என் மின்மினி (கதை பாகம் – 20)
சென்ற வாரம் – கையை விடு என்று பிடித்திருந்த தன் கையினை அவன்
கையில் இருந்து விலக்க முற்பட்டு தோற்றுப்போனாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-20.
ஹே என்ன பண்றே எல்லோரும் பாக்குறாங்க கையை விடு என்று அவனிடம் கெஞ்சினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
என்ன இப்படி கெஞ்சினால் விட்டுருவேனா. இப்படி இடையில் விட்டு செல்லவா உன் கையை புடிச்சேன்.ஒரு முறை ஐ லவ் யூ சொல்லு விட்டு விடுறேன் என்றான் பிரஜின்.
ம்ம்ம் முடியவே முடியாது நான் உன்கிட்டே தனியாக பேசணும்னு சொன்ன காரணம் என்னனு கூட கேட்காமல் சும்மா லவ் கிவ்னு பேசி எரிச்சல்படுத்தாதே என்றவாறு அவன் கையினை உதறிதள்ளினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி.
உனக்கு இப்போ என்னதான் பிரச்னை.எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு வெளிப்படையாக நான் சொல்லிட்டேன்,உனக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருக்குனு தெரியும்.ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒரு விஷயம் உன்னை என்கிட்டே இருந்து விலகியே இருக்க செய்கிறது.அப்படி என்ன இருக்கு உன்னோட லைஃப்ல,ப்ளீஸ் சொல்லு இப்போவே என்றான் பிரஜின்.
அவன் பேச பேச அவளது கண்கள் கலங்க தொடங்கியது.மெதுவாக விம்மியபடி பேச ஆரம்பித்தாள்… எங்க குடும்பத்துல இப்போது மிச்சம் இருக்குற ஒரே ஒரு ஆள் நான் மட்டும் தான்.
அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் என்னை விட்டுட்டு போயாச்சு.நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியாமல் இவ்வளவு நாள் வாழ்ந்துட்டு வந்தாச்சு.இந்த நிலமையில் எனக்கு இந்த காதல்கீதல் எல்லாம் தேவையா என்றபடி மீண்டும் கலங்க தொடங்கி சொல்வதற்கு வார்த்தைகள் வராமல் திகைத்தபடி கைகளை பிசைந்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி.
அவளது கண்ணீரை பார்க்க பார்க்க அவனது கண்களும் கலங்க தொடங்கின. ஹே என்ன இது குழந்தைபோலே அழுதுக்கிட்டு ஏன் நானில்லையா,உன்னை பார்த்து கொள்ள மாட்டேனா? என்ன ஆனாலும் பரவாயில்லை நீதான் இனி என்னோட லைஃப் என்றான் பிரஜின்.
புரியாமல் பேசாதே.ஏதோ நான் அழுகிறேன் என்று என்னை சமாதான படுத்த முயற்சி செய்யாதே.இப்போது வாயால் சொல்ல எல்லாம் எளிதாக இருக்கும்.ஆனால் என்கூட வாழும் போது தான் வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கும்.அது நம்ம ரெண்டு பேருக்குமே கஷ்டம்.அதனால் நாம் இப்படியே நண்பர்களாகவே இருக்கலாம் என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி.
ஏன் என்னை நம்பாதது போலே பேசறே.நான் பேசுவது எல்லாமே உண்மை.நான் உன்னை காதலிப்பது உண்மை என்பதை எப்படி உன்கிட்டே நிரூபித்து காட்ட என்று யோசித்தப்படியே தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி அவளது விரலினை பிடித்து அணிவித்தான் பிரஜின்.
அவன் தன் விரல்களை பிடித்து மோதிரம் மாற்றவும் அவளது உதடுகள் உணர்ச்சிகளால் தழுதழுக்க என்ன சொல்வது என்று அறியாமல் அவனது முகத்தயே பார்த்து கொண்டிருந்தாள் ஏஞ்சலின் கிருஸ்டி.
கண்களின் ஓரங்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்து அவனது விரல்களில் விழுந்தது – en minmini thodar kadhai-20.
கதையில் நல்ல திருப்பம்..காத்திருப்போம் நாயகி என்ன காரணம் சொல்கிறாளென..
கதை நன்றாக இருக்கிறது
நல்ல திருப்பம்!
மிகுந்த ஆவலில்… கதைகளம்