கவிதை போட்டி 2021_5

நீரோடை கவிதை போட்டி நான்கு சிறப்பாக நடைபெற்றது. முடிவுகள் போட்டி நான்கு மற்றும் ஐந்து சேர்த்து ஜூன் முதலில் வெளியிடப்படும் – kavithai potti 5

போட்டி 2021_4 பற்றி வாசிக்க

போட்டி 2021_4 பற்றி வாசிக்க

கீழ்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

  1. மே தினம்
  2. அன்னையர் தினம்
  3. கொரோனா இரண்டாம் அலை
  4. திருக்குறள் பற்றி ஒரு கவிதை
  5. எழுதாத தேர்வு

[Comment your Tamil poems to participate] Admin ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் ஒன்று அல்லது இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 5.

போட்டி மே 31 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து ஜூன் முதல் வாரத்திற்குள் அறிவிக்கப்படும்.


போட்டிக்காக அல்லாமல் நேரடியாக கவிதை, கட்டுரை, கதைகள் எழுத நினைப்பவர்கள் info@neerodai.com அல்லது neerodaimahes@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

குறிப்பு: 1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் 99XXXXX@neerodai.com என்று தங்களின் கைபேசி (mobile) எண்ணை குறிப்பிட்டு மின்னஞ்சல் பகுதியை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 அல்லது neerodaimahes@gmail.com / info@neerodai.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும்.

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

30 Responses

  1. S. V. Rangarajan says:

    கொரானா இரண்டாம் அலை. கொரானா என்றால் என்ன என்று தெரிவதற்குள் வந்தது இரண்டாம் அலை மக்கள் அரசு சொன்னதை ஏன் கடைபிடிக்க மறுக்க வேண்டும் என்பது புரியாத புதிர் அபராதம் என்றால் கோபப்படும் மக்கள் முகமூடி அணிய தயக்கம் காட்டியதின் விளைவே இரண்டாம் அலை மக்களின் விழிப்புணர்வு எப்போது மாறும் என்று தெரியவில்லை

  2. Vignes says:

    பொட்டுகன்னி பொறந்திருந்தா,
    ஊரே பொட்டபுள்ள வாசம்,
    பொழப்பு கெட்டு பேச,
    கருப்பு சட்டை
    கந்தனுக்கு
    பகுத்தறிவு பாசம்,
    சாதி சனம் சலிப்புகொட்ட,
    சளைக்கவில்லை
    ஆம்புளைக்கு
    எம்புள்ளைனு,
    மெத்த மெத்த படிக்கவச்சி,
    மெய்ய பொய்ய உணர வச்சி,
    கைய வீசி தலை நிமிர,
    கடைசி பரிட்சை வந்துருச்சாம்,
    எக்களித்த ஏளனத்தையும்,
    கொக்கறித்த கூட்டுறவையும்,
    கொன்னு புதைச்சி விதச்சிட்டேன் மருத்துவச்சினு அப்பனுக்கு ஆசை கொள்ளல,
    விடிஞ்சா முடிஞ்சிடும்னு
    வீராப்பா உறக்கம் பாத்த கந்தன்,
    எழவும் இல்ல,
    பொட்டுகன்னி பரிட்சை எழுதவும் இல்ல…..

    ஊரு வாய்,
    தெருநாய், உச்சி கொட்டி முடிஞ்சிருச்சி…

    ….எழுதாத தேர்வு…..

  3. மணிகண்டன். சி says:

    2.அன்னையர் தினம்
    அவள் மனவலிமையை எடை போடும் படிகற்கள் அவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி சொல்லியாக வேண்டிய கட்டாயம் … அனல் பறக்க வறண்டு வரும் காற்று
    வியர்வை வட்டத்தில் ஒளியாய் விழும் சூரியன் நெருநெருவென முகத்தில் ஒட்டிய புழுதி கால்நடையாய் பாதை உணர்வு இல்லாமல் சிந்தைக்குள் ஒலிப்பது என்னவாக இருக்கும்.பொறுப்பற்று சுற்றித்திரியும் இரண்டு மகன்களை பற்றிய கவலைகள் ஒருபுறமிருக்க உழைப்பிற்கேற்ற கூலியில்லாது கையாளும் தன்மையற்று கஷ்டப்படும் கணவன் பற்றிய கவலைகள் மறுபுறமழுத்த கல்யாண வயதில் இருக்கும் பெண் பற்றிய பெருஞ்சுமைகளுக்கு மத்தியில் தலையில் இருக்கும் பழக்கூடையின் பாரம் என்ன பெரிதான சுமைகளை தந்து விடும்.

  4. மணிகண்டன். சி says:

    2.அன்னையர் தினம்.

    அவள் மனவலிமையை எடை போடும் படிகற்கள் அவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி சொல்லியாக வேண்டிய கட்டாயம் … அனல் பறக்க வறண்டு வரும் காற்று
    வியர்வை வட்டத்தில் ஒளியாய் விழும் சூரியன் நெருநெருவென முகத்தில் ஒட்டிய புழுதி கால்நடையாய் பாதை உணர்வு இல்லாமல் சிந்தைக்குள் ஒலிப்பது என்னவாக இருக்கும்.பொறுப்பற்று சுற்றித்திரியும் இரண்டு மகன்களை பற்றிய கவலைகள் ஒருபுறமிருக்க உழைப்பிற்கேற்ற கூலியில்லாது கையாளும் தன்மையற்று கஷ்டப்படும் கணவன் பற்றிய கவலைகள் மறுபுறமழுத்த கல்யாண வயதில் இருக்கும் பெண் பற்றிய பெருஞ்சுமைகளுக்கு மத்தியில் தலையில் இருக்கும் பழக்கூடையின் பாரம் என்ன பெரிதான சுமைகளை தந்து விடும்.

  5. வீ.ராஜ்குமார் says:

    #கொரோனா_இரண்டாம்_அலை!

