோடை விருது, கதை சொல்லிவிருது, இளம்மாணவ படைப்பாளிகளுக்கு சிறப்பு செய்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பல்வேறு சான்றோர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
