விகாரம் – சிறுகதை

எழுத்தாளர் மனோஜ் குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – விகாரம் சிறுகதை.

தன் அப்பா வினோத்துடன் சேர்ந்து ராகுல், தன் அம்மா அனிதாவின் நினைவில் புதிதாக கட்டப்பட்ட, அனிதா நினைவு மருத்துவமனையை
திறந்து வைக்கிறான். அதோடு, தன் அம்மாவின் வெண்கல சிலையை, மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கிறான் ராகுல். இதற்காக,
திறப்பு விழா ஏற்பாடு செய்கின்றான். அந்த விழாவிற்கு, முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் மற்றும் சில முக்கியமானவர்களை,
விருந்தினர்களாக அழைக்கிறான். முதலமைச்சர் கையால், மருத்துவமனையை திறந்து வைக்கிறான். தன் அப்பா வினோத்தை, மேடையில் அவர்கள் பக்கத்தில் உட்கார வைக்கிறான். அந்த மருத்துவமனையின், நிர்வாக தலைவர்(டீன்) ஆகிறான் ராகுல். மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு, பேச ஆரம்பிக்கிறான்.

அப்பொழுது “மெடிக்கல் பீல்ட்ல, என் வெற்றிக்கு காரணம் என் அப்பா மட்டுமில்லை. என் அம்மாவும் தான். அவங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று அழுதுகொண்டே பேசுகிறான் பின்பு கண்ணீரை துடைத்துவிட்டு, “என் அம்மாவை பத்தி சொல்லணும்னா!” என்று பேசுகிறான் ராகுல்..

26 வருடங்களுக்கு முன்பு……..
ஒரே ஒரு பெரிய மாநகரில், “வினோத்” என்கின்ற ஆணும், “அனிதா” என்கின்ற பெண்ணும் இருந்தனர். அவர்கள் அந்த மாநகரில், ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். அந்த கல்லூரியில், நண்பர்களாக பழகுகின்றனர். நட்பில், இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கின்றது. அது காதலாக மலர்கின்றது. இருவரும், காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இருவரும், தங்கள் பெற்றோர்களிடம் தங்கள் காதலை தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில், அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிறகு, ஒரு சில நிபந்தனைகளுடன், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைக்க, பெற்றோர்கள் சம்மதிக்கின்றனர். அதன் படி, கல்லூரி கல்வி முடித்த பிறகு, இருவரும் வேலை தேட ஆரம்பிக்கின்றனர். பல நாட்கள் தேடல், அலைச்சலுக்கு பிறகு, இருவருக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கிறது. அந்த வேலையில் நிரந்தரமாகி விடுகின்றனர்.

இருவருக்கும், அதன் பின்னர், பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் நடக்கிறது. இருவரும், தனி வீட்டில் குடியேறுகின்றனர். 1 வருடம் கழித்து,
வினோத்திற்கும்-அனிதாவிற்கும், ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு “ராகுல்” என்று பெயர் சூட்டுகின்றனர். குடும்ப சுமைகள், கடமைகள் அதிகரிப்பதால், ராகுலுக்கு 3 வயது ஆகும்பொழுது, அவனை கவனித்துக்கொள்ள, அம்மா அனிதா தன் வேலையை விடுகிறார். ராகுலை, அம்மா அனிதாவும், அப்பா வினோதும் பள்ளியில் சேர்க்கின்றனர்.

முழு நேரமும் கணவர் வினோத் மற்றும் குழந்தை ராகுலை கவனிக்க அம்மா அனிதா வீட்டிலேயே தங்கிவிடுகின்றார். நாட்கள் ஓடுகின்றது, 10 வருடங்களுக்கு பிறகு, இப்பொழுது ராகுலுக்கு வயது 13. 8-ஆம் வகுப்பு படிக்கிறான். குடும்ப கடமை மற்றும் சுமை அதிகரித்ததால், அதுவே அனிதாவிற்கு
பாரம் ஆகிறது. அவருக்கு வெறுப்பு அதிகரிக்கிறது. தன் கணவர் வினோதிடமிருந்து அனிதா மெல்ல, மெல்ல விலகி செல்கிறார். வேண்டாத வெறுப்பு காட்டுகிறார். தன் கணவர் வினோத்திடம், அனிதா தன் பிரச்சனைகளை, வெளிப்படையாக பேச மறுக்கிறார். தன் மகன் ராகுலிடமும், அனிதா
வேண்டாத வெறுப்பு காட்டுகிறார். கணவர் வினோத், மனைவி அனிதாவிடம் “உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் என்னிடமும், ராகுலிடமும் விலகி, விலகி செல்கிறாய்?” என கேட்கிறார்.

