என் மின்மினி (கதை பாகம் – 11)
சென்ற வாரம் – ஒரு கேள்விகூட கேட்காமல் எடுத்தவுடனே
உன் உண்மையான பெயரை சொல்லிட்டு என்கிட்டே பேசு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-11.
சரி ஓகே கோபப்படாதே. மதியம் சாப்பிடும் போது எல்லாமே சொல்றேன் ஓகேவா என்றாள் பப்பு…
அவளை ரொம்பவும் கெஞ்ச விடாமல் சரி ஓகே.. ஆனால் அப்போதும் எதோ ஒண்ணு பண்ணி பெயரை சொல்லாம போய்விட கூடாது என்றான் பிரஜின்…
ஓகே ஓகே ரொம்ப டென்ஷன் ஆகாதே.கண்டிப்பாக இன்னிக்கு சொல்லுவேன் என்றபடி லேசான புன்னகை சிந்த சிந்த
கண்இமைக்காமல் அவளை பார்த்து சிரித்து கொண்டே நீ அழகா இருக்கே இன்னிக்கு என்றான் பிரஜின்… – en minmini thodar kadhai-11
ம்ம் நிஜமாகவா, தேங்யூவெரி மச்… என்று சொல்லி அந்த இடத்தை விட்டு சென்று அவரவர் வேலைகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்தனர்…
மதிய உணவு இடைவேளை நேரம் ஆனது.ஆபீஸ் கேன்டீனில் தனது லஞ்ச் பாக்ஸ்யினை வைத்து கொண்டு அவளின் வருகையை எண்ணி எண்ணி காத்து கொண்டிருந்தான் பிரஜின்…
அவள் வழக்கம் போலே வரவே இல்லை… உயிர்போகும் அளவிற்கு பசி வேறு… சரி கடைசி ஒரு ஐந்து நிமிஷம் காத்திருந்து பார்ப்போம் என்றபடி தனது டிபன் பாக்ஸ்யின் மேலே தனது கன்னத்தினை சாய்த்து அவள் வரும் வழியினை ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்தான்
மெதுவாக அன்னநடை போட்டு தன் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள் பப்பு…
சாய்த்து வைத்திருந்த தனது கழுத்தினை மேலே தூக்கி அவள் அன்னநடை போட்டு வருவதை பார்த்து வாயை பிளக்கவும், அதே
நேரம் லேசாக மூக்கை சுழித்துபடி சாரிடா லேட்டா ஆகிடுச்சு என்று பப்பு சொல்லவும் சரியாக இருந்தது…
பரவாயில்லை,வா வந்து உக்கார்ந்து சாப்பிடலாம்..,உசுரு போகுது என்றான் பிரஜின்…
அப்போ என் பேரு சொல்ல வேணாமா என்று செல்லமான புன்னகையால் கொஞ்சியபடி கேட்டாள் பப்பு…
ப்ளீஸ் சாப்பிட்டு விட்டு கேட்கட்டுமா ரொம்ப பசிக்குது என்றான் பிரஜின்…
சரி சரி ஓகே நீ சாப்பிட்டு விட்டே கேளு…ஓகே வா…
என்னுடைய நிஜமான பெயர் ஏஞ்சலின் கிரிஸ்டி…
பப்புனு அப்பாவும் கூப்பிட மாட்டாங்க, அம்முனு அம்மாவும் கூப்பிட மாட்டாங்க என்றவாறு கண்கலங்கினாள் பப்பு…
ஹே என்ன ஆச்சு இப்போ எதுக்கு கண்ணீர் வருது என்றபடி அவள் கண்கலங்கியதை பார்த்து தானும் கண்கலங்கினான்
பிரஜின்…
அப்போது அவள் கை அவளையும் அறியாமல் அவன் கைகளை பற்றி கொண்டிருந்தது…
பாகம் 12-ல் தொடரும்
ஏஞ்தலின்கிறிஸ்டி பெயருக்குப் பின்னால் ஒரு சுவாஸ்யம் இருக்கும் போல் தெரிகிறது
ரொம்பவும் இன்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது.
கதை சூடு பிடிக்கிறது.பப்புவின் உண்மை பெயர் தெரிந்துவிட்டாலும் அவள் கண்ணீரின் காரணம் என்ன…வழக்கம் போல சஸ்பென்ஸ்ஸோடு முடிகிறது கதை…நடை அருமை..வாழ்த்துகள்
படித்துவிட்டு உற்சாகமூட்டும் கருத்தை அள்ளித்தெளிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்…..உங்கள் எதிர்பார்ப்பை மனதில் இன்னுமின்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்….