புதுமைப் பெண்
“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப் போகிறாளோ, கடவுளுக்குத் தான் தெரியும். இப்படி அங்கக் குறைகளோடு வாழ்வதிலும் பார்க்க கேதியிலைபோய் சேர்ந்திட்டால் நல்லது” பொரிந்து கொட்டினாள் சீதாப்பாட்டி என்ற எண்பது வயதைத் தாண்டிய சிவகாமியின் . தாய் சீதாலஷ்மி puthumai pen tamil story.
“ அம்மா ஒன்றுமே தெரியாத என் மகள் சரஸ்வதியைத் திட்டாதே. நாங்கள் இல்லாத காலத்தில் இவளின் அண்ணன் ஆதித்தன் இருக்கிறான் இவளைக் கவனித்துக் கொள்ள. இவள் அழகுக்கு இவளைப் போல் குறைபாடு உள்ளவன் ஒருவன்கணவனாக வராமலா போவான்”? சிவகாமி தாயுக்கு உரத்த குரலில் பதில் அளித்தாள்.
தாயினதும் பாட்டியினதும் உரையாடலை அவர்ளின் வாய் அசைவு மூலம் அறிந்து கொள்ளும் புத்திக்கூர்மை சரஸ்வதிக்கு இருந்தது. அதைத் தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினாள்..
சிவராசா, சிவகாமி தம்பதிகளுக்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை ஆதித்தன். அவனுக்கு நான்கு வருடங்களுக்குப்பிறகு பிறந்தவள் சரஸ்வதி. அழகுக்குக் குறைவில்லை ஆனால் அவள் அங்கங்ளில் தான் குறையிருந்தது. பெற்றோர்பேசுவதெல்லாம் அவளுக்குத் தெளிவாகப் புரியும். மௌனமாக கேட்டுக்;கொண்டு இருப்பாள். அவளது முகபாவனையில்இருந்து பெற்றோருக்குத் தெரியும், அவளுக்குத் தாங்கள் பேசியது புரிந்து விட்டதென்று. டிவியில் போகும் நகைச்சுவைகாட்சிகளைப் பார்த்து கெக்கட்டம் விட்டுச் சிரிப்பாள். சோக காட்சிகளைக் கண்டு அழுவாள். அவள் விரும்பிப் பார்ப்பதுகுறும் படங்கள். அதனால் அவளின் சிந்தனையிலும் புது அறிவியல் கதைகள் தோன்றின என அறிந்தற்கு உதாரணம், அவள் விரும்பிப் பார்ப்பது ஸ்டீபன் ஸ்பில்பேர்;;கின் அறிவியல் சார்ந்த படங்கள்.
ஆதித்தன் ஒரு மருத்துவ பௌதிக துறையில் (Medical Physics) முனைவர் பட்டம்பெற்றவன் இவன்மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட கருவிகளைப் பற்றp முற்றாக அறிந்திருந்தான். ஆதித்தன், தன் தங்னகயின்குறைப்பாட்டினை நிவர்த்தி செய்ய தான் ஏதாவது ஒரு வழி ஒன்று செய்தாக வேண்டும்; என முடிவு எடுத்தான். தனதுபேராசிரியர் வில்லியத்திடம் அதுபற்றி அவன் உரையாடிய போது அவர் சொன்ன விபரங்களைக்; கேட்டுஆச்சரியப்பட்டான்.
“ ஆதித்தா சில நூற்றாண்டுகளாக மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கற்பனையில் இருந்து நகர்த்திஎழுத்து வடிவில் மாற்றுவதே மனிதனின் ஒரு லட்சியமாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன், விஞ்ஞானிகள் குழுமனிதனின் சிந்தனைகளை, கருவி மூலம் வாசித்து எழுத்து, பேச்சு வடிவங்களில் மாற்றும் ஒரு தொழில் நுட்பத்தைஉருவாக்கமுடியும் என அறிவித்தார்கள்.”
“என்ன சேர் சொல்லுகிறீர்கள். அப்படியானால் என் தங்கச்சியின் பிரச்சனைக்கு விமோசனம் உண்டு என்கிறீர்களா”?
“ஏன் உன் தங்கச்சி பேச, எழுத முயாதவளா”?
“ஆமாம் சேர். அவள் காதும் பார்வையும் கூர்மையானது. ஆனால் வாயும் கைகளும் தான் பிறந்தது முதல், செயல்இழந்துவிட்டது. அவளது முக பாவனையில் இருந்து எதைச் சொல்லுகிறாள் என்று எங்களுக்கு புரிந்துவிடும். அதுமட்டமல்ல, பிறர் பேசும்போது அவர்களின் வாய் அசைவில் இருந்து என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்ஆற்றல் படைத்தவள். சரியான புத்திக்கூர்மை உள்ளவள். அறிவியல் படங்களைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவள். கடவுள் அவளுக்கு குறைவைத்தாலும,; மறுபக்கத்தில் அபாரமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அவளது ஐகியூ(IQ)எனப்படும் நுண்ணறிவின் ஈவு 190 என்றால் நம்ப மாட்டீர்கள்.; இறைவன் அவள் உடலில் செயல்படும் சக்தியைக்குறைத்து மறுபக்கத்தில் சிந்திக்கும் சக்தியைக் கூட்டியிருக்கிறார் இறைவன்;”.
