கும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்
இந்த சமையல் பதிவின் வாயிலாக மதுரை சௌம்யா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kummayam seimurai
உளுந்து – 8 உழக்கு
பாசிப்பருப்பு – 4 உழக்கு
பச்சரிசி – 1 உழக்கு
வெறும் இருப்புச்சட்டியில் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, திரித்து, சலித்து, வைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
கும்மாயமாவு – 1/2உழக்கு
அச்சு வெல்லம் – 1/2 உழக்கு
கருப்பட்டி – 3/4 உழக்கு
நெய் – 200 கிராம்
செய்முறை
இருப்புச் சட்டியில் சிறிது நெய் விட்டு மாவை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.வெல்லம்,கருப்பட்டி, 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்த பின்பு வடிகட்டி கொள்ள வேண்டும்.பின்பு ஆறின பாகில் வறுத்த மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மொத்த நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து கிளறிக் கெட்டியானதும் இறக்கி வைத்து அதன் மேல் சிறிது நெய் தடவவும் – kummayam seimurai.
என் சமையல் பதிவை வெளியிட்டதற்கு நன்றி
அருமை அருமை. புதுவிதமான பலகாரம்.நன்று. வாழ்த்துகள்.