கவிதைகள் தொகுப்பு 27

இந்த வார கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் நேசம் அவர்களை அறிமுகம் செய்கிறோம். மரபுக்கவிஞர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “கண்ணெதிரே தோன்றினாள்” மற்றும் கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “அகநாத நினைவு” கவிதைகள் அழகு சேர்க்கிறது – kavithai thoguppu 27.

kavithai thoguppu 27

அகநாத நினைவு

நான் விடைபெறலாமா..?
களியாட்டத்தில் வென்ற
மானுடனாய்..
காத்திருப்பில் நிவர்ந்த
காதலனாய்..
மனதோடு ஒன்றி
உடலோடு விலகும்
காத்திருப்போனாய்…
என்றும் நிறைந்த
உன் புன்னகை மறந்து
நினைவுச் செங்“கமலத்தோடு”
சற்றே நான் விடைபெறலாமா..?

– பொய்யாமொழி.பொ, தருமபுரி


கண்ணெதிரே தோன்றினாள்

எதிரெதிர்
துருவங்களில்
பயணித்து
கொண்டிருக்கிறோம்…

எலியும் பூனையுமாய்
சண்டையிட்டு
பிரிந்த பின்னால்….

வசீகர காதலால்
வசிய
படுத்தியவள்…

திரும்பி பார்க்க
நேரமில்லாமல்
திசைமாறி
பயணிக்கிறாள்…

திறக்க முடியாத
சவ பெட்டியாய்
இறுகி கிடக்கிறது….

இதயம் ஏதோ
ஒரு வலியை
சுமந்து….

நீ இல்லாமல்
நானில்லை
என்றவள்…

தீ இல்லாமல்
சுட்டு போகிறாள்…
தீராத
கோபத்தில்….

மன்னிப்பு கேட்க
மலர் கொத்தோடு
பயணிக்கையில்…

கண்ணெதிரே
தோன்றினாள்
அவள்….
கல்யாண பத்திரிக்கையோடு
சிறுக கட்டிய
காதல் கோட்டை
கரைந்தே போனது
கண்ணீரில்…

நாளும் அவளும்
கடந்து வந்த
தடங்களை
அழித்து… – kavithai thoguppu 27

– குடைக்குள் மழை சலீம்


மரண சாசனம்

இழப்பதற்கு
ஒன்றுமில்லையென
ஆனபின்..

அந்த கடைசி சொட்டு
கண்ணீரும்
பேருந்து சாளர ஓர
கையசைப்பும் எதற்கு ?

உனை நினைத்தே
நாட்கள் கடத்தவா ?
மரண சாசனம்
வாசிக்கவா ?

மௌனித்த மரணத்தை
அசைத்த குரலது..
அண்ணே..அக்காவுக்கு
பூ.. வாங்கிட்டு போங்க..
பூ பிற்பாடு
பசிக்குது சாப்பிடலாம் வா
இது நான்..

– நேசம்

You may also like...

9 Responses

  1. பொய்யாமொழி says:

    இடம்பெற்ற கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் கவிஞர்களே.

  2. தி.வள்ளி says:

    முத்தாய் மூன்று கவிதைகள்.. அருமையான படைப்புகள்.. கவிகளுக்கு வாழ்த்துக்கள் ..

  3. Priyaprabhu says:

    கவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள் 💐💐

  4. Rajakumari says:

    கவிதை நன்றாக இருக்கிறது

  5. Anuradha Muthuraman says:

    Good.. well portrayed Priya.

  6. Anuradha Muthuraman says:

    Good.. Covid 19 is well portrayed Priya.

  7. ஜாகிர் உசேன் says:

    பொய்யாமொழி அவர்களின்
    அகநாத நினைவுகள் கவிதை
    அகத்தில் ஒரு நாதத்தை
    ஒலிக்கச் செய்கிறது
    சுகமான அந்த நாதத்தை
    திரும்பவும் கேட்க விரும்புவது போல் திரும்பவும் வாசிக்கத்தூண்டுகிறது

  8. ஜாகிர் உசேன் says:

    நினைவுகளின் சுமைகள்
    சிலது சுகமானவையாகவும் சுமையானதாகவும் இருக்கும்
    மரணித்தவர்களின் நினைவுகள்
    சுகமானமானதாகவே இருந்திடும்
    சில நேரங்களில் சுமையாகவும்
    எப்படி வெளிப்படும் என்பது
    இடங்களும் நிகழ்வுகளும் அதை
    தீர்மானிக்கிறது
    நேசம் அவர்களின் மரண சாசனம் கவிதையில் அப்படி ஒரு வேதனையான நேரம் வெளிப்படுகிறது

  9. ஜாகிர் உசேன் says:

    விடலைப் பருவங்களில் ஏற்படும் காதல் என்பது புரிதலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கவே வாய்ப்பு அதிகம்
    ஆனாலும் அந்தக் காதலிலும் வலிகள் என்பது
    வலிந்து வந்து சேர்ந்திடும்

    பலவிதமான எண்ணங்களில் சிறகில்லாமல் பறக்க வைக்கும்
    ஒரு சிறந்த அனுபவம்
    வலிகளும் தோல்விகளும் காதலுக்கும் காதலிப்பவர்களுக்கும் வாக்கப் பட்டவையாகும்

    அப்படி வாக்கப்பட்ட ஒரு கவிதை தான் குடைக்குள் மழை சலீம் அவர்களின்
    கண்ணெதிரே தோன்றினாள் கவிதை