    முதல் அலையைத் தலைமுழுகி எழுந்தோம்!
    மூச்சுவிட்டோம்! அடுத்த அலை ஆரம்பிக்க அயர்ந்தோம்!
    சுனாமியாய் எழுந்த அலை சுருட்டியது உயிரை!
    இந்தியாவின் சாபமோ
    கும்பமேளாவில் குளித்தது!
    தேர்தல் தேரை இழுத்து வந்து
    நடுத்தெருவில் நிறுத்தியது!
    திருவிழா என்றால் ஓடிவரும் திரைகடல் கூட்டமோ
    தடுப்பூசி என்றதும் திடுக்கிட்டு நின்றது!
    ஆக்சிஜன் இல்லாமல் தில்லி அலறத் துவங்கியது!
    பிணக்கூட்டம் எரித்த புகைமூட்டத்தைச் சுவாசித்தது!
    மரண ஓலம் இமயத்தின் மடியெங்கும் ஒலித்தது!
    வாழவும் வழியில்லை எரிக்கவும் இடமில்லை
    படுக்கை எங்கே? ஊசி எங்கே?
    கைகளை நீட்டிக் கதறுது இந்தியா!
    என்று தீருமோ இந்தத் துயரம்!
    ஆக்சிஜன் அற்றுப்போய் கொரானா
    மூச்சுத்திணறி மடியாதா!
    ஆதிசக்தி தாயே!
    அருள்புரிந்து எமைக் காப்பாயே!
    தேடியுனைச் சரணடைந்தோம்
    எங்கள் தேசத்தைக் காப்பாயே!

  6. வேல் says:

    மே தினம்

    உழைக்கும் எண்ணத்தை மனதில் சுமந்து !
    வியர்வை துளியினை முதலீடாக
    வைத்து !
    இரவு பகல் பாராது அயராது உழைத்து!
    விளைச்சலில் மகிழ்ச்சி பொங்கும் !
    பாய்ச்சலில் கரம் கொண்டு !
    ஓடை வழியில் பெருக்கெடுத்த வெள்ளம் போல !
    உந்தன் மனமும் அலைபாயுதே விவசாயத்தை நினைத்து !
    ஓய்வு பாராத மானிட நெஞ்சம் !
    ஒற்றை அடி பாதையில் துணிச்சலோடு !
    வீடு கரை சேர்ந்த அந்தி பொழுதில் !
    மலர்ந்த புன்னகை பிரவசித்த மன்னன் !
    தன் தாயகம் போற்றும் உழவன் !
    தன் பசியை மறந்த வண்ணம் பிறரின்
    பசியை போக்கிடும் உயர்ந்த உள்ளம் !
    மாபெரும் கலைஞன் மற்றவர் மனதில்
    விளைஞன் !
    இறைவன் வாழ்கின்றான் உழைப்பாளி
    இதயத்தில் !
    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு
    விதமாக உழைத்தவரின் வண்ணம் !
    ஆயிரம் பொற்காசு சமர்பித்தாலும்
    அவனது தியாக உணர்வுக்கு
    வியத்தகுமா !
    இத்திரு நாளில் உழைப்பினால் உயர்ந்தோர்!
    இத்திருநாட்டின் பெருமை புகட்டினை
    வியந்தோர் !
    மாசற்ற இப்புண்ணிய பூமியில் பூமிதாயும்!விளைநிலத்தை… பாதுகாப்பவனை வாழ்த்திடுவாள் !
    மண்ணின் மைந்தனே
    உழைப்பின் நாயகனே !
    என்று…

    வேல்…

  7. வேல் says:

    அன்னையர் தினம்

    அன்பில் கலந்த உயிரான உறவு !
    அடிமனதில் ஏக்கம் கொண்டு !
    ஆயிரம் கனவுகள் மெய்ப்பட்டு பலன்
    அளித்திடுமே !
    சந்தோச சாரலில் மிதக்கும் வாழ்வு !
    ஆர்பரிக்க்கும் எண்ணத்தின் விடியலோ!
    உறுதி செய்த பின்பு தன்னை
    ஊக்கம் படுத்திய விடிவெள்ளியே !
    மாதம் கடந்து செல்ல செல்ல
    மகிழ்ச்சியில் அரவணைத்திடுவாள்!
    தன்னுள்…
    கண்ணில் பட்ட பாசம் எல்லாம் !
    கனவின் வழியாய் மனதை! ஆர்ப்பரிக்கின்றதே …
    பெற்றெடுக்கும் நாளில் தான் !
    பட்டபாடு பெரும் துயரத்தின் வேதனை
    முதல் அழுகுரலிடம் சரணடையுமே !
    தன் கவலைகளை மறந்து குழந்தையை
    புன்னகை சிந்தும் விதத்தில் ஆனந்த படும் மனமே !
    தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் !
    காணகிடைக்கும் போது பேரின்பம் !
    சொல்ல துடிக்கும் வார்த்தைகள் !
    சந்தோசத்தின் உச்சியில் உற்சாகமாக
    சிறகடிக்கின்றது !
    வளர்ச்சியின் போது கண்ட கனவுகள் !
    வளமான எதிர்காலம் நோக்கி பயணம்
    செய்யும் !
    பார்த்து பார்த்து பாசம் காட்டும் !
    அன்பில் கலந்த அன்னையே !
    என்றென்றும் உன் அன்புடன் தமிழகமே….!
    ஆனந்தமான தருணத்தில் அன்பின் பயணியாய்!
    அன்னையர் தினத்தில் பாசத்தை
    பகிர்ந்திடுவோம்!

    வேல்…

  8. வேல் says:

    எழுதாத தேர்வு :

