கொள்ளு குழம்பு – உடம்பைக் குறைக்க
தேவையான பொருட்கள் :
*கொள்ளு – 1 1/2 கப்
*அன்னாசி பூ – 2
*சோம்பு – 1 தேக்கரண்டி
*மிளகு – 1 தேக்கரண்டி
*வெங்காயம் – 1
*தக்காளி – 1
*தேங்காய் பால் – 1/2 கப்
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளுவை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ,சோம்பு, மிளகு, வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
* உப்பு சேர்த்து, வேக வைத்த கொள்ளுவை கொட்டி 5 நிமிடம் வேக வைக்கவும்.
* அதில் தேங்காய் பால் சேர்க்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் obesity tips in tamil, weight loss.