என் மின்மினி தொடர்கதை (பாகம் – 63)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-63
En minmini thodar kadhai
அவனோ கண்களை இறுக மூடியவாறே வாயில் எதையோ முனுமுனுத்தபடி தனக்கு வேண்டியதை வேண்டிக்கொண்டிருக்க அவளோ எதையும் பொருட்படுத்தாமல் கூப்பிய கைகளை கீழிறக்காமல் கண்களை அகல விழித்தபடி அவனையே உற்றுப்பார்த்து கொண்டிருந்தாள்…
சில வினாடிகளுக்கு பின் தனக்கு வேண்டியதை எல்லாம் தெய்வத்திடம் முறையிட்டு வேண்டிக்கொண்ட பின் மெதுவாக கண்களை திறந்து எதிரினில் நின்ற அவளை பார்த்து அவனையும் அறியாமல் அவனுக்கு சிரிப்பு வந்தது…
ஹே என்ன பண்ற??? சாமி கும்பிட சொன்னா என்னைப்பார்த்து கும்பிட்டு நின்னுகிட்டு இருக்கே என்றான் பிரஜின்…
அதெல்லாம் ஒண்ணும் இல்ல…சின்ன வயசுல அப்பா,அம்மா,தம்பி கூட கோயிலுக்கு போனது…அதுக்கு அப்புறம் போகவே இல்ல… அவங்க இறந்து போன பிறகு அனாதையான என்னை ஆதரித்து,படிக்க வைத்த ஆசிரம வளாகத்தின் சர்ச்க்கு போவது தான் வழக்கமாகி போச்சு…நாளடைவில் அதுவே பழகியும் போச்சு…கொஞ்சம் நாளில் நானே விருப்பப்பட்டு என்னோட பெயரையும் மாற்றிக்கொண்டேன்…
இப்போ நான் ஏஞ்சலின் கிறிஸ்டி… அதுமட்டுமில்லாது அப்பா,அம்மா போன பிறகு எனக்குன்னு சாமிக்கிட்டே கேட்க என்ன இருக்கு.அதனால் தான் நான் பேசாம உன்னையே பார்த்து நின்னுகிட்டு இருந்தேன் என்றபடி லேசாக புன்முறுவல் செய்தாள் ஏஞ்சலின்…
கேட்குறேன்னு தவறாக நினைக்க வேண்டாம்.அப்பா, அம்மா போன பிறகு சாமிக்கிட்டே கேட்க என்ன இருக்குன்னு சொல்லிட்டு சர்ச்க்கு மட்டும் ஏன் போகணும்??? அங்கேயும் சாமிதானே இருக்காங்க.எந்த சாமியும் வேணான்னு இருக்க வேண்டியது தானே என்றான் பிரஜின்…
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை… யாருமில்லாமல் தனியாக கிடந்த எனக்கு அங்க கிடைச்ச ஒரே மருந்து பிராத்தனை. அவ்வளவே தான்.அங்கே எனக்கு அந்த சாமி இந்த சாமின்னு எனக்கு பிரிச்சு பார்க்க எனக்கு தெரியல…
ஆனா இதை நீ வேறு மாதிரி பேசற மாதிரி தோணுது என்றாள் ஏஞ்சலின்…
ஹே…அப்படியெல்லாம் நான் ஏதும் சொல்லல…ஏன்னா நானும் ஒரு மதத்தில் பிறந்து இன்னொரு மதத்தில் வளர்ந்தவன் தான்… அதனால் எனக்கு எந்த மதமும் என் மதம் தான் என்ற கொள்கை கொண்டவன் நான் என்றான் பிரஜின்… அவன் சொல்வதை கேட்ட ஏஞ்சலின் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நின்றாள்…. – என் மின்மினி தொடர்கதை பாகம்-63
பாகம் 64-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)