என் மின்மினி தொடர்கதை (பாகம் – 57)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-57
En minmini thodar kadhai
வாழ்க்கையில் என்ன பண்ணுவீயோ தெரியல.,ஆனால் கேள்வி மட்டும் சரியான நேரத்தில் கேட்டு வெச்சுறுவீயே என்று குறும்பாக அவளை கேலி செய்தான் பிரஜின்…
உன் பாராட்டுக்கு மிக்க நன்றி.என்னை கலாய்க்குறத விட்டுட்டு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுறீயா.,அந்த கோவில் மணியோசை எங்கே இருந்து வருது என்றாள் ஏஞ்சலின்… ம்ம் சிரித்தபடியே கோவில் மணியோசை கோவிலில் இருந்து தான் வரும்.வேற எங்க இருந்து வரும் என்று மீண்டும் மீண்டும் அவளை கேலி செய்ய அவளும் புன்னகையால் பூக்களை சிந்தியபடி ஹே…கிண்டல் பண்ணாமல் சொல்லு என்றாள்…
பதில் ஏதும் சொல்லாமல் அவளது கையை பிடித்தபடி வேகமாக அவன் நடக்க உலகமே தன்வசம் ஆனது போலே ஓர் உணர்வு அவளுக்குள். ஆனந்தமாக அவன் செல்லும் திசையில் கேள்விக்கணைகளை தன்னுள் அடக்கியபடி மகிழ்ச்சியில் நடந்தாள்… கொஞ்சம் தூரம் நடந்தவன் தனது நடையின் வேகத்தை குறைத்து பிடித்திருந்த அவளது கையையும் விடுத்து தலைக்கு மேலே தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினான் பிரஜின்…
உடன் நடந்தவளும் அவன் கைகளை விட்டதும் மேல்நோக்கி பார்த்து வியந்தவண்ணம் அவளை அறியாமலேயே கைகளை கூப்பி வணங்கினாள்…
இருவரும் கைகூப்பி வணங்கியபடி மெய்மறந்து நின்றுகொண்டிருக்க., எதிரில் வந்த ஒரு பெரிய யானை அவர்கள் தலையில் நீரை வாரி இறைத்தது. உடனே யானை மேல் இருந்த யானைபாகனும் அவர்கள் மேலே மலர்களை தூவி ஆசீகள் வழங்க கூப்பிய கைகளை கீழிறக்கி எதிரில் விண்ணோக்கி கம்பீரமாய் காட்சியளித்த கோவிலின் கோபுரத்தை பார்த்து வியந்து நின்றனர்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-57
– அ.மு.பெருமாள்
பாகம் 58-ல் தொடரும்