அதற்கு, மனைவி அனிதா, “ஏன் திருமணம் செய்தோம்? என்று தோன்றுகிறது! இந்த குடும்ப வாழ்க்கையை வாழ்வதற்கு, எனக்கு கஷ்டமாக இருக்கிறது! கணவன், குழந்தைகள் என்று, இந்த வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது! ஏன் திருமணம் செய்தோம் என்று இருக்கிறது?
பேசாமல்! தனியாக வாழ்ந்திருக்கலாம், போலிருக்கிறது!” என்று கூறுகிறார்

இதை கேட்டு, கோபம் அடையும் கணவர் வினோத், “நீ செய்வது கொஞ்சம் கூட நன்றாக இல்லை! நான் உன்னை மோசமாக போட்டு அடித்து விடுவேன்! உனக்கு, திருமணமே செய்ய பிடிக்கவில்லை என்றால்! என்னை ஏன் திருமணம் செய்தாய்? தனியாக! பிரம்மச்சாரியாக! இருக்க வேண்டியது தானே! நீதானே, வந்து என்னை காதலித்தாய்! திருமணம் செய்தாய்! இப்பொழுது, திடீரென! வேண்டாமென்று சொன்னால், எப்படி? திருமண வாழ்க்கை என்றால் அப்படி தான் இருக்கும்! உனக்கு பிடிக்கவில்லை என்றால், உன் அம்மா-அப்பா வீட்டுக்கு சென்று விடு! அவர்களோடு இருந்துவிடு! குழந்தை வேண்டாமென்று, முன்னாடியே சொல்லியிருந்தால்! நான் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்திருப்பேன்!” என்று திட்டுகிறார்

அதன் பிறகு, கணவர் மனைவி இடைவெளி மிகவும் அதிகரிக்கிறது. இருவருக்கும், மனஸ்தாபம் அதிகரிக்கிறது. அனிதாவின் அம்மா-அப்பாவிடம் வினோத் இந்த பிரச்சனைகளை கூறுகிறார். அவர்களும், எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், முயற்சிகள் எல்லாம் வீணாகி விடுகிறது
பிறகு, திடீரென்று ஒரு நாள்! உடலை வலிமையாக்கி கொள்ள, இளமை தோற்றம் மற்றும் அழகு பெற, ஆரோக்கியம் பெற, உடலை பராமரிக்க உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். அங்கு உடற்பயிற்சி ஆசிரியர் ஆன ரமேஷ், அனிதாவிற்கு உடற்பயிற்சி நன்றாக அளிக்கிறார். அவர்களுக்குள்
நட்பு மலர்கிறது. இது நாளடைவில், தகாத உறவு, கள்ளக்காதலாக மாறுகிறது..

இதை வழியில், அனிதாவோடு கல்லூரியில் படித்த தோழிகள் கவனிக்கிறார்கள். மற்றும் அனிதாவிடம் “உன் வீட்டுக்காரர் வினோத், அப்பறம் உன் பையன் ராகுல் ரொம்ப பாவம் டீ! அவங்களுக்கு, நம்பிக்கை துரோகம் செய்யாத! நீ செய்றது ரொம்ப தப்பு! வினோத் கிட்ட மன்னிப்பு கேட்டு வாழு! இது பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும்” என அலைபேசியில் அழைத்து அறிவுரை கூறுகின்றனர்
ஆனால், அவர்களின் அறிவுரையை கேட்க மறுக்கிறாள் அனிதா. கணவன் வினோதுக்கு தெரியாமல், ரமேஷிடம் நெருக்கமாக பழகுகிறாள் அனிதா. பின்பு, அனிதாவின் கல்லூரி தோழிகள், கணவர் வினோதிடம் இதை தெரிவிக்கின்றனர்.

