கேப்பை பூரி செய்முறை

மீண்டும் ஒரு ஊரடங்கில் வீட்டிற்குள் அடங்கியுள்ளோம். இத்தருணத்தில் சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்யலாம் என்று தோன்றியது. அதன்பொருட்டு உருவானது தான் கேப்பை பூரி – keppai poori ragi recipes.

keppai poori ragi recipes

வழக்கமாக கோதுமை, மைதா போன்வற்றில் செய்திருப்போம். அதிலும் பீட்ரூட் , புதினா இலை எல்லாம் சேர்த்து கலர் கலர் பூரியும் செய்து அசத்தியிருப்பீர்கள். இதோ இங்கு கேப்பை மாவில் ஒரு சிறு முயற்சி.

தேவையான பொருட்கள்

  1. கேப்பை மாவு – 2 கப்
  2. ரவை – ஒரு தேக்கரண்டி
  3. மைதா – 2 தேக்கரண்டி
  4. உப்பு – தேவைக்கேற்ப
  5. எண்ணெய் – பொரித்தெடுக்க

செய்முறை

ரவை, மைதா, உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து ஊறவைக்கவும். பிறகுகேப்பை மாவை அதனுடன் சேர்த்து ஒன்றாக பிசைந்துகொள்ளவும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிதளவு தெளித்து பிசைந்து பூரி மாவு பதத்திற்கு வந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக்கி பூரி கட்டையால் திரட்டி எடுக்கவும் மெல்லியதாக தேய்க்காமல் சற்று கனமாக இருக்க வேண்டும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.கனமாக இருப்பதால் பூரி உப்பலாக நன்கு
எழுந்து வரும்.இரண்டு பக்கமும் நன்கு வெந்தது தெரிந்தவுடன் எடுக்கவும். உருளைக்கிழங்கு மசால் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு : கேப்பை உடல் ஆரோக்கித்திற்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் கால்சியம் தருகிறது. இதனுடன் ஒரு கைப்பிடி முருங்கை இலைகளையும் சேர்க்கலாம் – keppai poori ragi recipes.

– ஏஞ்சலின் கமலா மதுரை

You may also like...