“ நீ சொல்வதைக் கேட்க எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போ நல்ல கற்பனை வளம் இருந்தால் அவள்எழுத்தாளினி ஆகலாமே”?
“அது எப்படி முடியும்? அவளுக்குத்தான் பேசவும் எழுதவும் முடியாதே“.
“அது பிரச்சனையில்லை. நீ அவள் சிந்தனையில் தோன்றும் சிந்தனை அலைகளை எழுத்து வடிவுக்கு மாற்றக் கூடிய கருவிஒன்றைக் கண்டுபிடி. அப்போ பிரச்சனை தீர்ந்தது. அவள் அறியவில் கதைகள் எழுதி பிரபல்யமான எழுத்தாளர்களானஆத்தர் ஏ சி கிளார்க், ஐசாக் அசிமோவ், எச் ஜி; வெல்ஸ், பிலிப் டிக் போன்;று வரலாம்”.
“இது மகத்தான தாக்கங்களை உண்டு பன்னும் தொழில் நுட்ப வளர்ச்சி தான். பக்கவாதம் மூளை பாதிப்பு மூலம் பேசும்சக்தியையும்,; கைகள் வழங்காது போன பலரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்;. இக்கருவியைக் கண்டு பிடித்தால்மருத்துவர்கள் நோயாளிகளின் சிந்தனைச் சக்தி அறிந்து அதற்கு ஏற்ப வைத்தியம்; செய்ய முடியும். அதுமட்டுமல்ல தாம்செய்த குறத்தை ஒப்புக் கொள்ளாத குற்றவாளிகள் மனதில் என்ன இருக்கிறது என அறியவும் முடியும். இது ஒரு வகைபொய் சொல்வதைக் கருவி மூலம் கண்டு பிடிக்கும் வழியாகும். நீதிபதிகள் குற்றம் புரிந்த நபர்கள் உண்மைகூறுகிறார்களா என அறிந்து தீர்ப்பு வழங்க முடியும். அதுவுமல்லாமல் காதலர்கள் ஒருவர் மனதை ஒருவர் அறியக்கூடியதாக இருக்கும். அவ்வளவு பயன்கள் இருந்தும்; எண்ணங்களை இரகசியமாக ஒட்டுக் கேட்க இது உதவும்”;;.
“ எதற்கும் சிந்தனை அலைகளை, எழுத்து வடிவில் ஆக்குவதற்கு, பரிசோதனைக்கு உற்பட்டவரின் சம்மதம் அவசியம்தேவை. ஏன் என்றால் அவரின் சம்மதம் இல்லாமல் அவர் தலையில் மின்வாய்த் தொடை எனப்படும் எலக்டுரோட்இணைப்பு கொடுக்கப்படமுடியாது. சிந்தனை அலைகளைத் தலையில் பொருத்தப்பட்ட இவ் எலக்டுரோட்டுகள் சேமித்துமின்அலைகளக மாற்றி கணினிக்கு சமர்ப்பிக்கும். அந்த மின் அலைகளை எழுத்துவடிவில் மாற்றக்டிய மென்போருள்ஒன்றை எழுதவேண்டும். தற்போது பேச்சினை எழுத்துவடிவில் மாற்றும் வொயிஸ் ரெகக்னிசன் தொழில் நுட்ப முறை ( Voice RecognitionTechnology); இயங்கி வருகிறது என்பது உனக்குத் தெரியும் தானே ஆதித்தா” வில்லியம்ஸ் கேட்டார்.
“ தெரியும் சார். ஆனால் முதலில் யாரிடம் இதைப் பரிசோதிப்பது என்று தான் யோசிக்கிறன்”?
“ இதென்ன கேள்வி உன்னோடு ஆராச்சியில் ஈடுபடும் உன் காதலி வாணி இருக்கிறாளே. அவள் உன்னை உண்மையில்காதலிக்கிறாளா என்று அறியவும் முடியும்”, என்று சொல்லிச் சிரித்தார் வில்லியம்ஸ்.
********.
ஒருவருட தீவிர ஆராச்சி செய்து, சிந்தனை அலைகளை ஒலி அலைகளாகவும், எழுத்து வடிவத்தில் மாற்றும்கருவியை கண்டு பிடித்தலினால்; ஆதித்தனுக்கும் வாணிக்கும் பெருமிதம். சிந்தiனை அலைகளை ஒலியாகவும் ,எழுத்தாகவும் மாற்றும் மென்பொருளினை ஆதித்தன் , வாணி, பேராசிரியர் வில்லியம்ஸ் மூவரும் சேர்ந்தே ஜாவா, C++ மொழியினைப் பாவித்து எழுதினார்கள்.
