அன்புள்ள வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நீரோடை வணக்கம். தனது சிறுகதை தொகுப்பை வெளியிட்டு அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் கதாசிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீரோடை தனது இலக்கிய விருதுகள் 2024 அறிவிப்பை சமீபத்தில் நடந்த இலக்கிய விழாவில் வெளியிட்டது. நீரோடை பதிப்பகம் மற்றும் காகிதம் செய்வோம் பதிப்பகம் இணைந்து இந்த இலக்கிய விருதினை அறிவித்தது.
முதல் ஆண்டு என்பதால், இந்த ஆண்டு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்டாகக் கருதி ஒரு பிரிவில் மட்டும் விருதுகளை அறிவிக்கிறது நீரோடை குழுமம். சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான இலக்கிய விருதுக்கு விண்ணப்பிக்க,
பெயர் :
புனைப்பெயர் :
முகவரி :
நூல் தலைப்பு :
அலைபேசி எண் :
வாட்சாப் எண் (புலனம்) :
மின்னஞ்சல் :
நூலை அனுப்புவது: நூலாசிரியர் / பதிப்பகத்தார் / பரிந்துரைப்பவர்
நூல் ஆசிரியர் பற்றி :
ஆகிய விபரங்களை கடிதத்தில் எழுதி மூன்று பிரதிகளுடன் இணைத்து அனுப்பவேண்டும்.
கலந்துகொள்ளும் படைப்பாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்:
- சிறுகதை தொகுப்புகள் மட்டும் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். பிற பிரிவுகளில் அனுப்பப்படும் நூல்கள் விருதுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அவைகள் விருதுவழங்கும் விழாவில் கண்காட்சிக்காக வைக்கப்படும்.
- நூல்கள் 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 க்குள் வெளியான நூலாக இருக்க வேண்டும். முதல் பதிப்பாக இருக்க வேண்டும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து வெளியிட்ட நூல்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். விருதின் பரிசும், தொகையும் பகிர்ந்து அளிக்கப்படும்.
- மேல் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ஆசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியிட்டிருந்தால் அவையனைத்தையும் அனுப்பலாம், அனைத்தும் விருதுக்கு தகுதியானவை.
- நூல்களை பதிவுத் தபாலில் அல்லது கூரியரில் அனுப்ப வேண்டும். அனுப்பி வைத்த விபரத்தை நீரோடை வாட்சாப் எண்ணிற்கு (90801 04218) தெரிவிக்கவேண்டும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அனுப்பியிருந்தால், ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக செய்தி / விபரங்கள் அனுப்ப வேண்டும். நீரோடை இலக்கிய விருதுகள் 2024 என்று தலைப்பிட்டு அனுப்ப வேண்டும்.
- நூல் ஆசிரியர் வெளிநாட்டிலோ அல்லது விருது பற்றி செய்தி அறியாத சூழலில் இருந்தால் அவர் சார்பாக பரிந்துரை செய்து மற்றவர் / பதிப்பகத்தார் அனுப்பலாம்.
- பதிப்பகம் வாயிலாக வெளியிட்ட நூல்கள் என்றால் பதிப்பகத்தாருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
- செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- நீங்கள் அனுப்பும் கதை நூலுக்கு யாரும் காப்புரிமை கோரக்கூடாது. அதை மீறி கோரினால் அதற்கு படைப்பாளரே பொறுப்பு.
நூல்களை அனுப்பவேண்டிய முகவரி
நீரோடை மகேஸ்
5/319 1C, யுகநிலா இல்லம்,
சிவசக்தி நகர், பழைய தேசிய நெடுஞ்சாலை,
கைகாட்டிப்புதூர் (PO)
அவிநாசி (TK), திருப்பூர் – 641654
தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு 2024 இறுதியில் அல்லது 2025 துவக்கத்தில் நடைபெறும் நீரோடை விழாவில் ஆசிரியரிடம் பத்தாயிரம் ருபாய் ரொக்கமும், விருதும் வழங்கப்படும்.