    அறியா பருவம் முதல் எல்லாம் அறிந்து!
    ஆறறிவு பெற்ற மனிதனாய் !
    சிந்தனை செய்யும் மனதினிலே !
    சந்திக்க தூண்டும் புகழினை!
    தேர்வை கண்டு ஆசை நிறைவேறும் தருணம் …
    தன்னை நெருங்கிய பொழுது …
    பாலகன் கண்ட கனவு பலித்திடுமா! இன்றைய கால கட்டத்தில் …
    தந்தை கனவை நிறைவேற்றும் எண்ணத்தில்!
    பட்டப் படிப்பு படிப்பதில் நாட்டம் அதிகம்
    அவனை ஈர்த்திடவே !
    ஊரார் போற்றும் உயரிய பட்டத்தோடு !
    தாய் தந்தை உள்ளம் மகிழ்ச்சியை கண்டு களித்திடவே…
    எதிர் கால கனவு நிகழ்ந்திடுமா
    வெற்றி மாலை நம்மை சூடிக்கொள்ளுமா! என்ற அச்சுறத்தல் தோன்றுகின்றதே…!
    இக்காலத்தை நினைத்து…
    அதிக மதிப்பெண் எடுத்து
    ஆயிரம் பதக்கம் வெல்ல நினைத்த
    என்னை …
    புலப்பட வைத்தது என் இலட்சியத்தை …
    நினைத்தது நல்லமுறையில் நடந்து ஆக வேண்டும் !என்று மனது துடிக்கிறது …!
    கண்ணில் மல்கின்றது கண்ணீர் …!
    விருப்பத்தின் வழியில் வாழ நினைப்பது என் தவறா….
    வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அடியெடுத்து வைப்பது என் தவறா ….
    காலம் என் இலட்சிய கனவை புறகணித்ததே ….!
    வெல்லும் காலம் வரும் வரை காத்திருப்பேன் ! அதில்
    வெற்றி நடை போடுவேன் …!
    விடாமுயற்சியின் தங்க பதக்கத்தோடு
    வீராங்கனாய் ஆக வென்று காட்டுவேன்
    இப்பாரத நாட்டில்…!!!இப்படி எல்லாம்
    எழுதாத தேர்வு என்னை முயற்சி எடுக்க செய்தது தூண்டும் கோலாக…!

    வேல்…

  9. வேல் says:

    திருக்குறள் பற்றி ஒரு கவிதை :

    அகர முதல் எழுத்தில் ஆரம்பித்து !

    ஆதி பகவன் வழியில் வித்தாய் விதைத்து !

    இரண்டடிகளில் குறளை எளிய நடையில் எடுத்து உரைத்து !

    ஈரடி வெண்பாக்களை கல்வியில் சிதைத்து கற்பியலில் வழிநடத்தி !

    உலக பொது மறையில் சிறந்த குறளாக சிற்றம் பதிந்து !

    ஊரார் போற்றும் பாடப்புகழோடு திகழ்ந்து !

    எழுத்தாணியின் மூலம் வரிகளை தொகுத்து !

    ஏற்றத்தின் பெருமையை உன் அடியில் கண்டோம் விளக்கத்தின் பொருட்டாக !

    ஐயத்தை துறந்த உந்தன் ஒளி எனும் ஒழியியல் படைப்புகளோடு !

    ஒற்றுமையை புகட்டும் குறளின் வலிமையோடு !

    ஓசையின் நிமித்தம் அடிச் சீர் எனும் புகழின் கொடை வள்ளலாய் !

    ஔ என்ற வார்த்தை உணர்த்தும் உன் எழுத்து வரிகளோடு…!!!

    திகட்டப்படாத வரிகளின் தேன் கலந்த
    மொழியில் !

    தன்னிகரற்ற குறளின் வாழ்வியல் !

    மொழிகளை துறந்த பொதுவியல்

    ஒட்டு மொத்த தமிழ் குறளின் வளமையை உணர்த்த !

    ஓங்க செய்து ! வாழ்க்கை எனும் அத்தியாயத்தை புகட்டும் ஒரே நூலியல்…!

    அஃதே திருக்குறளின் படைப்பு …!!!

    * தாய் அன்புக்கு ஈடாகும் உணர்வின் பந்தத்தோடு *

    * தமிழ் தாய் மொழிக்கு இந்திய பாரத நாடு !
    இணைப்பின் பிணைப்புகளோடும் !
    திருக்குறளின் அரும்புகழோடும் …!

    வேல்…

  10. வேல் says:

    கொரோனா இரண்டாம் அலை :

    முதல் அலையில் மீண்டு மனது வெளி வரும் முன்!

    இரண்டாம் அலை தாக்கத்தை ஏற்படுத்த விரைகிறது !

    தத்தி தழுவும் தங்க மீன்களான மனிதர்களிடம் !
    தடயங்கள் இல்லா பலவீனத்தை சந்திப்பது நம் பலமான வீறுநடையே !

    பாடங்கள் புகட்டும் மனிதர்களிடம் !
    போராட்டம் வேண்டும் சகமனிதரிடம்!

    வென்று காட்டும் உன் சக்தியோடு !
    வளமான எதிர்காலம் நோக்கி சாகசத்தோடு புறப்படு!

    அலையை கண்டு சோர்ந்து விடாதே!
    ஆவேசத்துடன் பயணித்திடு! வெற்றி
    வாழ்க்கையை…

    வாழ்வில் அச்சம் ஒரு அங்கமாக இருக்கலாம்! ஆனால்…
    வாழ்வே அச்சமாக சிறிதும்! மாறிவிடக்கூடாது என்றும்…

    அச்சாரமாக வாழ்தல் மிகச் சிறப்பு !
    அடம் கொண்டு எதிர்த்திட முயன்றிடு !

    பிடிப்பு இருப்பது உந்தன் அத்தியாயம்!
    பல இலட்சியத்தை தூண்டுவது உன் சாகத்தியம் !

    படைப்பின் புகழ் எந்தன் வழிகாட்டியே! பலத்தை புறகணித்திடுவோம்! நம்மை அச்சுறுத்தும் இடமிருந்து…

    நம்மை துன்புறுத்தும் தீய எண்ணத்திடம் !
    நாளும் போற்றிடுவோம் ஆதிபகவானே துணை என்று…!!!

    வேல்…

  11. Rohini says:

    கருவறைப் பெட்டகத்தில்
    பத்திரமாக பாதுகாத்து
    பக்குவமாய் பத்தியமிருந்து
    என்னைப் பெற்றெடுத்தவளே!

    உணவிற்கு உதிரப்பாலையும்
    உறக்கத்திற்கு உன் நெஞ்ச
    மஞ்சத்தையும் கொடுத்து
    வளர்த்தவளே!

    நிழலாய் இருந்து ,இமைகள்
    கண்களை காப்பது போல்
    காத்தவளே!

    நான் தாயானபோது உணர்ந்தேன்
    தாய்மையின் உன்னதத்தை….
    அர்த்தங்களுக்கு அடங்காத
    அகராதியை…
    இறைவனுக்கே இணையில்லாத
    வார்த்தையை….

