நெடுவாசல்
அறவழியில் மட்டுமல்ல… அறிவியல் வழியில் போராட வேண்டிய தருணம் இது…
நெடுவாசல் போராட்டத்தை பல வழிகளில் பலப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவென்று வரலாற்றை உற்று
ஆராய்ந்து பார்ப்பது தான் சிறந்த முறையாக இருக்கும் neduvaasal hydro carbon project.
ஜல்லிக்கட்டு போராட்டம் பல உன்னத சாதனைகளை படைத்தாலும் கடைசியில் அதிகார சூழ்ச்சி வலையில் சிக்க நேர்ந்தது. ஆனால் போராட்டத்தின் நல்விளைவு இன்னும் நீடிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அறிவியல் ரீதியாக பல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.பெப்சி மற்றும் கோலா பானங்களை வாயில் ஊற்றிய இளைஞர்கள் ரோட்டில் ஊற்றிய போது பொது மக்கள் பலர் அப்பானங்களின் தீங்கை உள்வாங்கி கொண்டார்கள்.
மேல்நாட்டு வகை மாடுகளின் இறக்குமதியால் நம் வாழ்வியல் ரீதியாக பெருநிறுவனங்களுக்கு அடிமையாகி விடுவோம் என மொத்த போராட்டமும் காட்டியது.இயற்கை வளம் மேலும் மேலும் சுரண்டப்பட்டு வாழ்வியல் அர்த்தமற்று போய் கொண்டிருக்கும் தருணத்தை மக்களுக்கு அது காட்டியது.
நெடுவாசல் போராட்டம்
நெடுவாசல் போராட்டம் வலு பெறும் முக்கியமான இத்தருணத்தில் தமிழ் இளைஞர் ஒருவரின் கருத்து பல அரசியல்வாதிகளின் சூட்சகமான வாதத்திற்கு சாட்டை அடிப்பது போல் உள்ளது. இது அறிவியல் ரீதியான போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. தமிழகத்திற்கு 40 கோடி மானியம் எனவும், இயற்கை வளங்கள் பாதிக்கப்படாது எனவும், விவசாயம் பாதிக்கப்படாது எனவும் சூட்சகமான அரசியல் ஆதாய கருத்துக்களை சொல்லும் அரசியல்வாதிகள் இந்த தமிழ் இளைஞரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டும்.
பிரேம் சமூக வலைத்தளம் வழியாக அறிவியல் அடிப்படைகளை எளிய தமிழ் மூலம் தமிழ் மாணவர்களுக்கு கற்பித்து வருபவர். அவருடைய சமீபத்திய அறிவியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த முயற்சி மிகவும் பாராட்ட தகுந்தவை.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக இவர் விகடனில் அளித்த பேட்டியில், குப்பையில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் நன்மை மிகுந்த இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஒரு மாற்று திட்டத்தை முன்வைத்துள்ளார்.
நாடுகள் பல இம்மாற்று திட்டத்தை செயல்படுத்தியது பற்றியும் இந்தியாவில் இதனை செல்படுத்தும் சாத்தியத்தை பற்றியம் மாற்று திட்டத்தின் அமைப்பு வரைபடத்தையும்
அவர் அளித்துள்ளார். முக்கியமாக மாற்று திட்டம் மூலம் தற்போதைய முறையை விட அதிகமான ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியும் எனவும் விளக்கியுள்ளார். சாண உரமும் இதற்க்கு பயன்படுத்த முடியும் என வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகளுக்கு கேட்க்கும் கேள்வி என்னவென்றால் உலக நாடுகள் பல இத்திட்டத்தை செயல்படுத்தி பல தீங்கான விளைவுகளை சந்தித்து பின்னர் குப்பை மூலமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முறையை கையாண்டு வருகின்றனர். இந்த உண்மை உங்களுக்கு எப்போது தான் புரியும்??? உண்மையில் நீங்கள் மக்கள் நன்மைக்கு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளா அல்ல கட்சி விளம்பரத்திற்கும் மற்றும் பெருநிறுவன முதலாளிகளிக்கு பாடுபடும் வேலையாட்களா???
– ஷியாம்.
நன்றி விகடன்.
www.vikatan.com/news/miscellaneous/82496-we-support-hydro-carbon-project---says-a-tamil-youth.html