கவிதை தொகுப்பு 64
கவிஞர் தாரா சேலம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 64
குடியரசு தினம்
தாய்க்கு தலைமகன்
என் இந்தியா நாட்டின் குடிமகன்
தேசத்திற்காக போராடியா வீரமகன்
விடுதலை பெற்ற வெற்றி மகன்
வெள்ளையனே வெளியேறு
விடுதலையை நீ கொண்டாடு
அகிம்சை வழியில் போராடு
மகாத்மா காந்தியின் துணையோடு
சாதிகளை மறந்திடு அம்பேத்கர்ரை
நினைத்திடு
கொடி காத்த குமரனாய் வாழ்ந்திடு
பல தலைவர்களின் தியாகத்தை
மதித்திடு
குடியரசு தினத்தில் உறுதி எடு
நாட்டுக்காக நீ உழைத்திடு
தாய் நாட்டை காதலித்திடு
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
காதல் தருணங்கள்
காலம் நேரம் செல்ல காதல்
திருமணம்மாக
இரு குடும்பம் ஒன்றாக இணையா
வெக்கத்தில் முகம் சிவக்க
கொலூசு ஈடும் ஓசையை கேட்கா
மனதில் இருக்கும் காதலை சொல்ல
மௌணமாக கண்கள் பேச
புதிதாக அவளை பார்க்க
அந்த இனிய தருணம் வாழ்வில்
நினைக்காக
தெய்வங்கள் எங்களை ஆசீவாதிக்கா
தேவதைக்கள் வந்து வாழ்த்து
சொல்ல
இதயங்களில் ஆனந்தம் பெருக
காதல் தென்றல் காற்று
ஜன்னல் கண்ணாடியை தட்டும்
தென்றல் காற்று
என் இதயத்தின் கதவை தட்டும்
அவள் காதல் பாட்டு
என்னை தொட்டு தொட்டு செல்லும்
அவள் மூச்சு காற்று
விட்டு விட்டு துடிக்கும் என் இதய
துடிப்பு
பார்த்து ரசிக்கிறேன் அவள் காதல்
பேச்சு
பாசத்தை கட்டும் அவள் அன்பின்
உற்று
பாவை நிலவே வா என் வாசல்
பார்த்து
நான் வாழ்கிறேன் உன் இதயகூட்டில்
காலம் எல்லாம் வாழ்வேன் அவளை
நேசித்து
வசந்தமே என்னை காதலித்தது – kavithai thoguppu 64
காதல் முதல் முறை
மாலை நேரம் உன் பார்வையில்
நானும்
நீ போகும் தூரம் உன் பின்னால்
நானும்
அவளும் நானும் சாலை ஒரம்
அழகான பயணம் என் காதல் தடயம்
இரு இதயம் ஒன்றான தருணம்
காதல் கடிதம் காற்றில் செல்லும்
என் கனவுகள் முன்னால் தோன்றும்
அவள் சிறு புன்னகை ஆயிரம்
வார்த்தை பேசும்
அமைதியாக என் மனம் அவளை
ரசிக்கும்
ஆனந்தம்மான வாழ்க்கை
அவளுடன் வாழ இதயம் துடிக்கும்
காதல் கண்கள் பேசியதே
கண்களினால் உன்னிடம்
பேசுகிறேன்
அழகான இரவை ரசிக்கிறேன்
கவிதைகளை மனதில் படிக்கிறேன்
உன் தூக்கம் கலையாமல் தூரத்தில்
இருந்து நேசிக்கிறேன்
உன்னை நினைத்தலே மார்கழி
மாதத்து குளிரில் உறைகிறேன்
புதிதாக உன்னை தினம் தினம்
பார்க்கிறேன்
இது கனவா நினைவா என
யோசிக்கிறேன்
காதல் மழை பொழிய நான்
காத்திருக்கிறேன்
உன் இதயத்தில் வாழ
ஆசைப்படுகிறேன்
சத்தியமாக நான் உன்னை
காதலிக்கிறேன்.
கண்கள் உறக்கும் போது கனவுகள்
பிறக்கும் அழ்மனதில் இருக்கும்
ஆசைகள் மாயகண்ணாடியில்
ஒவ்வொன்றாக காட்டும் மனம்
றெக்கை காட்டி பறக்கும் நடக்கும்
நிகழ்வுகளை முன் கூட்டியே
சொல்லும் நாம் செல்லும்
பாதையின் அடிதளமாய் அமையும்
சிறகடிக்கும் வண்ண கனவுகள்
உன் வெற்றிக்கு வழிவகுக்கும்
உன் லட்சியத்திற்கு உயிர் கொடு
புது பாதையை அமைதிடு
உன் எண்ணங்களை உயர்த்திடு
வரும் தடைகளை தகர்த்திடு
தலைநிமிர்ந்து வாழ்ந்திடு
வெற்றியை நீ தொடு
சிறகடிக்கும் வண்ண
கனவுகள்ளோடு நீ பறந்திடு
சரித்திரத்தில் உன் பெயரை பதித்திடு
– தாரா, சேலம்