கவிதை தொகுப்பு 60

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “அவிநாசி சோமு சாவித்திரி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 60

kavithai neerodai kavithai thoguppu

சேவை தேவை சேவை

உலக நன்மைக்கு உள்ளம் மகிழ்ந்து செய்சேவை..
உண்மை வளர்த்திட உரிமையோடு செய்சேவை
கடமை நெஞ்சிலே கனிவாய் செய் சேவை
காலத்தின் வீட்டிலே கணக்கிட்டு செய் சேவை
இல்லறம் எங்கும் இனித்திட செய் சேவை
சொல்லறம் கூட செந்தமிழில் தானே சேவை
உள்ளங்கள் மகிழ்ந்திட உதவிட செய் சேவை
ஒற்றுமை வளர்க்க ஒழுக்கமே சேவை
கொடுமையை அளித்திட கோடாலியால் வேண்டும் சேவை
சேவைக்கு தேவை சேவை
காதலுக்கு கண்களின் பார்வை சேவை
பூக்களுக்குத் தென்றல் சேவை
வண்டுக்கு மழை தரும் தேன் சேவை
மனிதனுக்கு மனிதன் மாறாமல் வாழ்வது சேவை
நாட்டுக்காக ரத்தம் விட்ட தியாகிகளில் பணியும் சேவை
சுதந்திரம் காண அடிபட்டு மிதிபட்டு
இறந்த ஆனந்தமும் சேவை
வான்மழை கிட்டு இயற்கையை ரசிப்பது நீரின் சேவை
நீ இடி விழுந்து நிலம் தாங்குவதும் சேவை
யார் அடிபட்டாலும் உயிர்வாழ்வது வாழ்க்கைக்கு சேவையை
கூறு கெட்டுப் போகாமல்
பேர் எடுக்கும் புகழும் சேவை
நம்மால் தானே நாட்டுக்கு சேவை
சேவை தேவை சேவை..


உன் விழிகள் பேசும் மொழிகளே.

விழியால் கண்டு என்னவென்று
எனக்குள் எழுந்த கேள்வியை
விளக்கம் கேட்டு இமை மூட வில்லை
சுழல் காற்றும் சுற்றி தூற்றிய தூசில்
புண்ணானது கண். அப்போதும். உன்
புன்னகையைத் தான் ரசித்தது.
எனது கண்..
ஓடாதே மானைப் போலே
வாடுகிறேன் நான் மலரைப் போலே..
முகத்தில் இதழ்முத்தம் என்பதை
முழுவதும் பதி
நெஞ்சில் காதல்
நெருக்கத்திலே கிடைக்கட்டும் நிம்மதியே….


மெல்லப்பேசு

என்னவள் காதல் எழுதுகிறேன் கடிதம்.
செந்தமிழ் நெஞ்சில்
சொன்னால் விழியில் கேளாத செவிகள்
இனித்தது மனதில்.
எண்ணங்கள் என்ன என்னிடம் சொல்
வண்ணத்துப்பூச்சியாய் வருவேன் மலரே.
தேன் மலரில் உண்டு தேவை இல்லை என்று
தென்றலில் பறக்கும்
வண்டுயில்லை நானே
வாழ்க்கையில் இணைத்து
வாழ்ந்து வருவேன் நினைத்து.
அல்ல வருவாயா
மெல்ல அருகிலே
சொல்ல வருவாயா
சொந்தம் நீயே….


வானம் கருத்தது

நீலவானம் அங்கே
நிறம் மாறியது மேகம் கண்ணே

இயற்கை இங்கே
இன்பத் தென்றலில் பெண்ணே..

முத்துச் சரமே நில்லு
நட்சத்திரங்கள் காணவில்லை

விழியழகி இன்ப
விச்சித்திரமே
தமிழ் வழங்கி
தழுவிக்கொள்ள டி.

பிறந்த வீடு
பிரியமே உனக்கு
புரிந்தது மனகூடு
பூமியில் நீ எனக்கு..

