கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world.

post coronavirus world

கொரோனாவிற்கு பின்
உலகம் தன் சுற்று வட்ட
பாதையில் தான் சுழலும்

மனிதம்
விலகி நடந்ததின்
பலனை உணரும்
இனி சீரான பாதையை
வந்தடையும்

இனி உலகம்
எல்லா ஜாடைகளும்
கண்களாலே பரிமாறும்,
வாயுக்கும் வயிற்றுக்குமான
இடைவெளியை உணரும்

வீட்டிலும் சரி
மனதிலும் சரி
பழைய குப்பைகளை களையும்

கோவில், தேவாலயம், மசூதி
விவசாயம், பள்ளி, மருத்துவமனைகளின்
தேவையை நன்கு உணரும்…

நல்லதை நாடியே நலம் நாடும்
நல்லவர்களை இனம்கண்டு
இனம்காணாமல் பழகும்…

இருப்பதை வைத்து வாழ பழகும்
கட்டிட காடுகளைவிட்டு
கானக மேடுகளை நேசிக்கும்…

என்புதோல் போர்த்த உடல் தான்
என்றோ ஒருநாள் பிணம் தான்
இல்லாதவருக்கு ஈகைத்தரும்
இயன்றவரை இன்பம்தரும்..

– அந்தியூரான் (ஸ்ரீராம் பழனிசாமி)

You may also like...

9 Responses

  1. Ranjaniraj says:

    மிகவும் நிதர்சனமான வரிகள்… இன்றைய வாழ்க்கை சூழலை எதிர் காலத்துக்கு ஒப்பிட்டு கூரியமைக்கு நன்றி🙏🙏🙏 வாழ்த்துக்கள்💐💐💐💐

  2. உஷாமுத்துராமன் says:

    மிகவும் யதார்த்தமான கவிதை வாழ்த்துக்கள்

  3. அன்புதமிழ் says:

    நிதர்சனமான வரிகள்..
    வாழ்த்துகள் தோழரே…
    தொடரட்டும் உங்கள் பயணம்….

  4. Rajakumari says:

    கவிதை நன்றாக இருக்கிறது

  5. R. Brinda says:

    இப்படி எல்லாம் நடந்தால் நல்லது தான். வாழ்த்துக்கள்!!

  6. Kavi devika says:

    அருமையான எழுத்தாளுமைகள். வாழ்த்துகள்

  7. தி.வள்ளி says:

    சகோதரர் கவிதை அருமை…கொரானோவிற்கு பின் உலகம் மாறுமா..இந்தக் கேள்வி என்னுள் உழன்று கொண்டிருக்க.விடைபகர்ந்துவிட்டது இக்கவிதை

  8. Ananthi says:

    Excellent narration,Sir

  9. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    மக்களின் மனவோட்டத்தை பிரதி எடுத்த கவிக்கு வாழ்த்துக்கள்