போராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி

அறம் மிகுந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளரின் நினைவஞ்சலி இது. 

தோப்பில்  முகமது  மீரான் 1944 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் தேங்காய்பட்டிணம் எனும் ஊரில் பிறந்து வசித்து வந்ததார். இவர் வாழ்ந்த இடம்  ஒரு சிறிய தோப்பு போன்ற இடத்தில் இருந்ததால் தன் பெயரின் முன்னால்  “தோப்பில்” என இணைத்து வைத்துக் கொண்டார். மலையாள இலக்கியத்தில் பட்ட படிப்பை முடித்தவர்.  இவர் அடிப்படையில் ஒரு மனிதாபிமானி. அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் குமரியில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கை பற்றியும் அதிலுள்ள போராட்டங்களை பற்றியுமே பெரும்பாலும் அமைந்தது. முக்கியமாக கடலோர மக்களின் வாழ்வியல் பற்றி. 

தோப்பில்

ஒரு நல்ல எழுத்தாளன் என்பவன் தான் வாழும் ஊர், மக்கள் மற்றும் கலாச்சாரம் பண்பாடுகளை நன்கு அறிந்தவனாக இருக்க வேண்டும் என உறுதியாக சொன்னவர். அவருடன் வாழ்ந்த வட்டார மக்கள் மற்றும் அதன் சூழலின் ஆழ்ந்த புரிதலை அவர் தன் எழுத்துக்களில்வெளிக்காட்டியவர் . அவர் “தோப்பில்” எனும் சொல்லை தன் பெயரின் முன் வைத்ததன் காரணம் தன் வாழ்ந்த வட்டாரத்தை அடையாளப்படுத்துவதற்க்காகவே. எளிய கிராம மக்கள் தங்கள் வாழ்க்கையில்  சந்தித்த இன்னல்களையும் தியாகங்களையும் அறப்போராட்டங்களையம் பற்றி தேடி தேடி சென்று சேகரித்து எழுத முற்பட்டவர். அவர் சிறுகதைகள் நாவல்கள் தவிர வைக்கம் பஷீர் அவர்களின் நூலுக்கு மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். 

ஆத்ம  திருப்திக்காக மட்டுமே எழுதினார்

எந்தவித சமரசம் கொள்ளமல் தன்னோடைய தன்னிறைவிற்காக  மட்டுமே எழுதிய ஒரு எழுத்தாளர். தன்னோடைய முதல் நூல் “கடலோர கிராமத்தின் கதை” 1988 ஆம் ஆண்டு வெளிவருவதற்கு முன்னால் தன் சிறு வயதிலிருந்து 35 ஆண்டுகளாக  ஒரு தவத்தை நிகழ்த்தியது போல் எழுதி கொண்டே  இருந்தவர். தன்னோடைய படைப்பை வெளி உலகுக்கு காட்டாமல் ஆத்ம  திருப்திக்காக மட்டுமே எழுதினார். 

கடலோர கிராமத்தின் கதை

முதல் நூலான  “கடலோர கிராமத்தின் கதை”  1988ல் வெளி வரும் போது சக எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை பற்றிய  தப்பான எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டனர். புத்தகத்தை கடையில்  சென்று விற்க கூடாது என ஊர் மக்கள்  சொல்லுமளவிக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவருடைய புத்தகத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் அதை எரித்து விடலாம் எனும் எண்ணுமளவிற்கு வேதனை அடைந்துள்ளார். 1988 ஆண்டிற்கு பிறகே இவருடைய அறம்  சார்ந்த எழுத்துக்கள் மக்களை சென்றடைந்து ஒரு எழுத்தாளனாக சமூகத்தில் அங்கீங்கரிக்கப்பட்டார். அதன்பின் அவரை பாதித்த சமூக அநீதி மற்றும் மத வெறி ஆகியவை எழுத்தாளர்களின் படைப்புகளை நசுக்கி விடும் என எச்சரித்து வந்தார்.

சாய்வு நாற்காலி – சாகித்ய அகாடமி விருது

இவரது மனைவி ஜலீலா மற்றும் இரு மகன்கள்  இவரின் எழுத்துப்பணிக்கு எப்பொழுதும் ஊக்கமளித்து வந்துள்னர். தமிழ் தலைமுறையில் இதுபோல் ஒரு எழுத்தாளன் வேதனை அடைந்ததை  எண்ணி நாம் எல்லோரும் வருந்தி தான் ஆக வேண்டும். இருந்தாலும் பல்வேறு விருதுகள் மற்றும் “சாய்வு நாற்காலி” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

தொன்மையின் மேல் அவர் அளவுக்கடந்த காதலை கொண்டிருந்தார். தன்னோடைய வீட்டை கூட நவீன வடிவமைப்பில் அவர் புதுப்பிக்கவில்லை. அதன் பழமையை அதினுள் தனக்கிருந்த ஆழ் அனுபவத்தை மிகவும் விரும்பினார். வீடு மட்டுமல்ல தான் வாழ்ந்த உலகத்தையே அதன் பழமையுடன் பேணி காக்கும் ஆவல் இருந்தது. இப்போதைய தலைமுறைக்கு அவர் இதையே சொல்லி வந்தார்.  

இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் பல உண்டு.  இயற்கையின் மீதும் அவருக்கு ஆளவில்லா பற்று இருந்தது. “ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்”  கதை அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம்.

அஞ்சலி

தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் பெரும் போராட்டங்களை சந்தித்து பல விமர்சனங்களை சமூகத்தில் எதிர் கொண்டு கடைசி வரை தன்னுடன் வாழ்ந்த  மக்களை பற்றி அறம் சார்ந்து  பறைசாற்றி  வாழ்ந்து  மறைந்த தன்னிகரில்லாஅப்பேரெழுத்தாளனுக்கு தலை வணங்குவோம்.  

– ஷியாம்

You may also like...