என் மின்மினி (கதை பாகம் – 31)

சென்ற வாரம் ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர். பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள் – en minmini thodar kadhai-31.

en minmini kathai paagam serial

நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறியது.டாக்டரின் உதவியுடன் ஒரு கிருஸ்தவ ஹோமில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தேன்.அடிக்கடி வந்து என்னை அரவணைத்து ஒரு தோழியாக அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தாள் நர்ஸ்…

காலங்கள் சக்கரங்களாக உருள வருடங்கள் ஓடின. பள்ளி, கல்லூரிப்படிப்பு எல்லாம் முடிந்து இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தேன்.

ஆனால் எனக்கு இன்னும் என்று தொடர ஆரம்பித்தவளை போதும் இதுவே என்னால தாங்க முடியவில்லை. இவ்வளவு சின்ன வயசுல எத்தனை கவலைகள் நிறைந்த வாழ்க்கை….வேணும்னா பாரு., வாழ்க்கையின் முதல் பகுதி சோகங்கள் நிறைந்ததாக இருக்கும் அத்தனை பேருக்கும் இரண்டாம் பகுதி மிக மகிழ்ச்சியாக இருக்கும்… அதனால நீ வருத்தப்படாதே ஏஞ்சலின் என்றான் பிரஜின்…

மெல்லியதாக வழிந்த கண்ணீரை துடைத்தப்படி நீ ஒப்புக்கு ஏதோ சமாதானம் செய்கிறாய். ஆனால் எனக்கு என் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை என்று கேலியாக அவனை பார்த்து சிரித்தாள் ஏஞ்சலின்…

சரி சரி அது நடக்கும் போது பாத்துக்கலாம்.எனக்கு ஒரு சந்தேகம்?? உன் குடும்பத்தில் நீ எல்லோரையும் இழந்து நிற்கிறாய். ஆனால் அதற்கு சம்மந்தப்பட்ட யாரையும் நீ புகார் கொடுத்து உள்ளே தள்ளனும்ணு உனக்கு தோன்றவில்லையா என்றான் பிரஜின்.

மனசு நிறைய கோபம் இருக்கு.ஆனால் அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் அவர்களை தண்டிக்கவேண்டும்.இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் அவன் பார்த்துகொள்வான்… என்ன ஒண்ணு அவர்கள் முன்னாடி நான் நல்ல வாழ்ந்து காட்டவேண்டும் என்றாள் ஏஞ்சலின்.

மனசு போலே வாழ்க்கைணு சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் இனி தான் அதை பார்க்க போகிறேன். உன் மனசுக்கு நாம் நல்ல சந்தோசமாக இருப்போம் என்றபடி அவள் கையை பிடித்தான் பிரஜின்.

பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின்… – en minmini thodar kadhai-31

– அ.மு.பெருமாள்

பாகம் 32-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. Kavi devika says:

    வாழ்த்துகள்….

  2. தி.வள்ளி says:

    வாழ்க்கையின் முன்பகுதி சிரமப்பட்டால் பின்பகுதி நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் அதை ஆசிரியர் அழகாக கையாண்டிருக்கிறார். கதை தொடரட்டும் ஏஞ்சலின் பிரஜன் காதலும் தொடரட்டும் வாழ்த்துகள்…..

  3. Rajakumari says:

    கதை சூடு பிடிக்கிறது.