    அன்னையர்கள்தினமும்
    உதித்துக்கொண்டேதான்
    இருக்கிறார்கள்
    கண்ணனின் யசோதைகளாய்
    ராமனின் கோசலைகளாய்!
    _______________________________
    தினம் தினம் அன்னையர் தின வாழ்த்துக்கள்!🌹🌹🌹

  12. Maheswaran says:

    குறியீட்டு காதல் …

    முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்த
    என் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)
    உனை கண்டதும் …

    அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) என
    வளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(‘)
    மேன்மைப்பெறும் என இருந்தேன் …

    அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்
    என்ற என் நினைவு நீ போட்ட
    சதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது …

    முன்னோக்கிய சாய்வு குறியாய்(/)
    உன் பால் ஆட்பட்ட மனது
    பின்னோக்கிய சாய்வு குறியாய்(\) ஆனது
    நீ என்னிடம் இருந்து விலகிப்போனதும் …

    அடிக்கோடிட்டு ( _ )நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம்
    பெருக்கல் குறியாய்(*) என்னை குழைத்து
    வாழ்வின் இன்பத்தை வகுத்தல்(/) குறியாய்
    வட்டி வதைத்தது …

    ஆச்சரியக்குறியாய்(!) மாறிடும் என் வாழ்வு
    என்றிருந்த என்வாழ்வு ஏனோ இன்று
    கேள்விக்குறியானது (?) உன்னாலே …

    இவன்

    ம.கோ (மகேஸ்வரன்.கோ )

  13. Maheswaran says:

    இயற்கை தாயே இரக்கம் கொள் …

    கொத்துகொத்தா போகுதம்மா
    எம்மக்க கொரோனாவில் சாகுதம்மா
    காப்பாத்த யாருமில்ல
    கண்ணெல்லாம் கலங்குதம்மா …
    இன்னுமா இரக்கம் வரல
    இயற்கை தாயே இன்கரம் நீட்டி
    எம்மை இயல்புக்கு திருப்பம்மா …

    எப்போதான் தீருமம்மா
    எங்க வாழ்க்கை மாறுமம்மா
    எல்லாம் போன பின்னே
    எங்க உசுரு மட்டும் எதுக்கு சும்மா …

    எட்டி எட்டி பாத்த மக்க
    எட்ட நின்னு பாத்த மக்க
    யாரையும் காணலையே
    கதறி அழுவும் மக்க
    கல்லாகி போகும் முன்னே
    கைகொடுத்து காப்பாத்த வாருமம்மா…

    எல்லாம் தப்புனாலும்
    தண்டிப்பு தாங்கலம்மா
    தருதலையா திருஞ்சிபுட்டோம்
    தப்பத்தான் உணர்ந்துபுட்டோம்
    தாயே நீ மனசு வைச்சா
    தப்பிச்சிடும் எங்க மக்கா …

    கொத்துகொத்தா போகுதம்மா
    எம்மக்க கொரோனாவில் சாகுதம்மா
    காப்பாத்த யாருமில்ல
    கண்ணெல்லாம் கலங்குதம்மா …
    இன்னுமா இரக்கம் வரல
    இயற்கை தாயே இன்கரம் நீட்டி
    எம்மை இயல்புக்கு திருப்பம்மா …

    கட்சி கூட்டமுன்னு
    களிப்பா கண்டபடி திரிஞ்ச மக்க
    காத்து கிடைக்காம கண்மூடி
    கிடக்குதம்மா …
    கூட்டத்துக்கு கூப்பிட்டவன்
    கூலி காசுக்கு கத்தினவன்
    ஒருத்தனையும் காணலியே
    காப்பாத்த ஆளின்றி
    கதறி கிடக்குதே எம்மக்கா …

    கையத்தான் கழுவலியே
    கட்டுப்பாட மதிக்கலியே
    கொழுப்பா திரிஞ்ச மக்க
    குலநாசம் ஆகிடுச்சே …

    வாய மூடாம , வம்பு பேசி திரிஞ்ச மக்க
    வந்தா பாத்துக்கலாம் என
    வாய்ச்சவடால் விட்ட மக்க
    வாய்க்கரிசிக்கு வக்கில்லாம
    வாசலிலே வைக்காம
    வாழ்க்கை தொலைச்சி போகுதம்மா …

    வந்துநின்னு காப்பாத்தம்மா
    கொலைகார பாவி கொரோனாவ
    கொன்னுபோட்டு கொஞ்சம்நஞ்சம்
    மிச்சம் உள்ள குலம் காக்க வாருமம்மா …
    தாயே நீ மனசு வச்சா மாறுமம்மா
    இந்த மனுசகுலம் மீளுமம்மா…

    கொத்துகொத்தா போகுதம்மா
    எம்மக்க கொரோனாவில் சாகுதம்மா
    காப்பாத்த யாருமில்ல
    கண்ணெல்லாம் கலங்குதம்மா …
    இன்னுமா இரக்கம் வரல
    இயற்கை தாயே இன்கரம் நீட்டி
    எம்மை இயல்புக்கு திருப்பம்மா ….

  14. Stalin Antony says:

    என்னில் முதல் கவிதை ..

    நான் எழுதும்
    கவிதையை

    என்னை எழுதிய அன்னைக்கு
    சமர்ப்பிக்கிறேன்.

    ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மா
    உன் முன்னே!!

    ஆகட்டும்.
    கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்
    அதன் கைப்பிடி என்னவோ
    உன் நினைவில்.

    உனை தாண்டி நான் யார்,
    உன்னிலும்
    மேலானதை தேட.

    கடலும்
    சிறுக்க தானே செய்யும்
    உன் முன்.

    நவீன
    அறிவியலால் கூட அசைக்க முடியா
    சிற்பம் நீ

    கேள்விகளாலே
    சுருக்க முடியா உன்னை
    எதை
    கொண்டு நிரப்புவேன்.

    அன்னை இருக்குமளவும்
    அன்னையர் தினம் தான்.

    பெற்றவள் மட்டுமே அன்னை அல்லவே,
    பெண்மையே
    அன்னை தான்..

  15. Stalin Antony says:

    என்னில் முதல் கவிதை ..
    நான் எழுதும் கவிதையை
    என்னை எழுதிய அன்னைக்கு சமர்ப்பிக்கிறேன்.

    ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மா
    உன் முன்னே!!

    ஆகட்டும்.
    கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்
    அதன் கைப்பிடி என்னவோ
    உன் நினைவில்.

    உனை தாண்டி நான் யார்,
    உன்னிலும் மேலானதை தேட.

