என் மின்மினி தொடர்கதை (பாகம் – 66)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-66
En minmini thodar kadhai
மீண்டும் ஹாஸ்டலினை நோக்கி பயணம் தொடர்ந்தது.சிறிது நேர அமைதியான பயணத்துக்கு பிறகு ஏன் உம்முன்னு வரே??? உனக்கு வாய் தான் சும்மா இருக்காதே.எதையோ அப்பப்போ உன்னுடைய மூளை ஆராய்ச்சி பண்ணுமே என்று மீண்டும் அவன் அவளை வம்புக்கு இழுக்க ஒண்ணும் இல்லை…கோவிலுக்கு போயிட்டு வரோம்,கொஞ்சம் அமைதியாக வருவோமேன்னு கம்முன்னு இருந்தேன் என்று பதிலுக்கு அவள் கூற மழை மீண்டும் கொஞ்சம் அதிகமானது…
ச்சே இந்த மழை வேற…எப்போ பாரு ஹாஸ்டலில் இருக்கும் போது பெய்யவே செய்யாது.என்றைக்காவது ஒரு நாள் நான் வெளியே வரும் போது தான் பெய்து கொட்டும்.ஒரே எரிச்சலாக வருது என்று மனதுக்குள் பொசுங்கியபடி,
எனக்கு ஒரு சந்தேகம்!கோவிலுக்கு போய்ட்டு வரோமே நேர வீட்டுக்கு போயிட்டு தான் வேற எங்கேயாச்சும் போகணும்.நீ நேர என்னை கொண்டு ஹாஸ்டலில் விடப்போறேன்ன்னு சொல்ற,இது சரிதானா என்று மீண்டும் அவனை பார்த்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள் ஏஞ்சலின்…
அதானே பார்த்தேன்.இன்னும் ஒரு கேள்வியும் வரலையேன்னு என்று சலித்துக்கொண்டவன்,சரி அப்போ முதலில் நேர எங்க வீட்டுக்கு போவோம்.அங்க ஒரு அரைமணி நேரம் இருந்துட்டு அப்புறம் ஹாஸ்டலுக்கு போவோம் என்று அவளுக்கு ஐடியா கொடுத்தான் பிரஜின்…
அதுவும் சரிதான் அப்போ வண்டியை உன் வீட்டுக்கு விடு.போயி ஒரு டீயை குடிச்சுக்கிட்டு ஹாஸ்டலுக்கு போவோம் என்று அவளும் சம்மதம் கூற… எப்பா இந்த இரண்டு பேரையும் ஏத்திகிட்டு நான் படுற கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது என்று மனசுக்குள் விர் விர் என்று டூவிலரும் கத்தியபடி தனது பயணத்தை தொடர்ந்தது…
பயணம் செல்ல செல்ல மழைத்தூறலும் விடாமல் லேசாக அவர்கள் முகத்தில் நீரை வாரியிறைக்க இருவரின் உடலும் சாரலில் நனைந்து உடலோடு,மனமும் குளிர தொடங்க.,அவளையும் அறியாமல் அவளது கைகள் அவனது ஈரம் தோய்ந்த இடையில் இறுகப்பற்ற வண்டியை ஓட்டியபடியே ஏதோ ஒரு மாற்றம் அவனுள் உணர இருவர் உடலும் புல்லரித்து பூத்துப்போய் பயணம் தொடர சிறிது நேரத்துக்கு பிறகு வீட்டையும் அடைந்தனர்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-66
பாகம் 67-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)