ஜிலேபி

தேவையானவை :

உளுந்தம்பருப்பு – 250 கிராம்
அரிசி – 30 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ், டால்டா, நெய் – தேவையான அளவு

jalebi preparation

செய்முறை:

உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.

சர்க்கரை பாகு தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.

வாணலியில் நெய் சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.

எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:

நல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.

You may also like...