அவல் கட்லட் – செய்முறை
இந்த வார சமையல் புதனில் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய எளிய செய்முறை கொண்ட மாலை சிற்றுண்டி “அவல் கட்லட்” செய்வது பற்றி வாசிப்போம் – aval cutlet.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – 100 கிராம்.
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2 நறுக்கியது
கறிவேப்பிலை – 1 கொத்து
கடலை மாவு – 2 சின்ன தேக்கரண்டி
உப்பு, சீரகம் – தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் – (தேவையான) அளவு.
செய்முறை
அவலை வெண்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணர் இன்றி வடித்து கலவை இயந்திரத்தில் உப்பு பச்சைமிளகாய் சீரகம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். அந்த கலவையை பாத்திரத்திற்கு மாற்றி அதில் கடலை மாவு சேர்த்து வெங்காயம் , கறிவேப் பிலை ஆகியவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். சிறுசிறு உருண்டை களாக்கி சற்று தடிமனாக தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து சற்று வெந்தபின் எடுக்கவும். இதனுடன் மல்லிச் சட்டினி அல்லது தக்காளி சட்னி சேர்த்து பரிமாறவும். ருசியுடன் ஆரோக்கியமும் கிடைக்கும் aval cutlet.
வெளியில் காசு செலவழித்து வாங்க வேண்டி அவசியமும் இருக்காது. முயற்சி செய்யவும்.
– ஏஞ்சலின் கமலா
ஆரோக்கியமான நல்ல உணவு..
அருமையான எளிமையான செயல்முறை அதுவும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் செய்வதற்கு எளிதான சத்தான சிற்றுண்டி வழங்கிய சகோதரி ஏஞ்சலின் கமலாவிற்கு வாழ்த்துக்கள் பல…
Thku valli mam.