சில இந்து சம்பிரதாயங்கள்
இந்து மத அறிவியல் விளக்கம்
- பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது.அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.அதனால் கணவன் மனைவி உறவு மேம்படும் strong reasons behind hindu traditions.
- செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள்.(எப்போதும் சண்டையில்லாமல் ஒற்றுமையா இருப்பது நல்லது ) சுபகடாட்சம் குறைவு ஏற்படும்.
- தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
- வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.
- அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
- பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.
- பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
- கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
- வீட்டின் நிலைகளில் ( வாசற்கால்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
- நெய், விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் , இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
- ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
- வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
- சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
- யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.
- பூஜையின்போதுவிபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
- பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
- விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய இணைவு, சண்டையிடுதல் கூடாது.
- ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
- தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
- பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
- வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
- செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
- உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு அன்றைய தினம் பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
- பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்குசகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
- வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி பூதானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படும் தானம் சிறப்பானது.
- வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
– வெங்கடாச்சலம் பழனிசாமி
மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஸ்ணன் விருது 2009)