இஞ்சி நெல்லித் தொக்கு
தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் சமையல் துறைக்கு வழங்கிய குறிப்பு, “இஞ்சி நெல்லித் தொக்கு” செய்முறை – inji nellikai thokku.
தேவையான பொருடகள்
இஞ்சி – 50 gm.
நெல்லிக்காய் (பெரியது) – 5.
மிளகாய் வற்றல் – 5
உப்பு – தேவையான அளவு.
நல். எண்ணெய் – 2 குழிக்கரண்டி
வெல்லம் – சிறிதளவு.
Inji nellikai thokku செய்முறை
நெல்லி காய்களை நறுக்கி விதையை நீக்கிக் கொள்ளவும். இஞ்சியை நன்கு கழுவி தோலுரித்து துண்டுகள் ஆக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, நெல்லி வற்றல் அனைத்தையும்
சேர்த்து வதக்கி ஆறியபின் நன்கு அரைக்கவும்.
பிறகு நல் எண்ணெய் விட்டு வழக்கம் போல் தாளித்து அரைத்த கலவையை சோ்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில்.வெல்லம் சேர்த்து இறக்கவும்.
ஆரோக்கியமான இஞ்சி நெல்லி தொக்கு தயார், இட்லி தோசைக்கு ஏற்ற சட்னியும் கூட…
நன்மைகள்
- எதிர்ப்பு சக்தி கூடு்ம்
- பசியைத் தூணடும்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
உபயோகம் உள்ள நற்பதிவு….
உடலுக்கு நலம் பயக்கக் கூடியது.
ஜீரண த்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அருமை
பகிர்தலுக்கு நன்றி! பசியின்மை, செரிமான கோளாறுகளுக்கு மிகவும் நன்று..