    கடலும் சிறுக்க தானே செய்யும்
    உன் முன்.

    நவீன
    அறிவியலால் கூட அசைக்க முடியா
    சிற்பம் நீ.

    கேள்விகளாலே சுருக்க முடியா உன்னை
    எதை கொண்டு நிரப்புவேன்.

    அன்னை இருக்குமளவும்
    அன்னையர் தினம் தான்.

    பெற்றவள் மட்டுமே அன்னை அல்லவே,
    பெண்மையே அன்னை தான்..

  16. Stalin Hendry says:

    என்னில் முதல் கவிதை ..
    நான் எழுதும் கவிதையை
    என்னை எழுதிய அன்னைக்கு சமர்ப்பிக்கிறேன்.

    ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மா
    உன் முன்னே!!

    ஆகட்டும்.
    கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்
    அதன் கைப்பிடி என்னவோ
    உன் நினைவில்.

    உனை தாண்டி நான் யார்,
    உன்னிலும் மேலானதை தேட.

    கடலும் சிறுக்க தானே செய்யும்
    உன் முன்.

    நவீன
    அறிவியலால் கூட அசைக்க முடியா
    சிற்பம் நீ.

    கேள்விகளாலே சுருக்க முடியா உன்னை
    எதை கொண்டு நிரப்புவேன்.

    அன்னை இருக்குமளவும்
    அன்னையர் தினம் தான்.

    பெற்றவள் மட்டுமே அன்னை அல்லவே,
    பெண்மையே அன்னை தான்..

  17. Loganayagi Mohan says:

    கொரோனா இரண்டாம் அலை
    🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

    ஆட்டோக்கள் எல்லாம்

    அவசர ஊர்திகளாக மாறி

    அணிவகுத்து நிற்கின்றன….

    மருத்துவமனைகளில்

    படுக்கை பற்றாக்குறையாம்….

    அவசர ஊர்திகள் அனைத்தும்

    அமரர் ஊர்திகளாக

    அணிவகுத்து நிற்கின்றன….

    மாயானத்தில் கூட

    படுக்கை பற்றாக்குறையாம்….

    🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

    கடற்கரையில், கடல் அலையில்

    காற்று வாங்கினோம்

    உல்லாசமாக…..

    இன்றும்

    காற்றைத்தான் வாங்குகிறோம் !!!

    கொரோனா இரண்டாம் அலையில்

    உயிருக்காக…..

    🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

    திருமணங்கள் எல்லாம்

    சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்….

    போகும் போக்கைப்பார்த்தால்

    இங்கு நிச்சயிக்கப்பட்ட

    திருமணங்களே சொர்கத்தில் தான்

    நடக்குமோ என்னவோ???

    கொலைகார கொரோனாவால்…

    🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊

    -லோகநாயகி

  18. Rohini says:

    நீரோடை கவிதைப்போட்டி_5
    அன்னையர் தினம்
    ____________________________
    தாய்ப்பால் ஊட்டி வளர்த்தாள்
    அன்னை!
    நீயோ தமிழ் பால் ஊட்டி வளர்த்தாய்
    என்னை!
    தன் நெஞ்சம் படுக்கையாக்கித்
    தாலாட்டு வாள் அன்னை!
    நீயோ பூமி படுக்கை விரித்து
    பொதிகைத் தென்றல் வீசசெய்து
    தாலாட்டுவாய் என்னை!

    வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்தாள்
    அன்னை!
    நீயோ வாசகசாலைபாடம்
    கற்க செய்தாய் என்னை!

    சித்திரைக்கருவில் உதித்த
    முத்தமிழ் பெண்ணே!
    ஐம்பெருங் காப்பியங்கள்
    அணிகலன்களாய்
    திருக்குறளும், தொல்காப்பியமும்
    மணிமகுடமாய் சூடிக்கொண்ட
    உன்னைவிட,
    என்னை ஆளாக்கத் தன்
    அணிகலன்களை விற்று
    என் வாழ்வொளி ஏற்றிடத்தன்
    வாழ்வை இருட்டிக்கொண்ட
    என்தாயே சிறந்தவள்!
    ஆயினும், அந்தத் தாயை
    இம்மண்ணில் எனக்கு
    ஈன்றளித்தாயே! உன்னை
    நான் தலை வணங்குகிறேன்
    தாயே!

  19. Shanthi Marimuthu says:

    எழுதாத தேர்வு !
    உறக்கம் தொலைத்து
    உணர்வுகளைக் குவித்து
    பல நாட்கள் படித்துப்
    பரிசாய்ப் பெறுவதே பட்டம்.
    அன்று
    தேர்வு எழுதாமலேயே
    தேர்ச்சி என்பது கானல் நீர் !
    ஒவ்வொரு முறையும் இன்று தேர்வென்பது
    தொடுவானம் போல் ஆனாலும்
    எழுதாத தேர்விற்கு தவறாது
    எல்லோர்க்கும் பெய்து விடுகிறது
    தேர்ச்சி மழை !
    இணையக்கல்வியில் இதயங்களை இயந்திரமாக்கி
    தொலைநோக்குப் பார்வையோடு
    தொடரும் இக்கல்விக்கு
    தொலைந்து விடுமோ நம் பார்வை ?
    தேடிக் கற்றல் போய்
    “தேட “மட்டுமே செய்கின்ற இளையோர்களால்
    கேள்வியும் நானே ;பதிலும் நானே என்று
    கேலியாய்ப் பார்க்கிறது வலைத்தளம் .

    கனவுகளில் நீந்துகின்ற
    கரை தாண்டா எம் கன்னியர்க்கு
    திருமணம் என்பது
    ஏக்கங்களோடு காத்திருக்கும்
    எழுதப்படாத தேர்வு !

    பட்டங்கள் பல பெற்றிருந்தும் -பொது
    சட்டங்கள் யாவும் அறிந்திருந்தும்
    இலக்கு என்பது இவர்களுக்கு -விதி
    விலக்காய்ப் போனதால்
    வியர்வை நீரில் தினம் குளிப்பதையே
    உயர்வாய் எண்ணும் மங்கையவளுக்கு
    அடுக்களையிலிருந்து வெளியே வரவும்
    எழுதப்பட வேண்டுமோ ஒரு தேர்வு ?

