ஆலு கிரீன்ஸ் சப்ஜி
சமையல் வல்லுநர் பிருந்தா ரமணி அவர்கள் வழங்கிய நவராத்திரி சிறப்பு சமையல் குறிப்பு “ஆலு கிரீன்ஸ் சப்ஜி” – aloo greens sabzi recipe.
தேவையானவை
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1
ஏதேனும் ஒரு கீரை – 1/4 கப் (வேக வைத்தது)
உப்பு – தேவையானது
பாசிப்பருப்பு – 1/4 கப் (வேக வைத்தது)
கறிவேப்பிலை – சிறிது
கடுகு, உ.பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
ஜீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பிறகு வேக விட்டு வைத்திருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகள், கீரையைப் போட்டு, அரைத்து வைத்திருக்கும் விழுது, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான ஆலு க்ரீன்ஸ் சப்ஜி ரெடி – aloo greens sabzi recipe.
இதைச் சப்பாத்தி, சாம்பார் சாதம் இவைகளுக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
– ஆர். பிருந்தா இரமணி , மதுரை
குழந்தைகளுக்கேற்ற விருந்துந்து
பிருந்தா ரமணியின்
ஆலுகீரீன்ஸ் சப்ஜி
மிகவும் நன்றாக உள்ளது சத்துக்கள் நிறைந்த சுவையான சுலபமான ரெசிபி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு நன்றி
அருமையான பயனுள்ள சமையல் மற்றும் குறிப்புகள்
வாழ்க வளமுடன் அருமையான சமையல் குறிப்பு
Iமிக அருமையான ரெசிபி..எளிதான செய்முறை..சகோதரிக்கு வாழ்த்துகள்
செய்முறை விளக்கம் படித்து முடித்தபின் செய்து புசித்தேன் சூப்பர்