என் மின்மினி (கதை பாகம் – 5)
சென்ற வாரம் – இவன் காலையில் அடைந்த ஏமாற்றம் எல்லாம் அவனுள் பறந்து போனது , எதோ சொல்லணும் என்ன சொல்ல போகிறான் – en minmini thodar kadhai-5.
ஹே இன்னும் என்ன சும்மா சாதத்தை வெறித்து பார்த்து எதோ யோசிச்சுகிட்டே இருக்கே…எதுவா இருந்தாலும் பட்டுன்னு கேளு
என்றாள் பப்பு…
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நாம பார்த்து பழகி ரெண்டு நாள் கூட முழுசா ஆகல, அதுக்குள்ளே இந்த மாதிரி பேசுறானேனு நெனெச்சுகிட்டேனா என்று தயக்கத்துடன் தன் நாவில் ஊறியிருந்த உமிழ்நீரை மெதுவாக விழிங்கினான் அச்சு.
இதோ பாரு… ட்விஸ்ட் வெச்சு பேசறதுக்கு ஒரு லிமிட் இருக்கு… இப்போ சொல்ல போறீயா இல்லையா??? இல்லனா பேசாம இரு என்று பப்பு கோபத்துடன் சொல்லும் போதே வெளியில் மழைத்துளி ஒவ்வொன்றாக தூற ஆரம்பித்தது…
அந்த இடம் முழுவதும் மண்வாசனை நிறைய.., ஐய்யோ மழை வந்துவிட்டது. ஆபீஸ்க்கு உள்ளே சீக்கிரம் போகணும் என்று தான் தயங்கி தயங்கி சொல்ல வந்ததை கூட சொல்லாமல் மழையில் நனைந்தவண்ணம் ஓடிச்சென்று ஆபீஸ்க்குள் புகுந்தான் அச்சு…
ச்சே… இவன் ஏன் இப்படி இருக்கான். என்ன சொல்ல வந்தான்னு சொல்லி தொலச்சுக்கிட்டு போகவேண்டியது தானே… இப்போ
பாரு என்னமோ ஏதோனு என் மனசு கிடந்து தவிக்கும் என்றவாறு தனக்குத்தானே புலம்பிகொண்டு மழையில் நனைந்தபடியே
ஆபீஸ்க்குள் நுழைந்தாள் பப்பு…
அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,
அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து கொள்ளவே இல்லை…
நேரம் கடகடவென சுழல இரவுநேரமும் ஆனது.
தூக்கம் கண்களை சொருக மெத்தையின் அருகில் வந்து பொத்தென படுக்கையில் விழுந்து கண்களை மூடிய பப்புவிற்கு தீடீர்னு
அச்சுவின் நினைவு வரவே சொக்கிய தூக்கம் இல்லாமலே போனது…
என்ன சொல்லணும்னு சொல்லியிருப்பான் என்று மூளையினை போட்டு திருக ஆரம்பித்து இறுதிவரை ஏதும் அறியாமல்
அசதியில் தூங்கியே போனாள் பப்பு… – en minmini thodar kadhai-5
பாகம் 6-ல் தொடரும்
அருமை… அடுத்த பாகத்திற்கு காத்திருப்பேன் 😍
இப்படிச் சட்டுன்னு ‘தொடரும்’ ன்னு போட்டு விட்டீர்களே?
என்ன சொல்ல நினைத்தான் அச்சு…குழப்பத்தில் பப்பு…இளமை ஊஞ்சலாடுகிறது…