ஆரோக்கிய நீரோடை (பதிவு 1)

உணவு சார்ந்தே பல நோய்களை விரட்ட முடியும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கை. உடல் நலம் பற்றியும், எளிய சமையல் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடராக நீரோடை அறிமுகம் செய்கிறது. இதை ஒரு ஆரோக்கியத் தொடராக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வார இதழாகக் கருதலாம் – ஆரோக்கிய நீரோடை 1

உணவுக் குறிப்பு – பொன்னாங்கண்ணி தீஞ்சாறு

வேண்டுவன

இளம் பொன்னாங்கண்ணிக்கீரை – 2 கைப்பிடி
சீரகம் – 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் – 2
உப்பு – வேண்டிய மட்டும்
வெண்ணெய் – 1 தே.கரண்டி
தண்ணீர் – 300மி.லி.

செய்முறை

கீரையை நன்கு அலசி, மையாக அரைத்துக் கொள்ளவும். சிறிய வாணலியில், வெண்ணெயில், சிறிது எடுத்து, மிதமான தீயில் உருக்கவும். உருகி வரும் போது, சீரகம் சேர்த்து, அது பொரிந்து வந்தது ம், அரைத்த கீரை யையும் மிளகாய் வற்றலையும் கிள்ளி ப்போட்டு, 2 நிமிடம் வதக்கி யபிறகு அதில் தண்ணீர் சேர்த்து சுடவைக்கவும். நன்கு பொங்கி யதும் தீயின் அளவைக் குறைத்து உப்பைசேர்க்க வேண்டும்.
வாணலியினன் ஓரத்தில் நுரைவந்து 250 -மில்லி ஆக வற்றியதும் , மீதியுள்ள வெண்ணையை சேர்த்து, வாணலியை இறக்கி வைக்கவும். மிதமான சூட்டில் குடிக்க ஏற்ற தீஞ்சாறு உங்கள் முன் உள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு கண்பார்வைத்திறனைக் கொடுக்க வல்லது. இருவர் குடிக்கும் அளவு இங்கே கொடுக்க ப்பட்டுள்ளது – ஆரோக்கிய நீரோடை 1.

– லட்சுமி பாரதி, திருநெல்வேலி


cooking recipes

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.

  1. உயிர் காற்று. (பிராணன்)
  2. மலக்காற்று. (அபானன்)
  3. தொழில் காற்று. (வியானன்)
  4. ஒலிக்காற்று. (உதானன்)
  5. நிரவுக்காற்று.( சமானன்)
  6. தும்மல் காற்று. (நாகன்)
  7. விழிக்காற்று. (கூர்மன்)
  8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
  9. இமைக் காற்று. (தேவதத்தன்)
  10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

தசதசவாயுக்கள் பற்றி

  1. பிராணன் – மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
  2. அபானன் – சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
  3. வியானன் – தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.
  4. உதானன் – உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
  5. சமானன் – நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
  6. நாகன் – அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
  7. கூர்மன் – மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
  8. கிருகரன் – நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.
  9. தேவதத்தன் – சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
  10. தனஞ்செயன் – மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.

– நீரோடை

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    சகோதரி லக்ஷ்மி பாரதியின் சமையல் குறிப்பு அருமை. பொன்னாங்கண்ணிக் கீரை கண்ணுக்கு பலம் சேர்க்கும் ..நன்றி சகோதரி

    தசதச வாயுக்களைப் பற்றிய அதிக தகவல்கள் இதுவரை அறியாதது ..பயனுள்ள பதிவு