தான் உருவாக்கிய கருவியை வாணியின் சிந்தனைகளை முதலில் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் மாற்ற ஆதித்தன்பரிசோதித்து வெற்றிகண்டான். அதன் பின் தன் சகோதரிமேல் அதைப் பாவிக்க பெற்றோரின் அனுமதிபெற அவர்களோடு பேசினான்.
“ அம்மா இனி சரஸ்வதி மனதில் என்ன சிந்திக்கிறாள் என்று என்னால் அறிய முடியும். அவளோடு நாம் பேசவும்முடியும். அவளது கற்பனை திறனை எழுத்துவடிவில் வெளிக் கொண்டு வர முடியும்”.
“ என்னடா ஆதித்தா சொல்லுகிறாய். உன் தங்கச்சி பிறவி ஊமை . அதுவுமல்லாமல் அவள் கைகள் செயல்படாது. அதனாலை அவளால் பேசவும்; எழுதவும் முடியாது. அதற்கு வைத்தியம் இல்லை” என்றாள் சிவகாமி.
“ வைத்தியம் தேவையில்லை அம்மா. தொழில் நுட்பம் இருக்கவே இருக்கு அவளைப் பேச எழுத வைக்க. “ ஆதித்தன் பெற்றோருக்கு விளங்கும் விதத்தில் எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதத்தைப் பெற்று, தன் தங்கையின் சம்மதத்தைப்பெற அவளோடு பேசினான்.
“ சரஸ்வதி உன் சிந்தனையில் இருப்பதை எழுத்து வடிவிலும் பேச்சு; வடிவிலும் மாற்றப் போகிறேன். அதேபோல் நாங்கள்உன்னோடு பேசம் போது அதற்கான பதிலை; நீ சிந்தித்துத் தந்தால் அதை ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும, இந்தக்கணனி தரும்.. இதாலை நீ கதைகள் எழுதி பிரபல்யமாகலாம். உனக்கு இந்தப் பரிசோதனைக்குச் சம்மதமா சரஸ்வதி”? ஆதித்தன்தன் தங்கையைக் கேட்டான்.
தனக்குச் சம்மதம் என்பதை முகத்தில் சிரிப்போடு தலையை ஆட்டிக் காட்டினாள்.
ஆறு எலக்டுரோடுகளை அவள் தலையில் பொருத்தி கணனியோடு இணைப்பு கொடுத்தான்.
ஆதித்தன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்;.
“ உன் பெயர் என்ன தங்கச்சி?”
“ சரஸ்வதி”
“ உன் அப்பா அம்மா பெயர்கள் என்ன “?
“ சிவராசா. சிவகாமி”.
“ நான் யார்? என் பெயர் என்ன“?
“ நீ என் ஆசை அண்ணா. உன் பெயர் ஆதித்தன்” கைதட்டிச் சிரித்து தன் மகிழ்ச்சியைக் காட்டி, தன் தன் சிந்தனைஅலைகள் மூலம் பதில் சொன்னாள்
“ சரஸ்வதி எங்களில் எவரை உனக்குப் பிடிக்கும்”?
“உங்கள் எல்லோரையும் பிடிக்கும். முக்கியமாக உன்னையும் அம்மாவையும்”.
“ உனக்கு என்ன செய்ய விருப்பம்”?
“ கதை எழுத விருப்பம் அண்ணா”.
“ என்ன விதமான கதைகள்”?
“சையன்ஸ் சம்பந்தப் பட்ட கதைகள்”.
“ சரி நீயே கற்பனை சேயது ஒரு சிறுகதையை உருவாக்கு அதை நான பத்திரிகை ஒன்று நடத்த விருக்கும் போட்டிக்குஅனுப்புகிறேன். முதலாம் பரிசு பத்தாயிரம் டொலர்கள்”
“ அண்ணா பரிசு கிடைத்தால் அந்தக காசு உன் ஆராச்சிக்கு என் பரிசு”.
அவள் பதிலை கேட்டு ஆதித்தன் தன் மேல் சரஸ்வதி எவ்வளவுக்கு அன்பு வைத்திருக்கிறாள் என்று அறிந்ததும் அவன்கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது . உடனே தங்கையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.
“ சரஸ்வதி, உன் முதல் கதைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய் ”?
ஆதித்தன் கேட்டான்.
“ புதுமைப் பெண்”.
அவளின் பதிலைக் கேட்டு இருந்தவர்கள் எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சீதாபாட்டி வாயடைத்துப்போனாள்.
“ சிவகாமி இவள் உங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வைரம்” என்றாள் தன்னையறியாமலே சீதாப்பட்டி.
(யாவும் சிந்தனையில் உதித்து, எழுத்து வடிவில் தோன்றியுள்ளது”
– பொன் குலேந்திரன் – கனடா
Nice story. its very motivating my self. Please update more stories like this.
It’s a very nice story I like this I like to study more stories like this