கணவர் வினோதிற்கு, மனைவி அனிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் வருகிறது. மனைவி அனிதா மேல் சந்தேகம் அதிகரிக்கிறது. திடீரென்று, ஒரு நாள் அனிதாவின் மொபைல் போனை துருவி பார்க்கிறார் கணவர் வினோத். அதில் ரமேஷுக்கும், அனிதாவிற்கும் நடந்த சாட்டிங், குறுஞ்செய்திகள்(SMS), அலைபேசி அழைப்புகள் பார்க்கிறார் இதெல்லாம், வைத்து வினோதுக்கு சந்தேகம் உறுதியாகின்றது. பிறகு அனிதாவிடம் “ஆமாம்! எத்தனை நாள் அவனோடு பழக்கம்?” என ஆவேசமாக சண்டை போடுகிறார்

இருவருக்கும், மோசமாக சண்டை அதிகரிக்கிறது. அந்த வாக்குவாதம்- சண்டையில், அனிதா வினோதை “உன்னை கல்யாணம் பண்ணதுலிருந்து,
என்ன சுகத்தை கண்டேன்? என்ன சந்தோசம் வந்துது? ஒரு நாளாவது என்னை சந்தோஷமா வெச்சியா? அக்கறையா கவனிச்சியா? எப்போ பார்த்தாலும் வேலை! வேலை! பணம்! பணம்! உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? உன் கிட்ட கிடைக்காத சந்தோசம்! சுகம்! எனக்கு ரமேஷ் கிட்ட கிடைக்குது!” என்று கணவர் வினோதை திட்டுகிறாள் அனிதா அதன் பிறகு ஆவேசமாக வினோத், மனைவி அனிதாவை ஒரு அரை விடுகிறார், அதன் பிறகு, அனிதாவை “அடிப்பாவி! நான் உன்னை உண்மையாக தானே காதலித்தேன்! எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே! ஏமாற்றிவிட்டாயே! போடி வெளியே!” என்று வீட்டை விட்டு துரத்துகிறார்

அதன் பிறகு, காவல் நிலையத்தில் வினோத், போலீசாரிடம் புகார் அளிக்கிறார். போலீஸ் ஆய்வாளர் அனிதாவிடம் “ஏன்மா! வீட்டுக்காரர் இருக்காரு! ஒரு
பெரிய பையன் இருக்கான்! எல்லாம் விட்டுட்டு, ஏன் ரமேஷோட பழுகுற? அசிங்கமா இல்லை! இதெல்லாம் ரொம்ப தப்புமா! வீட்டுக்காரர்காக,
இல்லைனா கூட! உன் பையனுக்காக வாழுமா! குடும்ப வாழ்க்கைனா, அப்படி தான் இருக்கும்” என்று சொல்கிறார் அதற்கு அனிதா “கல்யாணம் ஆன நாளிலிருந்து, இந்த ஆள் கூட எனக்கு நிம்மதி இல்லை! ஒரு சந்தோசம், சுகம் இல்லை! இந்த ஆள் எப்போ பார்த்தாலும் பணம்! பணம்! வேலை! வேலை!-னு அலையுறான்! இருக்கான்! இவனுக்கு எதுக்கு கல்யாணம்? இவன் கிட்ட கிடைக்காத சுகம், சந்தோசம் எனக்கு ரமேஷ் கிட்ட கிடைக்குது!” என்று பதில் அளிக்கிறாள் அதன் பிறகு, போலீஸ் ஆய்வாளர் “இப்போ முடிவா என்ன சொல்ற? யாரோட வாழப்போற? வீட்டுக்காரர் வினோதா? ரமேஷா?” என்று
அனிதாவிடம் கேட்கிறார் அதற்கு அனிதா, போலீஸ் ஆய்வாளரிடம் “எனக்கு ரமேஷை தான் பிடிச்சிருக்கு! அவர் கூட போக விருப்பப்படுறேன்” என்று பிடிவாதமாக சொல்கிறாள்.

