அகத்தியர் சித்தர்
18 சித்தர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அகத்தியர் (அகஸ்தியர்) பற்றி இந்த பதிவில் வாசிப்போம் – agathiyar siddhar
அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் குறிப்பிடப்படுகிறார். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால் வடதிசை சமநிலை இல்லாமல் கீழே செல்லும் என்பதால் இவர் தென்திசைக்கு பயணப்பட்டு பொதிகை மலைச்சாரலில் தங்கி அதை சமன்செய்ததார்.
அகத்தியம் இயற்றியவர்
பொதிகை மலையில் சிவபெருமானை பூசித்தும், தவமியற்றியும் வந்தார். பின்னர் சுந்தரனார், யோகமுனி, கொங்கணர் ஆகியோரை சந்தித்து அவர்களின் ஆசிரமத்தில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து பூசித்து தன காண இயலாமல் போன சிவபெருமானின் திருமணக்கோலத்தை கண்டு மகிழ்ந்தார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றார் என்றும் “அகத்தியம்” எனும் முதல் தமிழிலக்கண நூலை இயற்றினார் என்றும் வரலாறு உரைக்கிறது.
அகத்தியருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள்
தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
மாதவ முனிவர், மாமுனி (மாதவம் செய்ததால்)
குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)
திருமுனி (உயர்வுக்குரியவர்)
முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
பொதியில் முனிவர் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
குடமுனி (குடத்தில் பிறந்தவர் என்பதால்) – agathiyar siddhar
பல துறைகளில் வல்லவர்
சுந்தரானந்தர் விருப்பப்படி தான் பூசித்த சிவலிங்கத்தை அவருக்குப் பரிசளித்தார், பின்னர் அகத்தியர் சதுரகிரியின் பக்கத்தில் உள்ள மலையில் தவம் புரிந்து வந்ததால் அது “கும்ப மலை” என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. பேரகத்தியம், சிற்றகத்தியம் என்ற நூல்கள் வழியாக முத்தமிழ் பரப்பியதால் “தமிழ் முனி” என்று அழைக்கப்பட்டார். இவர் வெளியிட்ட குறிப்புகள் இன்றும் “அகத்திய நாடி” எனும் பெயரால் அறியப்படுகிறது. ஜோதிடம், சித்த வைத்தியம், ஞானம் என பல துறைகளில் வல்லவராக திகழ்ந்தார். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றவர்.
அகத்தியரின் மாணவர்கள்
அதங்கோட்டு ஆசான்
துராலிங்கன்
செம்பூண்சேய்
வையாபிகன்
வாய்ப்பிகன்
பனம்பாரன்
கழாரம்பமன்
அநவிநயன்
பெரிய காக்கைபாடினி
நத்தத்தர்
சிகண்டி
தொல்காப்பியர்
அகத்தியர் மக்களுக்கு கூறிய செய்திகள்
1. பூமியில் உத்தமராய் இருக்கப் பழகுங்கள், சரியான தருணத்தில் பயிர் செய்வது போல, மனதை பண்படுத்துங்கள்.
2. இறைவன் ஒருவன் உண்மையே உயர்ந்தது. நித்திய கருமங்களை ஒழுங்காகச் செய்து வாருங்கள். புத்தியோடு செயல்படுங்கள் அதனை மதவாத தாக்கத்திற்கு பயன்படுத்தாதீர்கள் – agathiyar siddhar.
3. உடலை நம்பி இருப்பவர்கள் தான் வேதங்களையும், நூல்களையும் நம்புகின்றனர்.
4. யோகி – எவன் பரமாத்மாவை சேர்ந்தபின் தன் மனதால் வேறு எதையும் நினைக்காமல் இருக்கிறானோ அவனே யோகி
அருமையான கருத்துகள்… மிக ஆர்வமுடன் மேலும் தெரிந்துகொள்ள
வாழ்க வளமுடன். சித்தர் வாசம் சிறப்பு…
அகத்திய மாமுனி பற்றிய அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அருமையான பதிவிற்கு நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அகத்தியர் பற்றிய தகவல்கள் நன்றி