எது சூப்பர் குடும்பம் ?

ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்?

மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார்  ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று ஒரு சிலரால் புகழப் பட்டாலும் இவையா ஒரு குடும்பத்தின்.. உறவுகளின்.. மேன்மையை நிர்ணயிப்பது?

நல்லதொரு குடும்பம் என்பது நற்பண்புகளின் உறைவிடமாய் ..
சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாய் ..அறவழியில்  இல்லறம் நடத்தும் குடும்பமே சூப்பர் குடும்பம் ..

குழந்தைகளை நல்வழிப்படுத்தி, நல்ல நெறிகள், நல்ல பண்புகளை, ஊட்டி வளர்ப்பது ..

பெற்றோரை, பெரியோரை, மதிப்புடன் மரியாதையுடன் அவர்கள்  மனம் குளிர நடத்துவது …

உடன் பிறந்தாரை அரவணைத்துச்  செல்லுதல் ..

சுற்றத்திற்கும் நண்பர்களுக்கும் தேவையறிந்து உதவுவது
இயன்ற வரையில் தான தர்மங்கள் செய்வது ..

நற்பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வது..

சமுதாயத்திற்கு நல்ல குடிமகனாய் விளங்குவது..

இது போன்ற பண்புகளைக் கொண்ட குடும்பமே சூப்பர் குடும்பம்!!!

தி.வள்ளி

திருநெல்வேலி

You may also like...