தன்னம்பிக்கை கருத்துக்கள் – பாகம் 2

வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது self confidence 50 tips to develop.

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை .

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் .

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

self confidence 50 tips to develop

 

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

 

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நீங்கள் விரும்புவது கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.

இந்த உலகம் அதிகம் பேசாதவனை விரும்புகிறது, அளந்து பேசுபவனை மதிக்கிறது, துணிந்து செயல்படுபவனையே வணங்குகிறது.

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் .

சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது .

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.

பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.
கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டது கிடைக்காது.

இந்த உலகத்தில் நம்மை நேசிப்பவர்கள் நம்மிடம் இல்லையென்றாலே, நாம் அனாதைதான்.
அருகில் இருந்தால் அன்பு அதிகரிப்பதும், தொலைவிலிருந்தால் அன்பு குறைவதும் இல்லை.
வாழ்க்கையில் தட்டி விட்டவர்களையும், தட்டிக் கொடுத்தவர்களையும் மறக்கக் கூடாது.

முயலும்,ஆமையும் வெல்லும் – முயலாமை எப்போதும் வெல்லாது.

சந்தோஷமாக வாழ முயற்ச்சிக்காதே, நிம்மதியாக வாழ நினைத்தால் சந்தோஷம் தானாக வரும்.
பதவி வந்தால் பணிவும்,தோல்வி வந்தால் துணிவும், வெற்றியடைந்தால் கனிவும் வேண்டும்.
மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் மனிதன் இல்லை, மூச்சிருக்கும் வரை முயற்சி செய்பவனே மனிதன்.

நெல்லுக்கு கேடு புல், மனிதனுக்கு கேடு ( இன்னா ) சொல்.

நன்மை செய்யும்போது பாராட்டாமல், தீமை செய்யும்போது தூற்றாதே.

விழுவதெல்லம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்காக அல்ல.

தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு, பொய்யாக பழகாதே.

ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும்போது மெளனமாய் இரு, புகழ்ந்து பேசும்போது அமைதியாய் இரு.

தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை, விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

குறையை முகத்திற்கு முன்னாலும், நிறையை முதுகிற்கு பின்னாலும் சொல்லவும்.

ஒரு பூ அழகாக இருக்கிறதே என்று நினைத்தாலே, நாம் பேராசைப்பட்டவர்கள் என்றுதான் அர்த்தம்.

சம்பாதிக்க interest ( ஆர்வம் ) இருந்தால்தான், பணத்தை ( வட்டி ) interest-க்கு கொடுக்க முடியும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் – சாதனை.

இன்பத்திலும்,துன்பத்திலும் மனம் விட்டு பேசினால்தான் உண்மையான அன்பு வெளிப்படும்.
பணம் உன்னிடம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது, பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது.

முடியும் என்பது மூலதனம், முடியாது என்பது மூடத்தனம்.

நல்லவற்றை கற்றுக்கொள், தீயவற்றை விலக்கிக்கொள், அறிவை பெருக்கிக்கொள், நேரத்தை ஒதுக்கிக்கொள்.

நல்லெண்ணம் மேலோங்கி இருக்க தொடங்கும் போது தோல்வி  அடைவதும், துவள்வதும், தடுமாறுவதும், தடம் புரள்வதும் சாதாரணம்.

 

– வெங்கடாச்சலம் பழனிசாமி
மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஸ்ணன் விருது 2009)

 

பொறுப்பாகாமை

You may also like...

1 Response

  1. Magi says:

    அருமை அருமை அனைத்தினையும் வரிகளும் என் மனதில் பதிந்து விட்டது……….