தந்தேன் மனம் உனக்கு
தாரம் நீ எனக்கு
வாழ்க்கை இருவருக்கு வாழத்தானே இருக்கு..

ஏற்ற வா விளக்கு
விழியில் எதற்கு வழக்கு.
விடியல் என்பது கிழக்கு உன் மடியில் எனது உயிர் இருக்கு…
கருத்த மேகமே
கனம் மழையே
காய்ந்த நிலமே காத்திருக்கு
பாய்ந்திடும் நீரே மழையென விழு


அணைந்த தீபம்

ஒளிவிளக்கு இங்கே
ஒளி இறந்ததும் ஏனோ..
புயலும் வந்ததோ மலரும் புன்னகை உதிர்ந்ததோ…

வாழ்க்கை என்னும் வரவில் கண்டேன்
மங்கை என்னும் உறவு மகிழ்ந்தேன்
இரவில் வைத்தான் இறைவன் ஏனோ.

தூர மேடையிலே
துணிந்து போகும் நிலவே
துணையில்லா எனது வாழ்வே
தூண்டில் மீனே..

தாங்கும் விழுது இல்லை என்றால்
ஆலமரம் எப்படி ஆனந்தம் கொள்ளும்
அன்பே நீ எங்கே அழுகின்ற விழிகள் தேடுது இங்கே….

கைபிடித்த நாள் முதல் காலத்தை வென்றேன்..
நீயும் கண்மூடி உறங்கி விட்டாள் நான் என்ன செய்வேன்..

மூக்கில் வாங்கும் காற்று இது முடியும் வரை பயணம்.
பல்லாக்கில் ஏறும்பொழுது பார்த்த கண்கள் எல்லாம் ஈரம்…

நீ ஏற்றிய ஒளிவிளக்கு
நெஞ்சுக்குள் பல நினைவும்
அத்தனைக்கும் இரவு
அடுத்த பிறவியும் வேண்டும் உன் உறவு..


அன்பின் இருப்பிடமே

முகமலர்ச்சி இன்பம் ஆகுமே
இதழ் மகிழ்ச்சி புன்னகை ஆகுமே
இவை உயர்ந்த உள்ளத்துக்கு உறவாகுமே.

ஒரு மனம்
ஒழுக்கம் ஆகுமே

பண்பாட்டுச் சின்னம் ஆகுமே
பாசத்தின் எண்ணமாகுமே

கொடுத்து உதவும் கொள்கையாகுமே

சிந்தித்து இணைவதே
சிறப்பான வாழ்க்கையாகுமே

எதையும் அளவோடு சேர்ப்பது வளமுடன் வாழவே…

இயற்கையை காப்போம்

கருணை நம்மிடம் உள்ளது
காற்றை தூய்மையாக்க லாம்

இயற்கையை அழித்து விட்டால் வேதனை தான் உள்ளது

வனங்கள் எல்லாம் அழகு
வாழுகின்ற மிருகங்கள் உறவு

விரட்டிவிட்டு வீடுகள் கட்டுவதா சிறப்பு

நம்மை நாம் நினைப்பதில்லை
நம்மையும் நாம் காணும்..

இயற்கையோடு பழகி
வாழ்க்கையை தொடங்கி

தாய்போல் அன்பு வைத்து
நோய் நோயில்லா வாழ்வு

இயற்கை வளத்தோடு வாழ்வோமே நலத்தோடு…

துணிந்து செயல்படுவோம்
தூய்மையான நாடாக மாற்றுவோம்.

நல்ல குணங்களை வளர்ப்போம் உள்ள மரங்களைக் காப்போம்… – kavithai thoguppu 60

– கவிஞர் அவினாசி ஆர் சோமு சாவித்திரி

You may also like...

1 Response

  1. லோகநாயகி.சு says:

    வாழ்த்துகள்ங்க சகோதரரே….