என் மின்மினி தொடர்கதை (பாகம் – 65)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-65
En minmini thodar kadhai
ஐய்யோ என்ன பண்ற… கையை விடு…பட்டுன்னு கைய புடிச்சு முத்தம் கொடுத்துட்டீயே…எல்லோரும் நம்மையே வெச்ச கண் வாங்காம பார்க்காங்க… ஒரு மாதிரி இருக்கு என்று அவனை பார்த்து அவள் வெட்கப்பட ஏன்??? யார் பார்த்தால் என்ன? இது உனக்காக கொடுத்த முத்தம் இல்லை. உன் மனதைரியத்துக்காக நான் கொடுத்தது.யார் கேட்டாலும் நான் இதை நான் சொல்லுவேன் என்று அவளைப்பார்த்து பல்லை இழித்தான் பிரஜின்…
சரி சரி இதான் சாக்குன்னு கையை புடிச்சுக்கிட்டே இருப்பீயே என்று அவளும் அவனை வம்பிழுக்க இருவருக்குள்ளும் ஓர் இனம் புரியாத உணர்வு வந்து சென்றது… சுதாரித்து கொண்டவர்களாக இருவரும் வெடுக்கென்று கைகளை எடுக்க., ஏஞ்சலின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்… கடவுள், மதம் ன்னு எதையோ சொல்ல வந்தீயே இப்போ சொல்லு…உன்னைப்பத்தியும் நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் இல்லையா என்றாள்…
அதுவும் சரிதான் நாம பார்த்த நாளில் இருந்து உன்னைப்பத்தி மட்டுமே தான் நான் கேட்டுருக்கேன்.என்னைப்பத்தி நானும் சொன்னதில்லை,நீயும் கேட்டது இல்லை என்றான் பிரஜின்… லேசான புன்முறுவலுடன் அதான் இப்போ கேட்டுவிட்டேன் இல்லையா.,சொல்லு இப்போ உன்னைப்பற்றி என்று ஆவலுடன் கன்னத்தில் கைகளை ஊன்றியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலின்…
சரி சொல்றேன் என்று மெதுவாக அவன் தன் வாயை திறக்கவும் மழை தன் தூறலை மெதுவாக இருவர் மேலேயும் தெளிக்க ஆரம்பித்தது… என் கதையை நான் ஒரு நாள் பொறுமையாக சொல்றேன்,இப்போ மழை பெரிதாவதற்குள் உன்னை பாதுகாப்பாக கூட்டிட்டு போனும், சீக்கிரம் வா கிளம்பி என்று அவளை வேகப்படுத்தினான் பிரஜின்… அவளும் அதற்கு மேலே ஏதும் பேசதவளாய் கிளம்ப ஆரம்பித்தாள்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-65
பாகம் 66-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)
பிரஜன் கதை என்ன அறிய ஆவலாக உள்ளது