வினோத், இடையில் “இந்த அயோக்கியன் தான் சார், நல்ல இருந்த எங்க குடும்பத்தை சின்னாபின்னம் ஆக்கிட்டான்! குடும்பத்தில் குழப்பம் பண்ணி
என் பொன்டாட்டி மனசை மாத்திட்டான்! இவனை தண்டிச்சா சரியா போகும் சார்!” என்று குரலை உயர்த்தி பேசுகிறார் பிறகு போலீஸ் ஆய்வாளர் “இருங்க சார்!” என்று வினோதிடம் கூறிவிட்டு, அனிதாவிடம் “ஏன்மா! நீ பைத்தியமா? நீ தெரிஞ்சி தான் பேசுரியா? உன் வீட்டுக்காரர் இவ்வளவு இறங்கி வராரு, நீ அவரை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற! சரி! ரமேஷ் கூடவே பொய் தொலை!” என்று விசாரணை முடித்து, அனிதாவை திட்டி, ரமேஷோடு அனுப்பி வைக்கிறார்

விகாரம் – சிறுகதை

அதன் பிறகு, போலீஸ் ஆய்வாளர், அனிதாவை “இனிமேல்! உன் புருஷன் கூட சேர்த்து வைக்கணும்! உன் புருஷன் கூட வாழனும்!-னு கம்பிளையின்ட் கொடுக்காத! நாங்க எதுவும் செய்யமாட்டோம்! என்று எச்சரித்து திட்டி அனுப்புகிறார். 1 வருடம், அனிதாவோடு சுகம் அனுபவித்து, குடும்பம் நடத்தி, ரமேஷ் திடீரென்று அனிதாவை துரத்தி விடுகிறான். அதன் பிறகு தப்பை உணரும் அனிதா, தன் கணவர் வினோத் வீட்டிற்கு சென்று, வினோத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் “என்னை மன்னிச்சிடுங்க! என் தப்பை உணர்ந்துட்டேன்! நான் பண்ண தப்புக்கு, கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டாரு! என்னை ஏத்துக்கோங்க! இனிமே தப்பு பண்ணமாட்டேன்! என்னோட குடும்பம் நடத்துங்க!” என்று வினோத் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், அழுகிறாள். வினோத் கோபத்தில் ஏற்க மறுக்கின்றார். “நான் சொன்னப்போ எல்லாம் எங்க போச்சி டீ! உனக்கு அறிவு? வாழணுமா? வந்த வழியாவே போயிடு டீ!” என்று வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்தி விடுகிறார். வந்த வழியாகவே, அனிதாவை திருப்பி அனுப்புகிறார்.

அதன் பிறகு, இதை கேள்விப்படும் மகன் ராகுல், அப்பா வினோதை “அப்பா! அம்மா பாவம் இல்லையா? எவ்வளவு நாளைக்கு தான் அம்மாவை வெறுப்ப? அம்மா தப்பை உணர்ந்திருச்சி! அதை மன்னிச்சி ஏத்துக்காம! ஏன்பா வீட்டை விட்டு துரட்டிவிட்டுட்ட, அதை திருப்பி அனுப்பிட்ட? வா! போய்! அம்மாவை கூட்டிட்டு வருவோம்!” என்று திட்டுகிறான். வினோதும், மகன் ராகுலும், அனைத்து இடத்திலும் அனிதாவை தேடுகின்றனர். அவர்கள் வந்து மீட்பதற்குள், மன விரக்தியில், மன அழுத்தத்தில், அனிதா ரயில் தண்டவாளத்தில், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறாள்.

அனிதாவின் பிரேத சடலம், அவளது கணவர் வினோதிடம் ஒப்படைக்கப்படுகிறது. அனிதாவின் மகன் ராகுல், தன் அம்மா அனிதாவின் உடலை பார்த்து
“என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டியே மா! என்னை ஏமாத்திட்டியே!” என்று ஒப்பாரி வைத்து அழுகிறான். அனிதாவின் அம்மா மற்றும் அப்பா, அனிதாவின் கணவர் வினோத் “அடிப்பாவி! உனக்கு என்ன டீ குறை வெச்சோம்! ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லியிருக்கலாமே! இப்படி தனியா தவிக்க விட்டு போயிட்டியே டீ!” என்று அனிதாவின் உடலை பார்த்து கூச்சலிட்டு அழுகிறார்கள்.

