என் மின்மினி (கதை பாகம் – 23)
சென்ற வாரம் – கைகோர்த்து பள்ளிசென்ற காலமும் மாறி தனித்தனியாக எங்கள் பள்ளிப்பயணம் தொடர என் தம்பிக்கும் எனக்கும் உள்ள ஒரு அற்புதமான பாசப்பிணைப்பு அறுபட்டது – en minmini thodar kadhai-23.
அவன் மட்டும் இங்கிலீஸ் மீடியம் நான் மட்டும் இந்த கவர்மெண்ட் ஸ்கூல்லில் படிக்கணுமா என்று மனசுக்குள் ஒரு வருத்தம்.இருந்தாலும் அப்பாவின் நிலைமையினை புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக என்னையே மாற்றி
கொண்டிருந்தேன்.அப்போதும் தம்பி மேலே கொஞ்சம் பொறாமை இருந்ததே தவிர பாசம் குறையவே இல்லை.
குறைந்த வருமானமாக இருந்தாலும் ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்…
நாட்கள் விரைந்து ஓட ஐந்து ஆறு வருடங்கள் ஆகி போனது.அப்பாவும் அவர் வேலை செய்த வாழைத்தார் மண்டியில் இருந்து மாறி வேறு ஒரு அரிசி ஆலையில் அக்கௌன்டன்ட் வேலையில் இருந்தார்.தேவையான அளவுக்கு சம்பாதிக்கவும் ஆரம்பித்து விட்டார்.நானும் வயதுக்கு வந்து நின்றேன்…
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் எங்க சித்தப்பா பெரியப்பா என அனைவரையும் அழைத்து எனது பூப்புனித விழாவினை வீடே களைகட்ட ஊரைக்கூட்டி சிறப்பாக செய்து முடித்தார் அப்பா.
சடங்கு சம்பிரதாயங்களும் இனிதே முடிய மீண்டும் குடும்பமாக உறவினர்களிடம் அமர்ந்து பேசிகொண்டிருந்த சமயம்.,கட கட வென ஒரு ஆட்டோ வந்து எங்க வீட்டு வாசலில் நிற்கவும் மூன்று பேர் அதில் இருந்து இறங்கினர்…
அப்பா மட்டும் அந்த கூட்டத்தில் இருந்து விரைந்து எழுந்து சென்று சிரித்தவாறே அவர்களை வரவேற்று கொண்டிருந்தார்.ஆனால் ஆட்டோவில் இறங்கிய மூன்று பேரும் அவரை கோபத்துடன் நெருங்கி திட்டுவது போலே தோன்றியது.
அவர்களுக்குள் என்ன நடக்குது அப்படினு பார்க்கலாம்னு மெதுவாக அவர்களை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் போதே ஒரு குரல்….
ஹே எங்க போறே.இன்னிக்குதான் தலைக்கு தண்ணி ஊத்தியிருக்கு அதுக்குள்ளே வெளியே போறே.காத்து கருப்பு அடிச்சுரும்.,இங்கேயே இரு என்றது.
என்ன செய்வது என்று அறியாமல் தூரத்தில் இருந்து கொண்டு ஒன்றும் புரியாமல் என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் அவர்களையும் அப்பாவையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தேன் – en minmini thodar kadhai-23
– அ.மு.பெருமாள்
பாகம் 24-ல் தொடரும்
கதை மிகவும் பிடித்து இருக்கிறது
தொடரட்டும் மேலும்.. வாழ்த்துகள்
கதை விறுவிறுப்பாக போகிறது …நன்று
கதை விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸுடனும் நகர்கிறது.
கதை அமைப்பு அருமையாக செல்கிறது.. உடன் பயணிக்கிறோம்..