நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil

neerodai pen

அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,
“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோ
கல்லூரி விண்ணப்பத்தை
பூர்த்திசெய்துவிட்டு
முகம்தெரியாத
நபருக்கு அணிகலனாக
காத்திருக்கிறாள்
அடகுக்கடையில்…”
வலிமையான வரிகள்.
எளிதில் கடந்து செல்ல இயலவில்லை.

தந்தைக்கு

எதிர்பார்ப்பில்லா ஏணி
சுயம்பு மணற்கேணி
தந்தைக்கு பொருத்தமான வரிகள்.

நீரோடைபெண்

நீரோடைபெண்,
பொக்கிசமே,
மரகதப்பெண்ணே,
கடைக்கண் மீள்பார்வை,
சந்தனநிலவு,
பிரபஞ்சங்களின் பொருட்காட்சி,
மேகக் கடன்காரி,
மெழுகுபொம்மை,
என நீளும் தலைப்புகளும்
கவிதைக்கிணையான
அழகியல்.

காதலின்
தவிப்பை
அழகுற
வெளிப்படுத்துகிறாள்
நீரோடைப்பெண். – neerodaippen book review tamil

மனைவி
குழந்தைகள் என
குடும்பத்தையே கவிதைக்
கருவாக்கியிருப்பது சிறப்பு.
இணைப்புப்படங்களும் அருமை.

நீ என்னை கடந்து சென்றாலும்,
உன்வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை,

என சொல்லிக்கொள்ள எத்தனையோ வரிகள்.

பிடித்த வரிகளை அடிக்கோடிடுவதென்றால், புத்தகம் முழுமையும் கோடிட வேண்டியதாயுள்ளது.

கவிதை என்ற பெயரில் எழுத்தாளரின் மேதாவித்தனங்களை வெளிப்படுத்தி, வாசிக்கும் வாசகர்களை பொருள் தேடி அலையவிடாமல் பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் எளிய தமிழை எடுத்தாண்டுள்ளது
பாராட்டுதலுக்குரியது.

மேலும் பல படைப்புகளை உருவாக்கி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

– சிவ.சுசீலா அவிநாசி

You may also like...