என் மின்மினி (கதை பாகம் – 14)
சென்ற வாரம் – நீ என்னை காதலிக்குறீயா… முழுசா ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ளே காதலா…. அதெல்லாம் எனக்கு செட் ஆகாது.. – en minmini thodar kadhai-14.
ஓ…அப்போ என்னையும் உனக்கு பிடிச்சிருக்கு போலே… உன் நாணமான அழகு சிரிப்பை பார்த்தால் நீ காதலை ஏத்துக்குட்டேனு தோணுது… நான் நினைப்பது சரிதானே என்றபடி அவளது அழகான முகத்தை பார்த்து ரசித்தபடியே கேட்டான் பிரஜின்…
ஹே…அப்படியெல்லாம் ஒன்றும் ஒன்றும் இல்லை…என் மனசுல எவ்வளவு கவலைகள் பொதிந்து ஒழிந்து கிடக்குனு உனக்கு தெரியுமா???.அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உன்கூட டூயட் பாட சொல்றீயா???
நமக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் தேவை இல்லாத ஒரு விஷயம்…சுத்தமா எனக்கு இதுல உடன்பாடு இல்லை…
ஆனா ஒண்ணு எனக்கு உன்னை பிடிக்கவில்லை,அதனால் வேண்டாம்னு சொல்றேன்னு மட்டும் நினைக்காதே…உன்னை மட்டும் தான் எனக்கு எப்போதும் பிடிக்கும்…ஆனால் நமக்குள்ளே காதல் என்ற ஓன்று எப்போதும் வேணாம்,ப்ளீஸ் என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
ஓகோ… என்னை பிடிக்காம வேண்டாம்னு சொன்னால் கூட நீ சொல்லுவதை நான் ஒத்துக்கொள்வேன்…ஆனால் பிடிச்சிருக்குனு நீயே சொல்றே.ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே…அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல.
எப்போது நான் உன்னை முதன்முதலில் பார்த்தேனோ அப்போதே முடிவு செய்துவிட்டேன்…உன்னோட சுக துக்கங்கள்தான் என்னோட சுக துக்கங்கள் என்றான் பிரஜின்…
ஹே…சும்மா.ஏதோ பேசவேண்டும் அப்படினு சொல்லிட்டு சினிமா டயலாக் எல்லாம் பேச வேண்டாம்.என் கவலைகளை நான் யாருக்கும் ஷேர் பண்ண விரும்பல.அது ஏற்படுத்திய காயம் என்னையும் என் வாழ்க்கையும் மட்டும் சேர்ந்ததே தவிர இடையில் நீ யாரு என்று சட்டென மூஞ்சில் அடித்தவாறு சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்ப தயாரானாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கும் போது பாதியிலே கிளம்புறே.
பேசவிட்டால் ரொம்பத்தான் பேசிட்டே போயிட்டு இருக்கே.உன்னை எனக்கு புடிச்சிருக்கு அவ்வளவுதான்.
உனக்கு என்னை புடிச்சிருக்கு, புடிக்கவில்லை அது இப்போ பிரச்னை இல்லை.
ஆனால் உன் மனசுல எதைப்பற்றிய கவலைகள் ஓடிட்டு இருக்கோ அத நீ என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…என்னை ஒரு நண்பனாக நினைத்து கூட சொல்லலாம் இல்லையா என்று கேட்டவாறே அவள் கைகளை பிடித்தபடி கொஞ்சம் உட்கார்ந்து தான் பேசு என்றான் பிரஜின்…
முதலில் கையை விடு.எல்லோரும் பாக்குறாங்க.என்னைப்பற்றி உனக்கு எதுவும் தெரியாது.அதைப்பற்றி நீ தெரிஞ்சுக்கவும் அவசியம் இல்லை.ஒருவேளை என்னை லவ் பண்ணியே ஆகணும்ணா என்னோட வாழ்க்கையினை,என் குடும்பத்தினை பற்றி முதலில் தெரிஞ்சுக்கோ..அதுக்கு அப்புறமும் என்னை பிடிச்சிருக்குனா ஓகே என்று கோபத்துடன் அவன் பிடித்திருந்த கையை
உதறிவிட்டு கிளம்பினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
என்ன செய்வது என்றறியாமல் அவள் செல்வதை கண்இமைக்காமல் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தான் பிரஜின்.
– அ.மு.பெருமாள்
பாகம் 15-ல் தொடரும்
தொடர் நல்லா விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
ஏஞ்சல் ஒரு வேளை அவனுடைய தங்கையோ என எண்ணவைக்கிறது.
அருமையான தொடர் படிக்கும் ஆவலையும் அடுத்தது என்ன வரப் போகிறது என்ற எதிர்பார்ப்புகளை கொடுக்கும் கதை. பாராட்டுக்கள்
Interesting aga irukku
மின்மினி பட்டாம்பூச்சியாய் மாறி பறக்க ஆரம்பித்துவிட்டது..எதிர்பார்ப்பில் நகர்கிறது…
தொடரை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி