அத்திப்பழ லட்டு
தேவையான பொருட்கள்: aththi pazha laddu
உலர்ந்த அத்திப்பழம் – 300 கிராம்
பேரீச்சம்பழம் – 100 கிராம்
உலர்ந்த திராட்சை – 50 கிராம்
வெள்ளை எள் – 50 கிராம்
முற்றிய தேங்காய் துருவல் – அரை கப்
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
செய்முறை.
* அத்திப்பழம், பேரீச்சம்பழம் திராட்சையை மிக்சியில் போட்டு அரையுங்கள்.
* எள், பெருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
* வாணலியில் தேங்காய் துருவலை போட்டு சிறு தீயில் வறுத்தெடுக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் கொட்டி சிறிய எலுமிச்சை பழ அளவில் உருட்டி சுவையுங்கள்.
* ஒரு வாரத்திற்கு மேல் இந்த லட்டுகளை வைத்திருக்க கூடாது
நன்மைகள்:
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்தி. ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். இது கர்ப்பிணிகள், பருவடைந்த பெண்கள், குழந்தைகளுக்கு நிறைந்த ஊட்டச்சத்தை தரும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.