பொது கவிதைகள் தொகுப்பு – 6

ஆசிரியர் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரா. அன்புதமிழ் அவர்களின் இரண்டு கவிதைகளை ஒரே பதிவாக நீரோடை வெளியிடுகிறது – pothu kavithaigal thoguppu 6.

pothu kavithaigal thoguppu 6

நீ நீயாய் இரு

அன்பாய் நீ இருந்தால்
அழகாய் தெரிவாய் உன்
அன்பை பெறுபவருக்கு

நம்பிக்கையோடு
நீ நடந்தால்
நல்லவனாய் தெரிவாய்
உன்னை சார்ந்தவருக்கு

உழைப்போடு என்றும்
நீ இருந்தால்
உயர்வாய் தெரிவாய்
உன்னை உற்று நோக்குபவருக்கு – pothu kavithaigal thoguppu 6

இயற்கையோடு நீ
இணைந்திருந்தால்
இறைவனாய் தெரிவாய்
இல்லாதவருக்கு
இறைவனும் தெரிவார்
அவருருவில் உனக்கு

வாழ்வை இரசித்து
வாழ்ந்தால்
கஷ்டங்களெல்லாம்
இஷ்டங்களாகும்
கவலைகளுடனும்
கொஞ்சம் கபடியாட
தோன்றும்


விசித்திர விளையாட்டு

வாழ்க்கை ஒரு
விசித்திரமான
விளையாட்டு

இருவரால்
உருவாவோம்
ஒருவராக
தனித்தே வருவோம்

பலரால்
இணைந்திருப்போம்
பாசத்தால்
பிணைந்திருப்போம்

உறவுகளென்று
ஊரேயிருக்கும்
உரிமையாய் போனால்
உன்னையாரென்று கேட்கும்

தவறேதுமில்லை அவர்களிடத்தில்
தள்ளிநின்று பார்த்தால் தெரியும்
தவறுகள் நம்மிடத்தில்தானென்று

இன்றைய வாழ்க்கையில்
தன்னை காக்க வழியில்லாபோது
நம்மையும் சேர்க்க ஏது
வழி அவர்களுக்கு

ஒவ்வொரு உயிருக்கும்
உறவென்று ஆயிரமிருக்கும்
அவரவர் வாழ்வை
அவரவர் தனியேதான்
எதிர்கொள்ள வேண்டும்

நாம் ஒன்றாய் இருப்பதாய்
ஓர் மாயையிலேயே
உலகில் உலவுகிறோம்
ஆனால் இங்கு வாழ்வதோ

அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் வாழ்க்கை

– இரா. அன்புதமிழ்..

You may also like...

4 Responses

  1. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    இரு கவிதைகளும் அருமை 👌

  2. Rajakumari says:

    இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கின்றன

  3. Kavi devika says:

    அருமை. நீ நீயாக இருந்தால் நீங்களும் கிடைப்பீர்கள்..வாழ்த்துகள் கவிஞருக்கு….

  4. தி.வள்ளி says:

    மிகவும் அருமை இரு கவிதைகளும் ..வாழ் வின் விசித்திர விளையாட்டை அழகாக விளக்கி இருக்கிறார் கவிஞர்.