    காரிகையிவள் கால் பதிக்காத் துறையில்லை – ஆற்றும்
    கடமைக்கோ எல்லையே இல்லை ;
    இருப்பினும்
    ஆணுக்குப் பெண் நிகர் என
    அடித்துச் சொல்லிட இவள்
    எழுத மறந்தது எந்தத் தேர்வை ?

    கண்ணுக்குத் தெரியா வைரஸின்
    கண்ணாமூச்சி ஆட்டத்தில்
    விடியல் எனும் தேர்வு இன்னும்
    எழுதப்படாமலேயே இருக்கிறது
    விடை அறியாது .

    காற்றைவிடக் கடிது பரவும் தொற்றை
    காலனிடம் அனுப்ப
    மூலிகை மருத்துவமே இன்று நம்
    முன் நிற்கும் ஒரு ஆயுதம் !
    காலங்களை நிழலை வைத்தே
    கணித்து விடவும்
    தோகைமயிலே இவர்கள் வானிலைக்குத்
    தோற்றுப் போய் விடவும்
    எமனைக் கூட தைரியத்தால்
    எட்டடி தள்ள வைக்கும் -நம்
    முன்னோர்களிடமிருந்து
    முழுவதுமாய்க் கற்றல் என்பது
    எழுதப்படாத தேர்வாகவே என்றும்
    ஏட்டினில் இருக்கும் !

  20. “கொரோனா அலை”
    “வானரம் போல் தாவிச் சென்றவனுக்கு

    கொக்கு போல் காத்திருக்க-கற்றுத்தந்தது

    விடையையும் விடியலையும் தேடிச்சென்றவனுக்கு

    விடாமுயற்சியை-கற்றுத் தந்தது

    முளைப்பாலின் அருமை தெரியாதவனுக்கு

    மூலிகையை மூலையில் வளர்க்க-கற்றுத்தந்தது

    கோடி கோடியாய் சேர்த்தவனுக்கு

    கோவிடில் செலவு செய்ய-கற்றுத்தந்தது

    மாசு நிறைந்த மானிடன் ஊனெல்லாம்

    மாசற்ற காற்றினை வளர்க்க-கற்றுத்தந்தது

    சுவைமிக்க சமைத்ததை மற்றவருக்கு

    சுவையோடு பந்தி போட-கற்றுத் தந்தது

    சுமைகள் இட்டு சுமந்து தோளில்

    சவங்களை சுமக்க-கற்றுத்தந்தது

    சிக்கனமாக இருக்க கற்றுத்தந்தது

    சிக்காமல் இருக்கவும்-கற்றுத் தந்தது

    கற்றிடும் வாழ்க்கை என்று நாங்கள் வாழ வந்தோம்

    முற்றும் பழமையென நாங்கள் உணர்ந்தோம்”

    _ஜெயபிரபாகரன்.பெ

  21. அன்னையர் தினம்
    ஈரைந்து மாதங்கள் தவக்கரு சுமந்த
    கூரைவேயா இல்லில் அரணாய் நின்று
    புரையொன்றை கடிந்து விளக்கி நானொளிர
    அரை உயிராய் தானுருகும்மெழுகவள்…

    உற்றதொரு துணையை இழந்த பின்பும
    பெற்றதோர் பிள்ளையின் எதிர்காலம் எண்ணி
    அற்றே கலங்காது அகங்காத்து தரங்குறையாமல்
    பொற்றொத்து மங்காதுமிளிரும் மெய்மையவள்…
    நடை பயிலும் நாட்களிலே நேர்ந்த
    தடையொன்றால் தடுக்கி நான் விழுந்தால்
    படை திரட்டி தரைப்போர் செய்து வெற்றி
    நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…
    அழுக்குடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்
    அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்
    பொழுதுசாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்
    தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

    விதி தந்திட்ட வினைகளைத் துமியாக்கி
    அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து
    மதிமுகம் பெற்றிட கல்விச்சாலை அனுப்பி
    சாதித்த காட்டிய சரித்திர நாயகியவள்…

    பாரமென எண்ணும் தன்ம உணர்ந்தென்
    தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து
    சாராப் பண்போடு என்னவமோங்க இக்கணம்
    ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.

    -விருதை சசி,விருதுநகர்

  22. D.luvia vincy. says:

    எழுதாத தேர்வு!!

    இரு நாட்கள்
    விடுமுறை கிடைத்தால்
    நலமாக இருக்குமே…..
    என எண்ணிய
    பல நாட்களில்….
    இப்போது,
    எழுதாத் தேர்வை எண்ணும்போதே,,
    எண்ணம் மழுங்கிப்போகிறதே!!
    ஐயகோ!!!!

    படிப்பு வியாபாரமாகி,
    தேர்வும் இப்போது
    தேவதையாகிவிட்டது…..
    எழுதாத் தேர்வில் கூட
    தேர்ச்சி பெற்றதால்!!!

    உள்ளத்தில் பதிந்தும், பதியாமலும்,
    புரிந்ததை வைத்து,
    தேர்விற்கே வைத்தியம் பார்த்த,
    மாணவர்கள் பலரின் காலம் போய்,
    என்னை விலைக்கு வாங்கு,
    உன்னை நான் மதிப்பிடுகிறேன்….
    எனப் பேசிய கைப்பேசியை வைத்து,
    வகுப்பைத் தள்ளுகின்றனர்…..
    தேர்வெழுதா முறையில்!!!

    கேள்வித்தாளை பெற்று,
    பதிலை நினைத்து, நினைத்து
    எழுதிய காலம் போய்,
    இணையத்திற்கு வா!
    உனை கேள்வியுடனும், பதிலுடனும்
    இணைத்து வைக்கிறேன்…..
    எனக் காலம் மாறியது…
    எழுதாத் தேர்விற்காக!!!
    எல்லாம் எழுதாத் தேர்விற்காக!!!!

  23. D.luvia vincy. says:

    மே தினம்!!

    விழி சுருங்க,
    வியர்வை சொட்ட,
    உடல் நடுங்க
    உழைக்கும் உழைப்பாளிகளின்
    கைகளைப் பார்…..
    தினமும் தொழிலாளர் தினமே!!!!

    நெற்றி வியர்வை
    நிலத்தில் சிந்தும் போதே,
    கவலைச் சொட்டும், சொட்டுகிறது….
    விளைநிலத்தில்!!!
    நெல் நெற்பயிராக வரும்வரை…..

