என் மின்மினி (கதை பாகம் – 43)
சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43
தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில் பட்டு தெறிக்க,தெறித்த சிவப்பினிலே உதடுகள் மினுமினு க்க,நிலவொளியின் குளிரினிலே அவன் கேசம் ஜொலி ஜொலிக்க,மின்சாரம் பாய்ச்சும் மெல்லிய மீசையும், கந்தக காந்த கண்க(ள்)ளோ அவள்தனை இழுக்க, மீளமுடியாமல் மீண்டு எதிரே நின்று கொண்டிருந்த டெம்போ வில் போய் தன்னை தலையினை முட்டி கொண்டாள் ஏஞ்சலின்…
தான் முட்டிகொண்டதை எல்லோரும் பார்த்து இருப்பாங்களோ என்று வெட்கப்பட்டு கொண்டே ஓட முயன்றாள்.,
இருந்தாலும் யார் பார்த்தா என்ன?முதலில் இவன் பார்த்துருப்பானோ என்று சந்தேகத்தில் திரும்பி பார்த்தாள் அவள்…
லேசாக சிரித்தவாறே தன் கையால் தலையை அடித்து கொண்டு.,இத கூட கவனமா பார்த்து போக மாட்டே…என்ன போ என்று தன் கண்களை அசைத்து சைகையினால் கேட்டான் பிரஜின். நாக்கை கடித்தவாறே., இவன் வேற பார்த்து தொலைச்சுட்டானா என்று வெட்கப்பட்டு கொண்டே அவன் பார்வையில் இருந்து ஓடி மறைந்தாள் ஏஞ்சலின்…
அவள் புன்னகையில் மயங்கிய அவனுக்கு சாப்பிடும் எண்ணம் கூட மறந்து போனது.அவள் நினைவிலே வீட்டுக்கு சென்றவன் பொத்தென்று மெத்தையில் விழுந்தான்.தூங்காமலே அவளை பற்றி கனவில் மிதக்க மிதக்க தூக்கம் அவன் கண்களை தழுவியது…. நன்றாக தூங்கி போனவன்…….
ஏன் என்கிட்டே பேச தயங்குறே. சரி நேரில் தான் பேசமுடியல.என் கனவில் கூட வரமாட்டியா.முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன்.நிலவாக நீ வருவாய் என்று, வருவாயா என்று உளற ஆரம்பித்தான் பிரஜின்…. – en minmini thodar kadhai-43
– அ.மு.பெருமாள்
பாகம் 44-ல் தொடரும்
கதை சுவாரசியமாக நகர்கிறது