தூங்கா விழிகள் – இரா. செல்வமணி
கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மை
கவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam.
ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த அற்புதக் கவிதை நூலைப் பற்றிய இன்றைய விமர்சனம்.
உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை இரண்டு அடிகளில் நாம் மனப்பாடப்பாடல்கள் ஆகவே படித்தும் எழுதியும் புரிந்தும் தெளிந்தும் வந்திருக்கிறோம், இந்த நூலுக்கும் திருக்குறளுக்கும் அப்படி ஒரு பந்தம் .
முதலில் நூல் ஆசிரியரைப் பற்றி பார்ப்போம்.
பாவைமதி வெளியிட்டுள்ள இந் நூலின் பெயர் “தூங்காத விழிகள்”, நூலாசிரியர் திரு செல்வமணி அவர்கள் நெல்லை மாவட்டம் பாப்பா குடியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். “அகம் சொல்லும் முகம்“,
“வான்வெளியில் என் நட்சத்திரங்கள்” என்ற இரண்டு நூல்களை படைத்துள்ள இவருக்கு இந்த நூல் மூன்றாவது நூலாகும். கணித ஆசிரியர் கவிதை அவரது தமிழ்ப்பற்றை நமக்கு அழகாக எடுத்து காட்டுகிறது.
சரி வாருங்கள் இனி புத்தகத்தை பற்றி காண்போம் பொதுவாக ஒரு நூலின்
அட்டைப்படம் அந்த நூலைப் பற்றிய கருத்துக்களை நமக்கு சுட்டிக்காட்டும் அளவில் இருப்பதால் தான் அந்நூல் அதிகமாக வரவேற்ப்பைபெறுகிறது எனலாம்…. இந்நூலின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுதே பழைய புராணங்களில் வரும் காவிய தலைவர்களை நமக்கு நம் கண்முன்
காட்டுகிறது. வள்ளுவர் பெருமான் உரைத்த கருத்துக்களை நயம்பட அழகுடன் எதுகை மோனை அணிகளுடன் அழகாய் அற்புதமாய் செதுக்கியுள்ளார். என் மனம் கவர்ந்த சில சிற்பங்களின் வளைவுகளையும் வடிவங்களையும் இங்க எடுத்து இயம்புகிறேன் உங்களுக்காக.. – thoongaa vizhigal puthaga vimarsanam
மர வாழ்க்கை
அதோஅவரிடம்
நாலு வாகனங்கள்
இருக்கிறது…
அன்பான மனைவி இருக்கிறாரா ??
அவரது பேச்சை கேட்க
எப்போதும்
400 பேர் இருக்காங்க…
அதுல நல்ல மனுசன் நாலு பேராவது உண்டா???
கைகட்டி வேலை செய்திட நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் உண்டு.
கை கொடுத்து காப்பாற்றிய சுற்றத்தார் சிலரேனும் வருவதுண்டோ??
பத்து வீட்டுக்கு
சொந்தக்காரர் அவர்
ஒரே ஒரு வீட்டில்
ஒருமுறையேனும்
மழலைகள் விளையாடி மகிழ்வதும் டோ
மௌனம் சொன்னது மர வாழ்க்கையினை….
மனித வாழ்வில் அன்பின் இன்றியமையாமையை எடுத்துக்கூறும் உன்னத குரலின் உயர்ந்த கவிதையிது… என்னை கவர்ந்த கவியும் இது…
இருவரிக் குறளை அதற்கேற்ப ஓவியம் தீட்டி இருபது வரிகளில் காவியம் படைத்து தித்திப்பாய் தீந்தமிழில் உவந்து நமக்களித்த தமிழ் கவிஞர் செல்வமணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. நான் படித்த குறளின் கவியை நீங்களும் படிக்க வேண்டுகிறேன் படியுங்கள் படித்து தெளியுங்கள்.
– கவி தேவிகா, தென்காசி.
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும், பெற்றுத்தர முயல்கிறோம்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
கவிதை நன்றாக இருக்கிறது
சகோதரி தேவிகா அவர்களின் விமர்சனம் வழக்கம்போல ஒரு கவிதையாய் மலர்ந்தது .அவர் கூறியது படி அட்டைப் படமே மிகவும் அழகாக அமைந்துள்ளது . கவிதையும் மிக அருமை. கவிஞருக்கும்…விமர்சித்த பெண் கவிக்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
கவிஞர் செல்வமணியின் கவிதையை மிக அழகாக விமர்சனம் செய்திருக்கும் கவி தேவிகாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!
கவி தேவிகா அவர்களுக்கு மிக்க நன்றி.. நீரோடை நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. நூல் வந்து ஓராண்டாகியும் உயிர்ப்போடு உலவுகிறது என்பதை அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி !
பலரின் தூக்கத்தை கெடுக்கும் புத்தகமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அதற்கு இது போல் ஒரு சிறந்த நூல் விமர்சனமும் அவசியம்