    விதை விதைக்கும் போதே,
    தொழிலாளியின் பயத்தை,
    எண்ணமாக மாற்ற
    விதை பேசுகிறது…..
    இவ்வாறு!!
    உன் உலக மக்களின் பசிக்காக,
    இப்போதே, பயிரிடப்பட்டுள்ளேன்….
    கவலை கொள்ளாதே என!!!

    விவசாயி விழிக்கிறான்…
    மறுநாள்வேலைப்பொழுது,
    விதை முளையிட்டு,
    செடியாக முளைக்கிறது….

    கதிர் பிடிக்க,
    விவசாயியின் உழைப்போ,
    மிக உன்னதமானது….
    நீர் பாய்ச்சி, உரமிட்டு,
    களை நீக்கி,
    இன்னும் எத்தனை எத்தனையோ??
    அனைத்தையும் சற்றும் அயராமல்
    சமாளிப்பவனே உழைப்பாளி!!!
    நம் விவசாயி!!!!

    கதிர்பிடித்து,
    அக்கதிர்முற்றி நிலமடந்தையை
    வணங்குகிறது!!
    காரணம், விதை முளையிட
    உதவிய, அந்நிலத்தை
    வணங்கியே!!!

    விவசாயியின் மகிழ்ச்சி
    மட்டில்லாதது!!!
    பேசிய விதை,
    விருட்சம் அளித்ததை எண்ணியும்….
    உலக மக்களின் பசி பறந்தது,,
    என அந்த எண்ணமுமே!!!

    இவ்வாறு, நன்றியுள்ளவர்களே அனைவரும்;
    இருந்தபோதிலும், உணவில்லாமல்,
    எத்தனை உள்ளங்களோ??
    ஆகவே, இருக்கும் உணவை
    வீண் செய்பவர்கள் மட்டும்,,
    ஒரு நெற்பயிரை பயிரிட,
    ஓர் விவசாயியோ,
    ஆயிரம் வியர்வை முத்துக்களை
    விதைக்கிறான்….
    என் எண்ணினால் போதுமானது!!!

  24. D.luvia vincy. says:

    கொரோனா இரண்டாம் அலை:

    கொரோனாவே, உலகத்தை
    கொந்தளிக்க விட்டுத்தான்
    செல்வாயோ??
    அலைகளில் முங்கி முங்கி சிலரை
    எழ வைத்தால்,
    பலரை மூழ்க வைக்கிறாயே!!!

    முதல் அலையில், பலரை
    அலைபாய வைத்து,
    அடங்கவும் வைத்து,
    பல உறவுகளை பரிதவிக்க வைத்து,
    எண்ணிலடங்கா உயிர்களை,
    பரிசாக வேண்டிச்சென்றாயே!!

    இரண்டாம் அலையில் உலக மக்களின்
    இதயத்தை நடுங்கச் செய்யும் அளவுக்கு,
    அல்லாட விடுகிறாயே….
    இத்தனைக்கும், கண்ணுக்குத்தெரியாத
    கிருமி தானே நீ!!!

    பல பல வைத்தியம் பார்த்த,
    நாடாகிலும்…
    இவ்வைரஸ்க்கு வைத்தியம்
    கேள்விக்குறியாக உள்ளதே!!!

    ஓடிக்கொண்டிருக்கும் உலகையே,
    உட்கார வைத்து,,
    ஓடிய காலங்களை,
    திரும்பியும் பார்க்க வைத்தாய்….
    ஆனால், பல்லுயிர்களை காவு வாங்கியதால் என்னவோ??
    நீ வேண்டாத கிருமி தான்…
    இவ்வுலகுக்கு வேண்டாத கிருமி தான்!!!

    உள்ளத்தளவில் பல உயிர்களை
    பரிதவிக்க வைத்து,
    உடலளவில் பல லட்ச உயிர்களை
    காவு வாங்கிச் சென்றாயே….
    உனக்கு என்னதான் வேண்டும்!!
    உனக்கு என்னதான் வேண்டும்!!!!

    விடிந்ததும் வீட்டை
    அடைத்து விட்டு,
    அடங்கியதும் வீட்டைத்திறந்த
    நிகழ்வு நின்று….
    வீடு திறந்தே இருந்தாலும்,
    கலையிழந்தது….
    கலை மிகுந்த செல்வம்
    ஜொலிக்காததால்,,
    வீதியும் சுடுகாடாய் மாறியது!!!

    என்ன நிகழ்ந்தாலும்,
    இத்தொற்றுக்கு விரைவில்
    கிடைக்கும் ஒரு முற்று
    என்ற நம்பிக்கையுடன்….
    இவ்வுலக உள்ளங்கள்!!!

  25. v.jensala says:

    அன்னையர் தினம்

    ஆண்டுகள் பல கழிந்தாலும் அழிக்க முடியாத
    வரலாற்றுக் கவிதை அம்மா!

    இன்னோர் உயிரை தன்னுடலில் சுமந்து
    உதிரத்தை பாலாக்கி ஊட்டியவளே
    உனை உருவகிப்பதற்கு வார்த்தைகள் இல்லையம்மா
    இந்த உலகத்திலே…..

    உற்ற துணையில்லை உறக்கமோ தனிமையில்
    என் அசைவுகளுக்கு அர்த்தம் கொடுத்து
    எனை ஆளாக்கி பார்த்தவளே…

    களவியால் என்னை கருவறையில் தாங்கினாள்
    நொடிப்பொழுதும் மறவேனே
    நீ எனக்காய் பட்ட
    துன்பங்களை….

    இனியொரு முறை நான் பிறந்திடுவேனானால்
    உன் கருவறையை கடன் வாங்கி கடவுளுக்கு பரிசளிப்பேன்
    கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் சொர்க்கத்தில்
    என்று……….

  26. கொரோனா இரண்டாம் அலை
    ******////*************//////************
    இப்பொழுது தான் பார்க்கிறேன்…
    அலைகளும் அயர்ந்து போகும் என்று!
    ஆம்!
    கொரோனா இரண்டாம் அலைகளும் அயர்நாது போகும் ஒரு நாள்…
    அது நம் நம்பிக்கை வென்றிடும் திருநாள்!

