முத்தான முதலீடுகள் – புத்தக விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் – muthaleedu puthaga vimarsanam

muthaleedu puthaga vimarsanam

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர். எஸ். திருமலை கொழுந்து, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். 2017 -ஆண்டு அகில இந்திய குழந்தைகள் மருத்துவ கழகத்தின் தமிழ்நாட்டு கிளையின் தலைவராக பணியாற்றியவர்.

‘மருத்துவம் தன் தொழிலாக இருந்தாலும், தான் அனுபவத்தில் தெரிந்து கொண்ட அடிப்படைப் பொருளாதாரத்தை, சாதாரண மக்களுக்கு மிக சுலபமாக புரியுமாறு கொண்டு சேர்க்க வேண்டும்’ என்ற தனது ஆசையே இந்த புத்தகத்தை எழுதுவதற்கு காரணம் என்று கூறுகிறார்.

இப் புத்தகத்திற்கு அணிந்துரை அளித்திருப்பவர் , பொள்ளாச்சி ந.க.ம கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு.நமசிவாயம் அவர்கள்.”சிக்கனமே எக்கணமும் நம்மைக் காக்கும் கவசம்’ என்று கூறும் இவர், இச் சிறிய நூல் ‘முதலீடுகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் தரும் அரிய பொக்கிஷம்’ என்று கூறுகிறார்.

இப்புத்தகம் , முதலீடுகள் புத்திசாலித்தனமாக எவ்வாறு திட்டமிட்டு செய்யப்பட வேண்டும் என்பதை அழகாகக் கூறுகிறது.

வளமான வாழ்வுக்கு பதினோரு வெற்றிப் படிகளை காட்டுகிறார் ஆசிரியர். பணி ஓய்வுக்கான பொருளாதார திட்டமிடல் பற்றியும்… மூத்த குடிமக்களுக்கான பொருளாதார சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதனையும் விளக்குகிறார் இந்நூலில் -muthaleedu puthaga vimarsanam.

மேலும் இந்நூல்.. பரஸ்பரநிதி…பங்கு சந்தை முதலீடு ..வீடு, மனைகளில் முதலீடு …தங்கத்தில் முதலீடு …ஆயுள் காப்பீடு ..மருத்துவ காப்பீடு …வருமான வரி …என அனைத்து பிரிவுகளிலும் அழகாக தெளிவுபடுத்துகிறது.
‘மாதாந்திரத் தவணை திட்டம் வரமா சாபமா? ‘என்ற கேள்வியை முன்வைத்து, விளக்குகிறார் ஆசிரியர்.

இளம்வயதில் சேமிப்பதின் அவசியத்தையும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறது இந்நூல்
“சிறுக, சிறுக சேமிக்கப் பழகு.. செழிப்பான வாழ்விற்கு அதான் அழகு”என்று கூறுவதுடன்.. இளம் வயதிலேயே அடிப்படை பொருளாதாரம் தெரிந்தால், வாழ்க்கை பயனுள்ளதாகவும் இனிமையாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் இந்நூலை இளைய தலைமுறைக்கு சமர்ப்பிப்பதாக கூறி முடிக்கிறார் நூலாசிரியர்.மொத்தத்தில் பணத்தை எவ்வாறு பணமாக்கலாம் என்பதை ‘முத்தான முதலீடுகள்’ அழகாகக் கூறுகிறது.அனைவரும் படித்து அவசியம் பயன்பெற வேண்டிய நூல் -muthaleedu puthaga vimarsanam.

புத்தகம் கிடைக்குமிடம்: அமேசான். கிண்டில்.

– தி. வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

3 Responses

  1. R. Brinda says:

    சேமிப்பின் அவசியத்தை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். புத்தக விமர்சனம் மிக அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

  2. Rajakumari says:

    புத்தக விமர்சனம் அருமை

  3. கதிர் says:

    பயனுள்ள புத்தகம் மற்றும் விமர்சனம்