என் மின்மினி (கதை பாகம் – 34)

சென்ற வாரம் நீ இங்கேயே டீ, காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-34.

en minmini kathai paagam serial

மனதிற்குள் ஓர் பயம்.என்ன ஆச்சு இவளை காணோம்.,இப்போ என்ன செய்வது என்று யோசித்தவன் கஃபேயில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணிடம் நடந்ததை கூற., உங்க கூட ஒரு பொண்ணு வந்தாளே அவங்களா????அவங்க கொஞ்சநேரத்துக்கு முன்னாடியே பின் வாசல் வழியே வெளியே போயிட்டாங்களே என்று அவள் சொல்ல அவனது மனசுக்குள் ஒரு கலகமே ஏற்பட்டுப்போனது..

அதிர்ந்து போனவன் கஃபேவை வெளியே ஓடிவந்து பார்த்தான்.அவள் அங்கு எங்கும் இல்லை. அதுக்குள்ளே எங்கடா போய்ட்டா என்று தனக்குள் பேசியபடி வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். வழிமுழுவதும் தேடிக்கொண்டே வந்தவனுக்கு தூரத்தில் அவள் ஓரிடத்தில் தனியே உக்கார்ந்து இருப்பது போலே தோன்றியது. உடனே வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அவளை நோக்கி நடந்தான். அருகில் போய் நின்று ஏஞ்சலின் என்ன சொல்லாம கொள்ளாம இங்கே வந்து உக்கார்ந்து இருக்கே. ஏன் இப்படி பண்றே என்று கோபத்துடன் அதட்டினான் பிரஜின்…

நீ மட்டும் என்ன பண்ணே.நான் என்ன பத்தி என்னோட குடும்பத்தை இழந்ததை பத்தி உன்னை நம்பி சொன்னேன். எல்லாம் கேட்டுட்டு மொக்கையா இருக்கு அப்படி இப்படினு என்னவெல்லாமோ சொல்றே. இவ்வளவு நீ சொன்ன பிறகு நான் ஏன் உன்கூட சேர்ந்து சுத்தனும்.

ரோட்டுல வெச்சு மானத்த வாங்காதே

அதான் உன்கிட்டே இருந்து விலகணும்னு நெனச்சு இப்படி செய்தேன் என்றாள் ஏஞ்சலின்… ப்ளீஸ் சாரி.நான் சும்மா விளையாடினேன் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான் பிரஜின்… மெதுவாக நிமிர்ந்த அவள் ஓவர்ஆக்ட்டிங் பண்றத கொஞ்சம் நிப்பாட்டு என்று கோபத்துடன் சொன்னாள் ஏஞ்சலின்… இப்படியெல்லாம் பேசாதே.,எனக்கு உன்கிட்ட விளையாட கூட உரிமை இல்லையா.நான் அப்படித்தா விளையாடுவேன் என்றான் பிரஜின்…

இருந்தாலும் நீ பண்ணது தப்பு.சாரி சொன்னா சரி ஆகிடுமா…போடா எல்லோரும் போலே தான் நீயும் என்று அலுத்துகொண்டாள் ஏஞ்சலின்… சரி இப்போ என்ன பண்ணனும் அப்படினு பொசுக்குனு அவளோட கைய புடிச்சு..ரோட்டுல வெச்சு மானத்த வாங்காதே. இத உன் காலாக நெனச்சு கேட்குறே.ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் என்றான் பிரஜின்…

ஹே விடு விடு என்ன பண்றே என்று தன் கோபத்தை மறந்து வெட்கத்துடன் எழுந்து ஓடினாள் ஏஞ்சலின். ஓடாதே இரு.நான் ஏதும் பண்ண மாட்டே அப்படினு பின்னாலே ஓடினான் பிரஜின். அவள் கேட்பதாக இல்லை.சிரித்தபடியே
அவன் கைகளில் சிக்காமல் ஓட முயன்றாள் ஏஞ்சலின்… ஹே வேணா ஓடாதே அப்படினு சொல்லிகிட்டே அவள் மேலாடையினை விளையாட்டாக லேசாக இழுத்தான் பிரஜின்… எதிர்பாரா விதமாக அவளது ஆடை கிழிந்து போகவும்., அவமானம் தாங்க முடியாமல் ஓடி வந்து அவனை இறுக கட்டி கொண்டாள் ஏஞ்சலின்…

என் மானத்தை காப்பாத்து

ஹே… என்ன பண்றே. ரோடுல எல்லோரும் பாக்குறாங்க விடு என்று அவளை தன்னிடமிருந்து விலக்கமுயன்றான் பிரஜின்… அப்போ என்னோட உடம்பு எல்லோரும் பார்த்தா பரவாயில்லையா., ப்ளீஸ் கொஞ்ச என் மானத்தை காப்பாத்து என்று கெஞ்சி கேட்டுகொண்டாள் ஏஞ்சலின்… ஓ சாரி ஏஞ்சல்.நான் விளையாட்டுக்கு தான் பண்ணிட்டே.மன்னிச்சுறு என்று அவளை அணைத்தவாறே வண்டிக்கு பக்கத்தில் கூட்டி சென்று.,இந்த ரெயின்கோட்ட இப்போதைக்கு போட்டுக்கோ என்று எடுத்து கொடுத்தான் பிரஜின்…

லேசான மழை

அவளும் ம்ம்ம் ஓகே என்று போட்டு கொண்டு வண்டியில் ஏறி உட்காரவும் வண்டியை ஸ்டார்ட் செய்தான் பிரஜின் செல்லும் வழியில் காற்று வீச வீச அந்த ரெயின்கோட்டில் இருந்து அவனது வாசம் அவளுக்குள் பலவித ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணியது அதை ரசித்தாவாறே பிரஜினுடன் பயணத்தை தொடர்ந்தாள் ஏஞ்சலின்…. லேசான மழை த்தூறல் தூற ஆரம்பித்து கனமழையாக பெய்ய துவங்கியது. நன்றாக நனைந்து போனான் பிரஜின்…
வண்டியை ஓரங்கட்டி விட்டு வேகமாக ஒரு பேக்கரியில் இருவரும் ஒதுங்கினர்…

குளிருது., ஒரு டீ சாப்பிடலாமா என்றாள் ஏஞ்சலின்.முழுசா நனைந்து போன நானே பேசாம இருக்கே உனக்கு என்ன(டி) டீ., நல்ல கோட் போட்ட குரங்கு போலே தானே இருக்கே என்று சிரித்தான்…

என்ன சொன்னே டி….னு தானே சொன்னே. திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின்…

டீ சாப்பிட்டு முடிக்கவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. மீண்டும் குளிரில் நடுங்கியவாறே பயணம் தொடங்கியது… குளிருது.கொஞ்சம் உன்ன கட்டிகட்டா என்றாள் ஏஞ்சலின் ..
ம்ம்ம்ம் எனக்கும் தான் ஓகே ஓகே கட்டிக்கோ கட்டிக்கோ என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-34.

– அ.மு.பெருமாள்

பாகம் 35-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. உஷாமுத்துராமன் says:

    அருமையாக செல்கிறது அடுத்து என்ன வருமென யூகிக்க முடியாத அருமையான தொடர்

  2. தி.வள்ளி says:

    கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. அருமை ..

  3. surendran sambandam says:

    கதை நன்றாக போகிறது