    நீ ஆயிரம் உயிர்களை இழுத்துக் கொண்டாலும்…..
    அநேகரை அனாதையாக்கினாலும்….

    பூமிக்கு முடிவுரையை “நீ ..”..எழுத முடியாது!

    *வாழ்வை தக்க வைக்கும் கலை…
    வீழ்ந்தாலும்,உன்னிடம் போகுமா விலை?

    வீறு கொண்டு எழும்நிலை எம் மனித இனத்திடமுண்டு!!
    இறைவன்இரக்கம் இருக்கும் வரைஎமக்குத்
    திட மனமுமுண்டு!!!!

    வீழ்த்தப்படாத இராஜ்யங்களில்லை….
    வெல்லமுடியாத யுத்தமுமில்லை….
    ஏய்….
    கொரோனா அலைகளே….
    அதி சீக்கிரத்தில்
    நீங்களும் அயர்ந்து போவீர்கள்…

    நிச்சயமாகவே முடிவு உண்டு….
    என் நம்பிக்கை வீண்போகாது.
    இப்படிக்கு,
    கல்பு.

  27. அம்மா
    நீ எந்தன் அகராதி
    என் இதயத்தின் சரிபாதி.

    என் புன்னகையின் உதிரம் நீ
    என் கண்அசைவின் காரணம் நீ!

    என் வார்த்தைகளின் அகரமுதல நீ
    என் வாழ்க்கையின் வேர்ச் சாரம் நீ

    இறைவன் எனக்காய் தந்த
    இனியவளே….
    என் அகத்தின் ஆழத்தில் இருந்து இடுகிறேன்
    ஒரு முத்தம்
    :அம்மா ” என்ற வார்த்தையின்
    இரண்டாம் எழுத்தின் மேல் ஒரு புள்ளியாய்….
    இப்படிக்கு,
    கல்பு.@கற்பகலட்சுமி மோகன்.

  28. எழுதாத தேர்வு

    எழுதாத தேர்வைப்பற்றி
    எழுத ஆயிரமுண்டு ……

    பலர் கண்ட
    பகல் கனவு பலித்துப் போனதோ??

    ஒத்தி வைக்கக் காலம் குறித்து
    ஒப்பனைக் கலைப்பில் முடிந்து போனது!

    தாள் திருத்த தயாரிக்கபட்ட
    பேனாக்கள் எல்லாம்
    பேசாமல் திரிந்து போனது!!!

    காகிதங்களும் கருத்துப் போனது!
    மாணவர் மனமும் சலித்துப்போனது!

    விலை போகாத பாத்திரங்களாய்
    “தேர்வுகள்” ஒதுக்கப்பட்டன…

    நாட்கள் நகர்ந்து போயின

    ஆனாலும்….

    காத்திருக்கின்றன…

    என் கரங்களால் எழுதப்பட

    இன்று வரை எழுதப்படாத தேர்வுகள்!!!!!

    இப்படிக்கு,
    கல்பு@ கற்பகலட்சுமி மோகன்

  29. Ishwarya Ravichandran says:

    எழுதாத தேர்வு…

    காலாண்டு தேர்வெழுத அரையாண்டு காத்திருந்தேன்…
    முழுவாண்டே வந்துருச்சே எங்கபோயி முறையிடுவேன்!!!
    கணினியில தேர்வெழுத யோசனைகள் வந்திருக்காம்…
    – எனக்கோ,
    நாம்புடிக்கும் பேனாதான் வாக்கியத்த வரவழைக்கும்!!!
    இந்தமுற தேர்ச்சிபெற்றா எருமமேய்க்க வரவேணாம்…
    – அப்பா சொன்னது…
    ஆனால் எழுதாத தேர்வுல தேர்ச்சிபெற்றா,
    ஆயுசுக்கும் எரும பேச்சதான் கேட்கணுமோ!!!
    முந்தாநாள் படிச்சதெல்லாம் மூளையில நிக்கலையே!!!
    நடப்பாண்டு பாடத்தோட போனாண்ட சேத்துவெச்சு,
    நித்தம்நித்தம் என்னால பாதுகாக்க முடியலயே!!!

    பட்டணத்து பிள்ளையெல்லாம் பகுமானமா படிக்கிறாங்க…
    பட்டிக்காட்டு பிள்ளையோநான் பாடுபட்டு படிக்கிறேனே!!!
    ஆவணி காலாண்டில் மிளகாயோட கால்வாசி,
    மார்கழி அரையாண்டில் சுரைக்காயோட அரைவாசி,
    சித்திரை முழுவாண்டில் முத்தாளம்மன் தேரிழுத்து,
    மும்முரமா படிச்சுமுடிச்சி தேர்வெழுத நினச்சேனே!!!
    காலாண்டு அரையாண்டு மதிப்பெண்ண கூட்டிவச்சு,
    தேர்ச்சிக்கான விதிமுறைனு சொல்லிப்புட்டா என்னசெய்ய!!!

    விடியல்ல எழுந்திருச்சி, விதவிதமா பட்சிபார்த்து,
    எனக்கும் எம்பேனாவுக்கும் அரைவயிறு நிரப்பிக்கிட்டு,
    கூட்டாளி கடன்கொடுத்த ரெண்டுசொட்டு மையவச்சு,
    பத்துப்பக்கம் எழுதுகிற சாமர்த்தியம் எப்பவரும்!!!
    – திரும்ப எப்பவரும்???
    காத்துக்கிடக்கேன் இப்பவர, தேர்வுக்கான தேதிக்காக…

    ——– ர.ஐஸ்வர்யா

  30. ஸ்ரீராம் ராஜா says:

    உள்ளே பொதுநலம் வெளியே சுயநலம்
    இரண்டும் கலந்த கலவை நான்

    அடைக்கலம் தேடும் அண்டடை கிருமியை
    தடுத்து நிறுத்தும் கவசம் நான்

    தனித்து இருக்கும் காதை,
    மூக்கோடும் வாயோடும் இணைக்கும் பாலம் நான்

    என்னை தந்து உன்னை காக்கும்
    வீட்டு கருவெப்பேபிள்ளை நான்

    மகனே .. என்னை அணி ;
    அரை முகம் காட்டு ;
    நிறை வாழவு உண்டு நிச்சயம்..

    இப்படிக்கு
    முகக்கவசம்