ஏமாற்றியது, தற்கொலைக்கு தூண்டியது, மற்றவர்க்கு தீங்கு விளைவித்தல் என்று ரமேஷின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கின்றனர். வினோத், தன் மகன் ராகுலை நன்றாக படிக்க வைக்கிறார். அவனை பெரியாளாக்க! அவன் வளர்ச்சிக்காக, உயிரை கொடுத்து பெரும்பாடு படுகிறார், அப்பா வினோத் 3 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது ராகுலுக்கு வயது 17. நன்றாக படித்து, 12-வது வகுப்பு பொது தேர்வில், மாநில அளவில் முதல் இடம் பிடிக்கிறான். அதன் பிறகு, MBBS, MD என்று மருத்துவ படிப்புகள் நன்றாக படித்து. ஒரு அரசு மருத்துவமனையில், பெரிய மருத்துவர் ஆகிறான் ராகுல். மன நல மருத்துவத்தில் கூட வல்லுநர் ஆகிறான் ராகுல். நாட்கள் ஓடியது..

மாபெரும் வளர்ச்சி, பெயர் மற்றும் புகழ் பெறுகிறான். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் அவனை சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். திக்கற்ற
பல பேருக்கு வழி காட்டுகிறான். மன நல பிரச்சனை உள்ளவர்களுக்கு, மனஸ்தாபம் உள்ள கணவன்-மனைவிகளுக்கு, தன் வாழ்க்கை அனுபவத்தை கூடவே சொல்லி, பிரச்சனைகளை அழகாக தீர்த்து வைத்து அனுப்புகிறான். நோயாளிகளுக்கு, அழகாக நோயை தீர்த்து வைத்து அனுப்புகிறான் – விகாரம் சிறுகதை.

..
ராகுல் பேசுகிறான் “என் அம்மா மாதிரி, யாரும் கஷ்டப்படக்கூடாது. வேதனை அனுபவிக்க கூடாது-னு! மன நல மருத்துவத்துக்கு தனி ப்ளாக்கே கட்டியிருக்கேன். இந்த மருத்துவமனையில், நோயாளிகள் SGHS(State Government Health Scheme) உறுப்பினர் அட்டை மற்றும் CGHS(Central Government Health Scheme) உறுப்பினர் அட்டை காட்டி, இலவசமா சிகிச்சை எடுக்கலாம். அவங்களுக்கு, காசே கிடையாது! விளக்கு உண்டு. விழாவில், கலந்து கொண்ட முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர். மற்றும் பல முக்கிய விருந்தினர்களுக்கு. என் மனமார்ந்த நன்றிகள்!” என்று பேசி முடிக்கிறான். பின்பு மேடையில், அப்பா வினோத்தும், மகன் ராகுலும் கட்டிப்பிடித்து அழுகின்றனர். அவன் சேவையை பாராட்டி, முதலமைச்சர் குடியரசு தின விழாவில், அவனுக்கு “மாநிலத்தின் சிறந்த மருத்துவர்” விருதை அளிக்கிறார்.

மற்றும், புது டில்லியில், மருத்துவ துறையில் சாதனை படைத்ததற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் ராகுலை அழைத்து, அவனுக்கு நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷண்” விருதை அளித்து, அவனை பாராட்டி கௌரவிக்கிறார். அவனின் தந்தை வினோத், “என் செல்லமே! நான் உன்னை நினைச்சி பெருமை படுறேன்! நீ சாதிச்சிட்ட! கலக்கிட்ட! ஆனா, இதெல்லாம் பார்க்க, உங்க அம்மா இல்லையே டா! இருந்திருந்தால், நல்ல இருந்திருக்கும்!” என கூறி அவனை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, ஆனந்த கண்ணீரில் அழுகிறார். – [மனோஜ் குமார்]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *