கொரோனா எச்சரிக்கை – 2
கவிதை – வெளியே கொரோனா ஜாக்கிரதை
விலைமதிப்புள்ளவர்கள் நாம்
பெட்டகத்தில் வைத்து
பாதுகாக்கின்றனர் – corona kavithaigal
முதன் முறையாக
கடவுள்களே
விடைபெற்று கொண்டானர்
என்னாலும் துயருக்கு
ஆளாகாதீர்கள் என்று…
நாளுக்கு நாள்
பாதுகாப்பு
கூடிக்கொண்டே போகிறது…
நடைபழகிய குழந்தை
வீதியில் இறங்கி
நடப்பதை போல் –
தடுமாறும் போது
சீருடையில்
ஆயிரம் கைகள்
தாங்கிக் கொள்கின்றன..
வீரனுக்கு அழகா?
பதுங்கி தான் வாழ்ந்து
ஆக வேண்டும்
வெளியே கொரோனா
ஜாக்கிரதை..
இயன்றும் நன்றி மறவா
பண்பு உய்வுதரும்
அகம் புறம்
மாசு குறைய
பூமி
நமக்குமட்டும்
சொந்தமில்லை என்பதை
கூண்டுகளில் அடைத்து காட்டிவிட்டது…
நிதம் குடித்துவிட்டு
வீடு திரும்பும் தந்தை
நின் வருகையில்
வீடே கதியான பின்
கொடூர முகம் மறைய
பேசி மகிழ்ந்து உறையுள் காண்கிறார்.. – corona kavithaigal
வெளிநாடே
வாழ்வின் தீர்வென
இருந்த நிலை..
கால் காசு மொழியெல்லாம்
நான் இருந்தால் போதுமென ஆனது…
இன்று
அகல கால்
கீழே சாய்க்கும்
என்ற உண்மையை புரியச் செய்தது.
– இவண் – அந்தியூரான் ஸ்ரீராம் பழனிசாமி