ஆரோக்கிய நீரோடை (பதிவு 4)
இலங்கை, தென் இந்திய உணவு தாவரங்களில் ஒன்று. இதன் இலையைக் கீரையாக முருங்கை பிஞ்சு, அதன் காய் அதிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவற்றை தென்னிந்தியர்கள் காலம் காலமாகவே தங்களுடைய பாரம்பரியமாக உணவில் பல வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர் – ஆரோக்கிய நீரோடை 4
இலையை கீரையாக தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கின்றனர்.
முருங்கைக்கீரையில் உடலின் எலும்பு , பற்கள் இவற்றின் வளர்ச்சிக்கு வேண்டிய சுண்ணாம்புச் சத்து மிக அதிகமாக உள்ளது.
இக்கீரையை நாம் வழக்கமாக உணவில் சேர்த்துக்கொண்டால் தலை முடியின் வளர்ச்சி க்குஉதவும்.நார்சத்தும்உடலுக்குக்கிட்டும்.
நீரிழிவு நோயாளிகளும், இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முருங்கைக்கீரையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான உ வகைகள் சிலவற்றை வாசித்து பயன்பெறலாம்
முருங்கை பொடி சாதம்
இதற்கு வேண்டிய பொருட்கள்
முருங்கைக்கீரை -1 ஒரு கைப்பிடி
சிறிய வெங்காயம் – 5
மிளகாய்வற்றல் – 1
கடலைப்பருப்பு – 1 தே.க
கடுகு , உளுந்து – 1தே.க
பெருங்காயப்பொடி – சிறிது
முருங்கைப்பூ – 1 கைப்பிடி
புழுங்கலரிசி சாதம் – 1 கிண்ணம்.(250கி.)
நெய் – 2 மே.க
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
முருங்கைக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிய விடவும். பிறகு வாணலியில் மிதமான சூட்டில் ஒரு சிறு கரண்டி நெய்யை விட்டு அதில் முருங்கைக்கீரையை போட்டு நன்கு முருகன் ஆகும்வரை பொரித்து தனியே எடுத்து வைக்கவும். அடுத்த சிறு கரண்டி நெய்யை வாணலியில் இட்டு கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை ,சின்ன வெங்காயம், கடலைப்பருப்பு, பெருங்காயப்பொடி இவைகளைப் போட்டு நன்கு தாளித்து சிவக்க விட்டு தனியே எடுத்து ஆறவிடவும். ஆறியதும் தாளித்தவற்றை கரகரப்பாக பொடியாக்கிக்கொள்ளவும். முருங்கை இலையையும் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.
கடைசியாக வாணலியை லேசாக சூடாக்கி அதில் முருங்கை பூவை 8 லேசாக சிவக்கும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய முருங்கைப் பூவுடன் அரைத்த பொடிகளை ஒன்றாக கலக்கவும். மிளகாய் வற்றலை தனியாக வதக்கி பொடியாக்கிக்கொள்ளவும். இப்பொழுது சூடான உதிரியாக வடித்த சாதத்தில் பொடியை சிறிது சிறிதாக கூட்டி கிளறிவிடவும் . பொடிகள் அவ்வளவையும் சாதத்தில் நன்றாக சேரும்படி நன்றாக கிளறிவிடவும் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உண்ணக்கூடிய ஊட்டம் மிகுந்த உணவு தயார். காரம் அதிகம் வேண்டுபவர்கள் கூடுதலாக ஒரு மிளகாய் வற்றலை சேர்த்துக்கொள்ளலாம்.
நெய் பிடிக்காதவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இந்த உணவை தயாரித்து உண்ணலாம். இதற்கு பொரித்த அப்பளம் ,கறிவேப்பிலை துவையல் போன்றவை பொருத்தமான இணை உணவுகளாகும்.
முருங்கைக்கீரை அடை
வேண்டியவை
கேப்பை மாவு – 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் – 7
மிள காய் வற்றல் – 2
முருங்கைக்கீரை – 1கைப்பிடி
பெருங்காயப்பொடி – சிறிதளவு
ந. எண்ணெய் – 5 மே.க
உப்பு – தேவைக்கு ஏற்ப
தண்ணீர் – 1/2 .கிண்ணம்
செய்முறை
முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து க்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். கீரையையும் நறுக்கி வைத்த வற்றையும், பெருங்காயப் பொடியையும் ,கேப்பை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இவற்றுடன் உப்பையும் சேர்த்து தண்ணீர் விட்டு மாவை, ரொட்டி செய்யும்பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு சிறிய துண்டு வாழை இலையில் ஒரு சிறு உருண்டை மாவை, லேசாக எண்ணெயில் தொட்டு ரொட்டி அளவிற்கு வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் லேசாக என்னை தடவி தட்டி வைத்துள்ள ரொட்டியை அதில் இட்டு, நன்றாக வெந்ததும், திருப்பிப் போட்டு, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து, தனியாக தட்டில் வைத்து, ஆறியதும் தேங்காய் சட்னியுடன் உண்ணலாம். நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கு, காலை அல்லது மாலை நேர உணவாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு இரண்டு நேர உணவாகவும் கொடுக்கலாம்.
கொலஸ்ட்ரால் தொந்தரவு காரணமாக உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த ரொட்டியை தயாரித்து உண்ணலாம். முருங்கைக் கீரையின் சத்துக்களை நீங்களும் பெற்று நலமுடன் வாழ இதைப்போன்ற இன்னும் சில உணவு குறிப்புகளை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம் – ஆரோக்கிய நீரோடை 4
– லட்சுமி பாரதி, திருநெல்வேலி
மிக ஆரோக்கியமான முருங்கைக்கீரையில்
அருமையான சமையல் குறிப்பு தந்த சகோதரி
லெஷ்மிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் …இம்மாத முருங்கைக்கீரை மிகவும் சுவையுடன் இருக்கும் (கார்த்திகை மாத கீரை கணவனுக்கும் கொடுக்க மாட்டாள் என்பது சொலவடை) ..எனவே வாசகிகள் இக்குறிப்புகளை இந்த மாதம் செய்து பார்க்கலாம்…இன்னும் அதிக சுவையுடன் இருக்கும்
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி